குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி.. எமனாய் வந்த மாடு.. அதிர்ச்சி தரும் தகவல்
சென்னை: நடிகர் இமான் அண்ணாச்சி தன்னுடைய குடும்பத்தோடு காரில் சென்று கொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கி இருக்கிறார். அப்போது என்ன நடந்தது என்ற தகவலை அவரே பகிர்ந்து இருக்கிறார்.
சினிமாவில் கதாநாயகனாக வேண்டும் என்ற எண்ணத்தில் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு பலர் வருகிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் அதில் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்குவதற்காக சென்னைக்கு வந்த இடத்தில் பலர் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு உதாரணமாக பலரை சொல்லலாம். அதில் இமான் அண்ணாச்சியும் ஒருவர்.

ஆரம்பத்தில் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வந்தபோது தள்ளுவண்டியில் காய்கறி விற்றது, மளிகை கடையில் வேலை பார்ப்பது என்று பல வேலைகளை செய்து பிறகு எப்படியாவது நடிக்க வேண்டும் என்று சின்ன சின்ன கேரக்டரில் நடிக்க முயற்சி செய்து இப்போது முன்னணி நடிகராக மாறி இருக்கிறார்.
2006 ஆம் ஆண்டு வெளியான சென்னை காதல் மற்றும் வேட்டைக்காரன் படத்தில் சின்ன கேரக்டரில் நடித்த இமான் அண்ணாச்சி அதற்குப் பிறகு கோலங்கள் சீரியலில் அன்வர் என்ற கேரக்டரில் நடித்தார். அந்த சீரியல் இவருக்கு பிரபலத்தை கொடுத்தது. அதிலிருந்து இவர் அதிகமான திரைப்படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். அதிலும் இவருக்கு அங்காடித்தெரு, பாணா காத்தாடி, கோ போன்ற படங்கள் தனி அடையாளத்தை பெற்று தந்தது.
அது போல சின்னத்திரையில் சன் டிவியில் குட்டீஸ் சுட்டீஸ், சொல்லுங்க அண்ணே சொல்லுங்க போன்ற நிகழ்ச்சிகளில் இவர் செய்யும் அட்ராசிட்டி இவருக்கு என்று தனி ரசிகர்களை உருவாக்கியது. இந்த நிலையில் தற்போது ஒரு திரைப்படத்திற்கு அவர் 20 முதல் 25 லட்சம் சம்பளம் பெற்றுவரும் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிக நாட்கள் அந்த நிகழ்ச்சியில் இருந்தார். இப்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இமான் அண்ணாச்சியும் அவருடைய குடும்பத்தினரும் விபத்தில் சிக்கி இருக்கின்றனர் அது குறித்து இமான் அண்ணாச்சி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் புறவழி சாலையில் இமான் அண்ணாச்சி குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று மாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்திருக்கிறது. அப்போது கார்நிலை தடுமாறி அந்த மாடு மீது மோது விபத்தில் சிக்கி இருக்கிறது. இதில் அதிர்ஷ்டவசமாக இமான் அண்ணாச்சி மற்றும் அவருடைய குடும்பத்தினர் பெரிதாக பாதிப்பின்றி உயிர் தப்பி உள்ளனர்.
இந்த தகவலை இமான் அண்ணாச்சி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மாடுகளால் நடக்கும் விபத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications