2022இல் நாங்க பட்ட கஷ்டம்! என் மகனுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு.. ஜெயம் ரவி அப்பா வருத்தம்
சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் அப்பாவான எடிட்டர் மோகன் பேட்டி ஒன்றில் தன்னுடைய மகன் ஜெயம் ரவி மற்றும் இன்னொரு மகன் இயக்குனர் ராஜா பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அப்போது தன்னுடைய இரண்டு மகன்களை நினைத்து தான் 2022 வது வருடத்தில் பட்ட கஷ்டம் குறித்து பகிர்ந்து இருக்கிறார்.
சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் விவாதிக்கப்படும் செய்திகளில் நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து செய்தி இருக்கிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவி அவருடைய மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் என்ற செய்திகள் வெளியானது. அதற்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக சில வாரங்களுக்கு முன்பு ஜெயம் ரவி தான் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார்.

அதற்கு பிறகு பல்வேறு சர்ச்சைகளும் பரவி வருகிறது. இந்த நிலையில் ஜெயம் ரவியின் அப்பாவான எடிட்டர் மோகன் பேசிய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதை பார்த்து பல ரசிகர்கள் இப்படி ஒரு அப்பா கிடைக்க ஜெயம் ரவி கொடுத்து வச்சிருக்கணும் என பேசி வருகிறார்கள். ஆரம்பத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து சென்னைக்கு வந்து அங்கு தயாரிப்பாளர் ஒருவரால் தான் சினிமாவில் அறிமுகமானார்.
முஸ்லிம் மதத்தை சார்ந்த ஜின்னா என்பவர் அந்த தயாரிப்பாளரால் மோகன் என்று சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். அன்று முதல் இப்ப வரைக்கும் அவர் மோகனாகத்தான் பலருக்கும் பரீட்சையமாகி இருக்கிறார். இந்த நிலையில் எடிட்டர் மோகனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கின்றனர். அதில் மூத்தவர் ராஜா இயக்குனராக இருக்கிறார். இரண்டாவது மகனான ஜெயம் ரவி நடிகராக பலருக்கும் தெரியும். அதுபோல இந்த தம்பதியின் மகள் பல் மருத்துவராக இருக்கிறாராம்.

ஜெயம் ரவியை வைத்து தனி ஒருவன் திரைப்படத்தை ராஜா தான் இயக்கியிருந்தார். இந்த நிலையில் எடிட்டர் மோகன் பேசுகையில் நாங்க எங்களுடைய பிள்ளைகளுக்காக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் எங்களுடைய மகன்களுக்காக கடந்த 2022-ம் வருடம் செப்டம்பர் மாதத்தில் நாங்கள் வெளியே சொல்ல முடியாத அளவிற்கு வேதனையில் இருந்தோம்.
அதற்கு காரணம் அந்த நேரத்தில் என்னுடைய மூத்த மகன் ராஜா இயக்கிய காட்பாதர் திரைப்படம் வெளியானது. அதே நேரத்தில் ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வம் திரைப்படம் வெளியானது. இரண்டு மகன்களின் படங்களும் ஒரு வார வித்தியாசத்தில் வெளியானது. இரண்டு பேரின் படங்களில் ஒருவர் படம் வெற்றி பெற்று ஒருவர் படம் சரியாக வெற்றி பெறவில்லை என்றால் எவ்வளவு வருத்தமாக இருக்கும் என்று நாங்கள் ரொம்பவும் பயத்தோடு இருந்தோம்.
முதல் வாரத்தில் ஜெயம் ரவியின் படம் வெளியாகி இருந்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியானதை சந்தோஷமாக கொண்டாட முடியவில்லை. காரணம் அடுத்த வாரம் தான் காட் பாதர் திரைப்படம் வெளியாக இருந்தது. பிறகு இரண்டு படங்களும் அந்த நேரத்தில் வெற்றி பெற்றது எங்களுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. ஜெயம் ரவிக்காக என்னுடைய 11 வருட சாம்ராஜ்யத்தை விட்டுவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதாவது என்னுடைய மகனை நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக முதல் முதலில் ஜெயம் படத்தை தேர்வு செய்து அவரை நடிக்க வைத்தேன். அந்த படம் வெற்றி பெற்றுவிட்டது. மக்கள் ரவியை ஜெயம் ரவியாக ஏற்றுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து அம்மா சென்டிமெண்டில் எம் குமரன் s/o மகாலட்சுமி படத்தை எடுத்தேன் அதுவும் வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் அதற்குப் பிறகு சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் ஜெயம் ரவி போகும்போது அவர்கள் என்னுடைய மகனை கீழே இறக்கி விடுகிறார்கள்.
பிறகு நான் தூக்கி விட வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது காரணம் எனக்கு என் மகன்களை அவ்வளவு பிடிக்கும். அதனால் தான் நான் தெலுங்கில் 11 வருஷமாக யாரும் அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தில் இருந்தேன் அதை விட்டுவிட்டு என்னுடைய மகனுக்காக தமிழில் படங்களை தயாரிப்பதற்காகவும் இயக்குவதற்காகவும் வந்தேன். நான் தெலுங்கில் சில வருடங்களுக்கு முன்பு படங்கள் பண்ண தொடங்கினேன்.
அங்கு உள்ள பல முன்னணி நடிகர்களை வைத்து படம் பண்ணி இருக்கிறேன். என்னுடைய படம் வெளியாக போகிறது என்றால் எனக்கு போட்டியாக படத்தை ரிலீஸ் செய்வதற்கே யோசிப்பார்கள். அப்படி ஒரு நிலைமையிலிருந்து என்னுடைய மகனுக்காக எல்லாவற்றையும் விட்டு வந்து விட்டேன். குழந்தைகள் நல்லா இருக்க வேண்டும் என்பது எல்லா தகப்பனின் ஆசை. அதுபோல்தான் நானும் என்று அந்த பேட்டியில் எமோஷனலாக பேசியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications