Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் ரஜினி நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது..தலைநகரம் பட வில்லன் ஞாபகம் இருக்கா? ஜனகராஜ் ஓபன் டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் தமிழ் சினிமா என்றும் மறக்க முடியாத அளவிற்கு பல படங்களில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் முத்திரை பதித்தவர் ஜனகராஜ்.

தன்னுடைய திரை வாழ்வில் பல நடிகர்களுடன் இயக்குனர்களுடன் பணியாற்றி இருந்தாலும் ரஜினிகாந்த் உடன் தான் தனக்கு இயல்பாக கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதாகவும் அவரைப் போல கதாநாயகர்களில் காமெடி செய்வது யாராலும் முடியாது என்று கூறியுள்ளார்.

Actor Janagaraj open up Actor Rajinikanth charater and he comedy chemistry

மேலும் ரஜினிகாந்த் குறித்தும் சில தகவல்களையும் நடிகர் பாண்டியராஜன் உடன் இணைந்து நடித்த 'நெத்தியடி' படத்தில் ஹிட்டான "வேணு... அத கொடுத்துடு.... "என்ற பேமஸ் டயலாக் உருவான விதம் குறித்தும் பல தகவல்களை தற்பொழுது பகிர்ந்து இருக்கிறார்.

தான் நடித்து வந்த காலத்தில் இருந்த அனைத்து நடிகர்கள் மற்றும் இயக்குனர் படங்களில் நடித்திருந்தாலும் சிவா படம் தொடங்கி பாட்ஷா வரை சுமார் 16 படங்கள் வரை ரஜினிகாந்த் உடன் ஜனகராஜ் இணைந்து நடித்திருக்கிறார்.அதனாலேயே ரஜினியுடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்ற ஜனகராஜ் அவரை குறித்து சமீபத்தில் கூறும் பொழுது " நான் பாரதிராஜா பள்ளியில் இருந்து வந்ததால் பெரும்பாலான நடிகர்கள், இயக்குனர்களுடன் பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

இருப்பினும் நான் நடித்த காலத்தில் என்னுடன் இணைந்து நடித்த கதாநாயகர்களில் ரஜினிக்கு நிகராக எவரும் காமெடி செய்ய முடியாது.ரஜினி..!! ...ரஜினி..!!!தான். ரஜினிகாந்த் உடன் பல படங்களில் நடித்ததால் ரொம்ப நேரம் அவருடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. படப்பிடிப்பு சமயங்கள் மட்டுமல்லாது ரிலாக்ஸாக இருக்கும் போது என்னுடன் காமெடியாக தான் பேசுவார்.

என்ன..? குரு.. அப்படியாமா..!!விஷயம்..? என்று ஜாலியாக பேசி என்னிடம் பல விஷயங்களை போட்டு வாங்குவார். இயற்கையாகவே நகைச்சுவை உணர்வு உள்ளவர் ரஜினிகாந்த் என குறிப்பிட்டுள்ளார். அதனால் தான் நாங்கள் இணைந்து நடித்த பல படங்களின் டயலாக்குகள் இன்றளவும் பேமஸ் ஆக இருக்கிறது.பழைய படங்களின் சண்டை பயிற்சியாளர் ஜுடோ ரத்தினம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் இயக்குனர் சுந்தர்.சி யின் தலைநகரம் படத்தில் வில்லனாக 'பாய்' கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் என்று சொன்னால் ஜுடோ ரத்தினத்தை எல்லோருக்கும் தெரியும். அவர்தான் தான் நடித்த ஒரு படத்தின் காமெடி காட்சிக்கு இன்ஸ்பிரேஷன் என்று கூறியுள்ளார் ஜனகராஜ். நடிகர் பாண்டியராஜன் இயக்கி நடித்த நெத்தியடி படத்தில் அவருக்கு அப்பாவாக காமெடி கலந்த கதாபாத்திரத்தில் ஜனகராஜ் நடித்திருப்பார்.

அந்தப் படத்தில் "வேணு.... சொந்தக்காரங்க நம்மள தப்பா நினைப்பாங்க.... அதை கொடுத்துவிடு...." என்று படம் முழுவதும் வேணு என்கின்ற பாண்டியராஜன் பெயரை ஒரு வித்தியாசமான மாடுலேஷனில் ஜனகராஜ் அழைப்பார். இந்த வித்தியாசமான மாடுலேஷன் இன்றளவும் பலரால் பேச்சு வழக்கில் பிறரை கலாய்ப்பதற்காக சொல்லப்பட்டு வருகிறது. அந்த மாடுலேஷன் உருவான விதத்தை குறித்த ஜனகராஜ் கூறியுள்ளார்.

Actor Janagaraj open up Actor Rajinikanth charater and he comedy chemistry

மேலும் அவர் அந்த டயலாக் உருவான விதத்தை பற்றி கூறும் பொழுது "பாண்டியராஜன் முதன் முதலில் இயக்கிய கன்னி ராசி, ஆண் பாவம் போன்ற படங்களில் என்னை பயன்படுத்தி இருந்தார். அந்த படங்களில் எங்களுடைய காமெடி மக்களிடம் நன்றாக ரீச் ஆனது.தொடர்ந்து நெத்தியடி படத்தில் நடிக்கும் பொழுது அந்த படத்தில் என்னுடைய நடிப்பில் ஏதாவது வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக,அண்ணன் நீங்கள் இந்த படத்தில் நடக்கும் விதமே வித்தியாசமாக தான் இருக்கும்.

அதற்கேற்றார் போல் டயலாக்குகளையும் கொஞ்சம் இழுத்து.. இழுத்து.. பேசுங்கள். உதாரணமாக ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோரத்தினம் பேசுவது போல் பேசுங்கள் என பாண்டியராஜன் கூறினார்.அந்த நேரத்தில் ஜூடோ ரத்தினம் அப்படித்தான் கொஞ்சம் இழுத்து இழுத்து பேசுவார்.அவர் பேசும் விதத்தை மாடலாக எடுத்துக்கொண்டு உள்வாங்கி பேச முயற்சி செய்தபோது வந்த டயலாக் டெலிவரி ஸ்டைல் தான் அந்த வேணு... டயலாக் ஸ்டைல். நாங்கள் எதிர்பார்த்ததை போல் அந்த டயலாக் ஸ்டைல் நன்றாக வந்தது.மக்களும் அதை நன்றாக வரவேற்றனர்."என கூறியுள்ளார்.

ஜனகராஜ் அவர்கள் பகிர்ந்த தகவலை கேட்ட பின்பு ஒரு நிமிடம் தலைநகரம் படத்தில் வில்லன் பாயாக நடித்திருக்கும் ஜுடோ ரத்தினம் டயலாக் உச்சரித்த விதத்தை கண் மூடி யோசித்து கம்பேர் செய்து பார்த்தால் ஏறக்குறைய இரண்டும் ஒன்று போல் இருப்பது தெரியும். தலைநகரம் படத்தில் ஜுடோரத்தினம் சீரியஸாக பேசிய வசனங்களை அவரது ஸ்டைலில் ஜனகராஜ் நெத்தியடி படத்தில் காமெடியாக பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+