3500 கிலோ மீட்டர்.. முன்னாள் காதலிக்காக ஜி.எம் குமார் செய்த செயல்.. இவர் மனைவி எந்த நடிகை தெரியுமா?
சென்னை: நடிகர் ஜி.எம் குமார் தன்னுடைய முன்னாள் காதலியை பார்ப்பதற்காக தான் 3500 கிலோ மீட்டர் பயணம் செய்ததாக பகிர்ந்து உள்ள புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் தன்னுடைய காதலியோடு ஒரு செல்பி புகைப்படம் எடுப்பதற்காக தான் தன்னந்தனியாக காரை ஓட்டி 3500 கிலோ மீட்டர் சென்று வந்ததாக கூறியிருக்கிறார்.
அதோடு ஜி.எம் குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன் காதலியை பார்ப்பதற்காக மெட்ராஸில் இருந்து பெங்களூர் வழியாக கோவா சென்று பின்பு பாம்பே சென்று மீண்டும் மெட்ராஸ் திரும்பியதாக குறிப்பிட்டு இருக்கிறார். அதோடு தன்னுடைய காதலியோடு எடுத்த புகைப்படத்தை அவர் பகிர்ந்து இருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் நீங்கள் வாரணம் ஆயிரம் சூர்யாவை மிஞ்சிட்டீங்களே என்று கூறி வருகின்றனர்.

அதுபோல இன்னொரு ரசிகர் நீங்க எங்களோட இன்ஸ்பிரேஷன் சார் என்று கூறி இருக்கிறார் இப்படியாக பல கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது. இதற்கு ஜி.எம் குமார் கடந்த 30 வருடங்களாக பாம்பேவிற்கு டிரைவிங் செய்து போய் வருகிறேன். நான் அவளுடன் டிரைவிங் பண்ணுவேன். ஆனால் இப்போது விதி மாறிவிட்டது அவளை பார்க்க தனியாக சென்றேன் என்று பதில் அளித்து இருக்கிறார்.
அதே நேரத்தில் திறமைக்கு எப்போதுமே வயது தடையில்லை என்பதை நிரூபித்து கொண்டிருப்பவர்களில் ஒருவராக ஜி.எம் குமார் இருந்துவருகிறார். வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தன்னுடைய நடிப்பு பயணத்தை சிறப்பாக மேற்கொண்டு தனது தனித்துவமான நடிப்பை உலகிற்கே வெளிக்காட்டி கொண்டிருக்கிறார்.
இவருடைய திறமைகள் பலருக்கும் தெரியாத வகையில்தான் இருந்துவருகிறது. திரைப்படங்களில் இவருக்கு பெயரும் புகழும் வாங்கிக் கொடுத்தது அவன் இவன் திரைப்படம் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. ஆரம்ப கட்டத்தில் முதல் முறையாக ஜி.எம் குமார் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த அறுவடை நாள் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.
ஜி.எம் குமாருக்கு எப்போதுமே இளையராஜா மீது தனி மரியாதை இருந்துள்ளது. அதனால்தான் இவர் முதல் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் அடுத்தடுத்து வந்த வாய்ப்புகளில் இளையராஜாவின் இசை அமைப்புகளை நிராகரிக்க விரும்பாத தயாரிப்பாளர்களின் படங்கள் பலவற்றை நிராகரித்துள்ளார்.
அதனாலே இவருடைய மார்க்கெட் சரியத் தொடங்கி இருக்கிறது. முதல் வெற்றிக்கு பிறகு மூன்று திரைப்படங்களை மட்டுமே இவர் இயக்கியிருக்கிறார். ஜி.எம் குமார் இயக்கி தயாரித்த உருவம் திரைப்படம் இவரை திவால் நிலைக்கு தள்ளியுள்ளது. பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சந்திக்கும் பிரச்சனைகளை இவரும் இந்த உருவம் திரைப்படத்தின் மூலமாக சந்தித்து விரக்தி அடைந்து உள்ளார்.
இனி தமக்கு தயாரிப்பு வேண்டாமென்று நடிப்பில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். பாரதிராஜாவின் கேப்டன் மகள் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் இவர் நடித்துக் கொண்டிருந்தாலும் குறும்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகமாக இருந்திருக்கிறார்.
இதனால் 2000களில் மீண்டும் பண நெருக்கடியில் இவர் சிக்கித் தவித்து இருக்கிறார். அந்த நேரத்தில்த அவன் இவன் திரைப்படத்தில் ஹைனஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க பாலா இவரை தொடர்பு கொண்டிருக்கிறார். யாரும் எதிர்பாராத வகையில் தன்னுடைய நடிப்பை இந்த கேரக்டரில் வெளிக்காட்டி சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதுக்காக பரிந்துரை பெற்றிருக்கிறது .
ஜி.எம் குமார் பல திரைப் படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு சின்னத்திரைகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து கொண்டிருக்கிறது. 2017 ஆம் ஆண்டு வெளியான தேவதையை கண்டேன் என்னும் சீரியலில் வாசுதேவனின் தாத்தாவாகவும், பூவே உனக்காக சீரியலில் சங்கரலிங்கம் ஆகவும் நடித்துக்கொண்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் ஆதிகடவூர் பரமேஸ்வரர் ஆகவும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதுபோல ஜிஎம் குமார் அவருடைய முதல் திரைப்படத்தில் நடித்த நடிகை பல்லவியை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications