வயதான காலத்திலும் நடிப்பில் அசத்தும் ஜி.எம்.குமாரின் தெரியாத மறுபக்கம்..இவ்வளவு வேதனைகள் நிறைந்ததா??
சென்னை: வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் தனது திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கும் ஜி.எம் குமாரை பற்றிய பல செய்திகள் ரசிகர்களுக்கு வியப்பை கொடுத்திருக்கிறது.
பன்முகத் திறமை கொண்ட ஜி.எம் குமார் வயது ஆனாலும் தன்னுடைய திறமை குறையாது என்று நிரூபித்து வருகிறார்.

வயது தடையில்லை
திறமைக்கு எப்போதுமே வயது தடையில்லை என்பதை நிரூபித்து கொண்டிருப்பவர்களில் ஒருவராக ஜி.எம் குமார் இருந்துவருகிறார். வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தன்னுடைய நடிப்பு பயணத்தை சிறப்பாக மேற்கொண்டு தனது தனித்துவமான நடிப்பை உலகிற்கே வெளிக்காட்டி கொண்டிருக்கிறார். இவருடைய திறமைகள் பலருக்கும் தெரியாத வகையில்தான் இருந்துவருகிறது. திரைப்படங்களில் இவருக்கு பெயரும் புகழும் வாங்கிக் கொடுத்தது அவன் இவன் திரைப்படம் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. ஆரம்ப கட்டத்தில் முதல் முறையாக ஜி.எம் குமார் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த அறுவடை நாள் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.

இயக்குனராக அடைந்த துயரங்கள்
ஜி.எம் குமாருக்கு எப்போதுமே இளையராஜா மீது தனி மரியாதை இருந்துள்ளது. அதனால்தான் இவர் முதல் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் அடுத்தடுத்து வந்த வாய்ப்புகளில் இளையராஜாவின் இசை அமைப்புகளை நிராகரிக்க விரும்பாத தயாரிப்பாளர்களின் படங்கள் பலவற்றை நிராகரித்துள்ளார். அதனாலே இவருடைய மார்க்கெட் சரியத் தொடங்கி இருக்கிறது. முதல் வெற்றிக்கு பிறகு மூன்று திரைப்படங்களை மட்டுமே இவர் இயக்கியிருக்கிறார். ஜி.எம் குமார் இயக்கி தயாரித்த உருவம் திரைப்படம் இவரை திவால் நிலைக்கு தள்ளியுள்ளது. பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சந்திக்கும் பிரச்சனைகளை இவரும் இந்த உருவம் திரைப்படத்தின் மூலமாக சந்தித்து விரக்தி அடைந்து உள்ளார்.

பெயர் வாங்கிய நடிப்பு
இனி தமக்கு தயாரிப்பு வேண்டாமென்று நடிப்பில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். பாரதிராஜாவின் கேப்டன் மகள் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் இவர் நடித்துக் கொண்டிருந்தாலும் குறும்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகமாக இருந்திருக்கிறார். இதனால் 2000களில் மீண்டும் பண நெருக்கடியில் இவர் சிக்கித் தவித்து இருக்கிறார். அந்த நேரத்தில்த அவன் இவன் திரைப்படத்தில் ஹைனஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க பாலா இவரை தொடர்பு கொண்டிருக்கிறார். யாரும் எதிர்பாராத வகையில் தன்னுடைய நடிப்பை இந்த கேரக்டரில் வெளிக்காட்டி சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதுக்காக பரிந்துரை பெற்றிருக்கிறது .

இது ஒன்றுதான் ஆறுதல்
ஜி.எம் குமார் பல திரைப் படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு சின்னத்திரைகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து கொண்டிருக்கிறது. 2017 ஆம் ஆண்டு வெளியான தேவதையை கண்டேன் என்னும் சீரியலில் வாசுதேவனின் தாத்தாவாகவும், பூவே உனக்காக சீரியலில் சங்கரலிங்கம் ஆகவும் நடித்துக்கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலில் ஆதிகடவூர் பரமேஸ்வரர் ஆகவும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். எவ்வளவு துயரமான காலங்களை கடந்து வந்தாலும் தனக்கு நடிப்பு மட்டும் விட்டு விலகாது என்பதை அனைவருக்கும் விளக்கியுள்ளார். பலமுறை இவர் திரைத்துறையினால் திவாலாகி சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு இருந்தாலும் இவருக்கு நடிப்பு ஒன்று தான் உதவி வருவதாக கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications