அம்மா போட்டோவை வெளியிட்டு கௌதம் கார்த்திக் வெளியிட்ட பதிவு.. மஞ்சுமா கமெண்டில் இப்படி சொல்லிட்டாங்க
சென்னை: நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தன்னுடைய அம்மா ராகினி போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொடுத்த கேப்ஷனுக்கு கௌதம் கார்த்திக் மனைவியான மஞ்சுமா மோகன் யாரும் எதிர்பார்க்காத கமெண்ட் கொடுத்து இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.
சினிமா துறையில் ஆகா ஓகோ என்று ஜொலித்த பல பிரபலங்களின் வாரிசுகள் தங்களுடைய பெற்றோர்களின் இடத்தை அடைவதற்கு பெரும் போராட்டத்தை அடைந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அந்த வாரிசுகளுக்கு அதிகமான திறமைகள் இருந்தாலும் அவர்கள் இவங்களுடைய மகன்தானே அல்லது மகள்தானே என்று ரசிகர்கள் மத்தியில் வித்தியாசமாக பார்க்கப்படுகிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் கார்த்திக்கின் மகானான கௌதம் கார்த்திக்.

கௌதம் கார்த்திக்கும் தன்னுடைய திறமையை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கிறார். நடிகர் கார்த்திக் மற்றும் அவருடைய முதல் மனைவி ராகினிக்கு பிறந்தவர்தான் கௌதம் கார்த்திக். கௌதம் உடைய ஒன்பதாவது வயதிலேயே அவருடைய பெற்றோர்கள் பிரிந்து விட்டனர். பிறகு அவர் ஊட்டியில் தன்னுடைய அம்மாவோடு தான் வளர்ந்து வந்தார். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தன்னுடைய அப்பாவை தான் சந்தித்ததாக பேட்டியில் பேசியிருக்கிறார்.
அந்த நிலையில் தயாரிப்பாளர் மணிரத்தினம் முயற்சியால் கடல் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராதாவின் மகளும் நடித்திருந்தார். அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் கௌதம் கார்த்திக் நடித்து வருகிறார். அதிலும் தேவராட்டம், 1947 போன்ற படங்கள் கௌதம் கார்த்திக்கு நடிப்பின் இன்னொரு முகத்தை காட்டியது. அதிலும் தேவராட்டம் திரைப்படத்தில் தன்னோடு நடித்த நடிகை மஞ்சுமா மோகனை 2022 ஆம் ஆண்டு கெளதம் கார்த்திக் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுடைய காதல் செய்திகள் அந்த நேரத்தில் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது. திருமணத்திற்கு பிறகு அடிக்கடி போட்டோ சூட் நடத்தி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா வெளியீட்டு வருகிறார்கள். அதிலும் மஞ்சுமா மோகன் உடல் எடை குறித்து சிலர் அவரை உருவ கேலி செய்து வந்த போதிலும் தன்னுடைய மனைவிக்கு பக்கபலமாக கௌதம் கார்த்திக் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் மஞ்சுமா மோகன் திருமணத்திற்கு பிறகு உடற்பயிற்சி மற்றும் டயட் மூலமாக தன்னுடைய உடல் எடையை குறைத்து லேட்டஸ்ட் ஆக வெளியிட்ட புகைப்படங்கள் அதிக அளவில் லைக்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் கௌதம் கார்த்திக் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது வேறு ஒன்றும் இல்லை அவருடைய அம்மா ராகினியின் புகைப்படம் தான்.
தன்னுடைய அம்மா குறித்து பல பேட்டிகளில் கௌதம் கார்த்திக் நெகழ்ச்சியோடு பேசி இருக்கிறார். ஆனாலும் இன்று தன்னுடைய அம்மா புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு கேப்ஷனாக "என்னுடைய அம்மா அடிக்கடி நான் அவருடைய தலையில் ஏறி உட்கார்ந்து கொள்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை உறுதி செய்யும் வகை தான் இருந்த புகைப்படம்" என்று தன்னுடைய அம்மாவின் தலையில் தன்னுடைய தலையை வைத்தபடி அவர் போட்டோ போஸ்ட் போட்டிருக்கிறார்.
இதற்கு மஞ்சிமா மோகன் "ஆமாம் அது உண்மைதான்" என்று கமெண்ட் கொடுத்திருக்கும் நிலையில் அதற்கு கௌதம் கார்த்திக் சிரிக்கிற இமோஜியை பதிலாக கொடுத்திருக்கிறார். இந்த பதிவு இப்போது இணையத்தில் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது. சின்னதிறையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஜோடி தான் இப்படி அவர்கள் போடும் போஸ்டுகளுக்கு மாறி மாறி லைக் மற்றும் கமெண்ட்கள் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இப்போது கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமாவும் அது போலவே கலகலப்பாக கொடுத்து இருக்கும் கமெண்ட்களும் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications