வாழ்நாளில் சிறந்த பரிசு.. அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய பிக் பாஸ் தினேஷ்.. பிரபலங்களின் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகர் தினேஷ் கோபால்சாமி புது கார் ஒன்று வாங்கி இருக்கிறார். அது குறித்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் அவருக்கு சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களை பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த தினேஷ் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரீட்சயமானவர் தான். எத்தனையோ சீரியல்களில் தினேஷ் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சியில் ஏழாவது சீசனில் போட்டியாளராக தினேஷ் கலந்து கொள்வார் என்று ஆரம்பத்தில் இருந்தே பேசப்பட்டது. ஆனால் தினேஷ் ஆரம்பத்தில் உள்ளே போகவில்லை. நிகழ்ச்சி தொடங்கிய சில வாரங்களுக்கு பிறகு தான் சென்றிருந்தார். அப்போதும் மக்கள் மத்தியில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து கடைசி நாள் வரைக்கும் அந்த நிகழ்ச்சியில் இருந்து மூன்றாவது ரன்னர் அப் ஆக தேர்வானார்.
தினேஷுக்கும் அவருடைய மனைவியான ரச்சிதா மகாலட்சுமிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் ரச்சிதாவோடு சேர்ந்து வாழ்வதற்காக தான் தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர்ராகவும் தினேஷால் ஜெயிக்க முடியவில்லை... அதே நேரத்தில் ரச்சிதாவின் மனதையும் தினேஷால் மாற்ற முடியவில்லை.

ரச்சிதா தொடர்ச்சியாக தினேஷ் மீது இருக்கும் கோபத்தையும் வெறுப்பையும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அடிக்கடி ஸ்டோரிகளில் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். அதனாலேயே தினேஷும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தானும் அவரை கட்டாயப்படுத்தி கஷ்டப்படுத்த விரும்பவில்லை என்று கூறிவிட்டார். அந்த நேரத்தில் தினேஷின் பெற்றோர் தன்னுடைய ஒரே மகன் அவருடைய மனைவியோடு மீண்டும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறியிருந்தனர்.

தன்னுடைய மகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதை பார்ப்பதுதான் எங்களுடைய சந்தோஷம் என்றும் கூறியிருந்தனர். ஆனாலும் ரச்சிதா தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து வருகிறார். சமீபத்தில் தினேஷ் புது கார் ஒன்று வழங்கி இருக்கிறார். அப்போது தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவோடு எடுத்த சில புகைப்படங்களை தினேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

Tata Harrier Dark Edition என்று காரை தான் தினேஷ் வாகி இருக்கிறார். எந்த காரின் விலை சுமார் 26 லட்சம் என்று சொல்லப்படுகிறது. இந்த கார் வாங்கிய மகிழ்ச்சியை தினேஷ் தன்னுடைய instagram பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார்.

அதோடு, "உங்கள் வாழ்நாளில் நீங்கள் பெரும் சிறந்த பரிசு உங்கள் பெற்றோரின் ஆசிர்வாதங்கள் தான்" என்று அவர் கேப்ஷன் கொடுத்திருக்கும் நிலையில் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதிலும் சின்னத்திரை நடிகராக திரவியம், நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் பிரபலமான அர்ச்சனா போன்ற பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications