பல பேரை சிரிக்க வைக்கும் ஜெகனுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட துக்கம்.. கண்ணீரோடு வெளியிட்ட பதிவு
சென்னை: நடிகர் ஜெகனுடைய அம்மா கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி மரணமடைந்திருக்கிறார்.
தன்னுடைய அம்மாவின் இறப்பிற்கு பிறகு முதல் முறையாக பதிவு ஒன்றை ஜெகன் வெளியிட்டு இருக்கிறார்.
அம்மாவைப் பற்றி உருக்கமாக பதிவு வெளியிட்ட ஜெகனுக்கு ரசிகர்கள் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற ஒரு சிலர்கள் தான் அங்கு கொடிகட்டி பறந்து வருகிறார்கள். அந்த மாதிரி தான் தற்போது ஜெகன் விஜய் டிவியில் திரைப்படங்களை விமர்சனம் செய்து வந்த ஜெகன் அதைத்தொடர்ந்து பல மேடை நிகழ்ச்சிகளையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி சின்னத்திரையில் பிரபலமாக வலம் வந்து கொண்டு இருந்தார்.
அதற்குப் பிறகு தான் இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக அயன் திரைப்படத்தில் சிட்டிபாபு ஆக நடித்தது தான் பெரிய திருப்புமுனையை கொடுத்தது. சின்னத்திரையாக இருந்தாலும் சரி வெள்ளி திரையாக இருந்தாலும் சரி தன்னுடைய டைமிங் காமெடியால் பல பேரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஜெகன் வாழ்க்கையில் இப்போது பெரிய அதிர்ச்சியும், இழப்பும் ஏற்பட்டிருக்கிறது.

ஆமாம், ஜெகனுடைய அம்மாவின் உடல்நிலை சரியில்லை என்று சில நாட்களுக்கு முன்பு பதிவு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அவருடைய அம்மா கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்திருக்கிறார். அது குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்ட ஜெகன் அதில், ஏப்ரல் 11 அன்று நாங்கள் எங்கள் அம்மாவிடம் விடைபெறுகிறோம்.
வாழ்க்கையில் எல்லா நல்ல விஷயங்களும் முடிவடைவதை போலவே என் அம்மாவும் தனது அத்தியாயத்தை எழுதினார். அவள் எங்களை விட சிறந்த இடத்தில் இருக்கிறாள் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அவள் வணங்கிய மற்றும் நேசித்த இரண்டு விருப்பமான நபர்களுடன் அவள் இணைந்து இருக்கிறார். அது வேறு யாரும் இல்லை, அவருடைய மகள் கவிதா மற்றும் அண்ணன் ஜெயராமன் தான்.

எப்போதும் போல் என்னுடன் வந்து நின்ற எனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன். அதுவும் டாக்டர் ஜி பாலாஜி எங்கள் வாழ்க்கையில் நீங்கள் இல்லாமல் நாங்கள் என்ன செய்வோம்? நீங்கள் எங்களுக்கு வழங்கிய அனைத்து ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு ரொம்பவே நன்றி என உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
-
2 வருஷமா போராட்டம்.. 3 மாசத்துக்கு முன்பு பேசினேன்! அப்போது கூட.. பாரதிராஜா பற்றி நெப்போலியன் உருக்கம் -
சிறகடிக்க ஆசை: சத்யாவுக்காக களத்தில் இறங்கிய முத்து.. மீனா கண்டுபிடித்த உண்மை.. சிந்தாமணிக்கு சரியான அடி -
பாக்ஸுக்குள் இருந்த வைரக்கல்... பாரதிராஜாவின் அந்த ஒரு முடிவால் ராதாரவிக்கு ஏற்பட்ட வருத்தம் என்ன? -
சிறகடிக்க ஆசை: சத்யாவை நினைத்து சந்தோஷப்பட்ட விஜயா.. ஆனால் முத்து குடும்பத்திற்கு செக் வைத்த ரோகிணி.. அதிரடி சம்பவம் -
தேனி மண்ணில் பாரதிராஜா உடல் .. கை குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள்.. பிரபலங்களின் நெகிழ்ச்சி செயல் -
கடைசியில யாருமே இல்லாம போயிட்டீங்க இல்ல? இப்படி அனாதையா.. பாரதிராஜா உடலை கண்டு கதறிய கங்கை அமரன் -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
சிறகடிக்க ஆசை: ஜெயிலுக்கு போன சத்யா.. மீனா கண்டுபிடித்த ரகசியம்.. இனி தான் பெரிய சம்பவம் இருக்கு! -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
உடைந்த பாரதிராஜா.. மகன் மனோஜ்ஜை மறக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுது, புத்திர சோகத்தாலேயே போன உயிர்












Click it and Unblock the Notifications