10th தேர்வில் நடிகர் தனுஷின் இரண்டாவது மகன் மதிப்பெண் இவ்வளவா? இணையத்தில் வலம் வரும் மார்க் லிஸ்ட்!
சென்னை: சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ரிசல்ட் வெளியாகியிருக்கிறது. அதில் நடிகர் தனுஷின் இரண்டாவது மகன் லிங்கா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. அவருடைய மதிப்பெண் பட்டியல் என்று இணையத்தில் புகைப்படம் ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அதை நேரத்தில் அதிக மதிப்பெண் பெற்றதாக கூறப்படும் தனுஷின் இளைய மகன் லிங்காவிற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் நடிகர் தனுஷோ அவருடைய மனைவி ஐஸ்வர்யாவோ தன்னுடைய மகனின் மார்க் குறித்த தகவலை வெளியே தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் மொத்தம் 8,94,264 மாணவ மாணவியர்கள் பங்கேற்று இருந்தனர். இவர்களில் 8,18, 743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.55 ஆகும்.
அந்த வகையில் நடிகர் தனுஷ் 2004 ஆம் ஆண்டில் நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். அதில் யாத்ரா பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்த நிலையில் அதற்கான ரிசல்ட் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் யாத்ரா அதிக மதிப்பெண்கள் பெற்று இருந்ததாக கூறப்பட்டது. அதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனுஷின் இரண்டாவது மகன் லிங்கா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒட்டுமொத்த பத்தாம் வகுப்பு மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் எதிர்பார்த்தபடி இன்று மே பத்தாம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
அதில் தனுஷின் இரண்டாவது மகன் லிங்கா தமிழ் பாடத்தில் 88 மதிப்பெண்களும், இங்கிலீஷ் பாடத்தில் 90 மதிப்பெண்களும், கணிதத்தில் 96 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 99 மதிப்பெண்கள் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் 87 மதிப்பெண்களும் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் 500 மதிப்பெண்களுக்கு தனுஷின் மகன் லிங்கா 460 மதிப்பெண்கள் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் மற்றும் அவருடைய மனைவி ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்வதற்காக நீதிமன்றத்தை நாடி இருக்கும் நிலையில் மகன்கள் இருவருக்கும் பெற்றோரின் பிரிவு வருத்தத்தில் இருந்தாலும் பிள்ளைகள் இவ்வளவு மார்க் எடுத்திருக்கிறார்களே என்று பலர் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். ஆனாலும் இந்த தகவல் உறுதியானது தானா என்பது உறுதியாகவில்லை.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications