Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த சுட்டி குழந்தை யாருன்னு தெரியுதா? நயன்தாராவை அழ வைத்த பிரபல நடிகர்.. கண்டுபிடிங்க பார்ப்போம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போது சமூக வலைதளத்தில் பிரபல நட்சத்திர நடிகர்களின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாகி கொண்டு இருக்கிறது.

அதில் நடிகர் ஜெய் தன்னுடைய குடும்பத்தோடு இருக்கும் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Actor Jai Childhood Photos and fans reaction

அதில் நடிகர் ஜெய் தன்னுடைய அம்மா அப்பா மற்றும் மூன்று சகோதரிகளோடு அந்த புகைப்படத்தில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஜெய் உடைய சிறுவயது புகைப்படங்களை இப்போது பல பிரபலங்களும் பகிர்ந்து வருகின்றனர். அதில் நடிகர் அப்பாஸ் தான் ஜெய்யோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதையும் பார்க்கலாம்.

அந்த வகையில் நடிகர் ஜெய் 90ஸ் கிட்ஸ்கள் மட்டும் அல்லாமல் 2கே கிட்ஸுகளுக்கும் பரீட்சையமான நபர் தான். இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பகவதி என்ற திரைப்படத்தில் விஜய்யின் தம்பியாக குணா கேரக்டரில் நடித்து பலரையும் வியக்க வைத்திருந்தார். விஜய் ரசிகர்களுக்கு இது யாரு சிறுவயது விஜய் போலவே இருக்கிறதே என்று சொல்லும் அளவிற்கு இருந்தார்.

Actor Jai Childhood Photos and fans reaction

அதோடு நடிகர் ஜெய் பாடகர் தேவாவின் தம்பி சம்பத்தின் மகன் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்தான். 2002 ஆம் ஆண்டு பகவதி திரைப்படத்திற்கு பிறகு ஜெய் சென்னை 600028 என்ற திரைப்படத்தில் என்னுடைய நடிப்பை தொடங்கினார். ஜெய்க்கு அந்த டைமில் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் வந்து கொண்டிருந்தது.

அதிலும் இவர்களுடைய நடிப்பு ரசிகர்களை அதிகமாக கவர்ந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் கண்கள் இரண்டால் பாடல்கள் மூலமாக ஆண் ரசிகர்களையும் பெண் ரசிகர்களையும் தன்னை ஃபாலோ பண்ண வைத்த ஜெய் அதற்கு பிறகு சரோஜா, வாமனன், கோவா போன்ற பல திரைப்படங்களில் ஜாலியான கேரக்டராகவே நடித்து வந்தார்.

Actor Jai Childhood Photos and fans reaction

அந்த நேரத்தில் தான் எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தில் கதிரேசனாக நடித்து பல பெண்களின் மனதை கொள்ளை கொண்டு விட்டார். இப்படி ஒரு பாய் பிரண்ட் நமக்கு கிடைக்க வேண்டும் என்று பல பெண்களை ஏங்க வைத்த ஜெய் அதைத் தொடர்ந்து ராஜா ராணி என்ற திரைப்படத்தில் சூர்யா கேரக்டரில் நடித்து நடிகை நயன்தாராவை அந்த திரைப்படத்தில் அழ வைத்து பலருடைய திட்டல்களையும் வாங்கி இருந்தார்.

அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஜெய் இப்போது லேபிள் என்ற வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் சிறுவயதில் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு புகைப்படத்தில் தன்னுடைய அம்மாவோடு ஜெய் அமர்ந்திருக்கிறார். அந்த புகைப்படத்தை பதிவிட்ட ஜெய் தன்னுடைய அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்.

Actor Jai Childhood Photos and fans reaction

அதோடு இன்னொரு புகைப்படத்தில் தான் சிறுவயதில் சிரித்த மாதிரி இருக்கிற புகைப்படத்தையும், அதேபோல சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் தான் சிரித்த புகைப்படத்தையும் மெர்ஸ் செய்து இன்னொரு புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவிக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+