Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் ஜனகராஜுக்கா இந்த நிலைமை.!. முகத்தை கவனிச்சீங்களா? விஜய் சேதுபதி அமெரிக்காவுக்கே போய்ட்டாராமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் நாம் காமெடியனாக பார்த்து ரசித்த ஜனகராஜ் திரைக்குப் பின்னால் இருக்கும் சினிமா ஜாம்பவான்களின் தொடர்பும் நட்பையும் குறித்து பிரபல பத்திரிகையாளர் பகிர்ந்துள்ள தகவல்கள் ஆச்சரியத்தை அளித்து வருகிறது.

இவ்வளவு பெரிய நட்பு வட்டாரம் இருந்தும் பெரிய அளவில் அலட்டிக் கொள்ளாத ஜனகராஜ் குணத்தை பலர் பாராட்டி வருகின்றனர்.

சினிமாவில் நடிப்பதற்கு ஆசைப்பட்ட ஜனகராஜ் முதலில் செய்தது நடிப்பிற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத வயலின் இசைக்க கற்றுக் கொண்டது தான். வயலின் சிறப்பாக வாசிக்க கற்றுக் கொண்டாலும் சினிமாவில் நடிப்பதற்கு தொடர்ந்து வாய்ப்பு தேடிக் கொண்டு தான் இருந்தார். அந்த நேரத்தில் எதிர்பாராமல் அவரது முகம் விபத்துக்குள்ளாகி முக வாதம் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டார்.

Actor Janakaraj face disease and he overcame it and the current situation

அடிக்கடி முகத்திற்கு கரண்ட் ஷாக் வைக்க வேண்டிய நிலைமைக்கு உள்ளானார்.அந்த நேரத்தில் பலர் இவரை சினிமாவில் நடிப்பதற்கு முகம் தான் முக்கியம் ஆனால் உன் முகம் இப்படி ஆகிவிட்டதே.. இனிமேல் என்ன செய்யப் போகிறாய்...என்று பரிதாபத்தோடு கேட்டு உள்ளனர்.தன் முகத்தை குறித்த எதிர்மறையான கமெண்ட்களை கண்டுகொள்ளாத ஜனகராஜ் அந்த முகத்தையே தனது பிளஸ் பாயிண்ட் ஆக மாற்றி, கொஞ்சம் இழுத்து.. இழுத்து... பேசி தனக்கென ஒரு மாடுலேஷனையும், பாடி லாங்குவேஜையும் தனித்து தெரியும்படி உருவாக்கிக் கொண்டார்.

என்ன தான் வாய்ப்பு கிடைத்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்தாலும் தன்னுடைய முகத்தின் நிலையை எண்ணி அவ்வப்போது சோகமாக இருக்கும் ஜனகராஜ் சோகத்தை கண்ட இயக்குனர் பாரதிராஜா அவரை தனியாக கவனிப்பதற்கென்று தன்னுடைய உதவி இயக்குனர் ஒருவரை நியமித்திருக்கிறார்.எங்களுடைய இயக்குனர் இயக்குவதையும், ஸ்கிரிப்ட் பேப்பர் வேலைகளையும் நான் பார்த்ததைவிட ஜனகராஜை தான் அதிக அளவு கவனித்துக் கொண்டேன் என்று அந்த உதவி இயக்குனர் பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.

Actor Janakaraj face disease and he overcame it and the current situation

அந்த உதவி இயக்குனர் வேறு யாரும் அல்ல நடிகர் மனோபாலா தான். இவர் நடிக்க வருவதற்கு முன்பு வயலின் கற்றுக் கொண்டது சினிமாவிற்கு வந்த பிறகு இளையராஜா உடன் நல்ல நெருக்கம் ஏற்படுவதற்கு ஒரு காரணமாய் இருந்துள்ளது.அந்த காலத்தில் இளையராஜா இசைக்கு அடுத்தார் போல் படத்தின் முக்கியமான மார்க்கெட்டிங் மெட்டீரியலாக கவுண்டமணி- செந்தில் காமெடி கூட்டணி இருந்தது.

ரஜினி, கமல் கவுண்டமணி, ஆகிய மூவரும் சமகாலத்தில் சினிமாவில் அறிமுகமானவர்கள் (பதினாறு வயதினிலே படத்தை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்) கவுண்டமணி காமெடியனாக ஒரு உச்சத்தை தொட்டாலும், ரஜினி, கமல் கதாநாயகர்களாக மிகப்பெரிய உயரத்தையும் எட்டி இருந்தனர்.ஆரம்பத்தில் எந்தவித ஈகோ இல்லாமல் இவர்கள் ஒன்றாக நடித்தாலும் நாளடைவில் ரஜினி, கமல் போன்ற உச்ச கதாநாயகர்கள் படப்பிடிப்பின் போதும் சரி, படத்திலும் சரி, கவுண்டமணி தங்களுக்கு கவுண்டர் கொடுப்பதையும், கலாய்ப்பதையும் விரும்பவில்லை.

இந்த சூழ்நிலையில் கவுண்டமணிக்கு மாற்றாக இவர்களுக்கு ஒரு காமெடியன் தேவைப்பட்ட பொழுது அந்த இடத்தை நிரப்பியவர் ஜனகராஜ் தான்.கமலுக்கு ஜனகராஜ் மீது எப்பொழுதும் ஒரு தனிப்பட்ட பாசம் உண்டு.அதனால் தான் அபூர்வ சகோதரர்கள் படத்தில் முதலில் கமிட்டாகி இருந்த கவுண்டமணியை நீக்கிவிட்டு அந்தக் கதாபாத்திரத்தில் ஜனகராஜை நடிக்க வைத்து காமெடியில் கலக்க வைத்திருப்பார்.

ஒரு நாளைக்கு ஐந்து படங்கள் வரை பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஜனகராஜ் தொடர்ந்து தன்னுடைய முக வாதத்திற்கு கரண்ட் ஷாக் வைத்துக் கொண்டிருந்ததால் நரம்பு பிரச்சனை, மெமரி லாஸ் போன்ற பிரச்சனைகளால் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஓய்வுக்காக தனது மகனுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

ஜனகராஜின் மிகப்பெரிய ரசிகர் ஆன விஜய் சேதுபதி தனது 96 படத்திற்காக ஜனகராஜ் தான் நடிக்க வேண்டும் என்று அமெரிக்காவிற்கு சென்று அவரை வற்புறுத்தி மிகப்பெரிய இடைவெளிக்கு பின்பு நடிக்க வைத்துள்ளார்.அந்தக் காலத்தில் மிமிக்ரி ரெக்கார்ட் செய்து விற்கப்படும் ஆடியோ கேசட்டுகளில் ஜனகராஜ் வாய்ஸ் ஆடியோ கேசட் தான் விற்பனையில் பட்டையை கிளப்பியுள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+