நீங்க அந்த ஜாதி, நாங்க “இந்த” ஆளுங்க.. தள்ளி நில்லுங்க.. அருண் பாண்டியனிடம் ஜாதியை பேசிய ஜான் விஜய்
சென்னை: நடிகர் ஜான் விஜய் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அதில் கலந்து கொண்ட அருண்பாண்டியனிடம் தான் நாடார் ஜாதி என்றும் நீங்கள் தேவர் ஜாதி நீங்கள் எல்லாரும் ஒன்றாக நில்லுங்கள் என்றும் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் அதிகமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
நடிகர் ஜான் விஜய் திரை உலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான சரத்குமார் நடித்த தலைமகன் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் நடிகராக சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு அஜித் நடித்த பில்லா, ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி உட்பட பலா திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதிலும் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் அவர் நடித்த டாடி என்ற கேரக்டர் அவருக்கு பெரிய அளவில் பெயரை வாங்கி கொடுத்தது. இந்த நிலையில் ஜான்விஜய் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அந்த நிகழ்ச்சியில் நடிகர் அருண் பாண்டியனும் கலந்து கொண்டிருக்கிறார்.
அப்போது தன்னோடு அருண் பாண்டியன் புகைப்படம் எடுக்க வரும்போது "நாங்க நாடார் நாங்க எல்லாரும் ஒன்றாக நிற்கிறோம். நீங்க தேவர் நீங்க எல்லாரும் ஒன்றா நில்லுங்க" என்று சொல்லி இருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொது வழியில் நடிகர் ஜான்விஜய் தன்னுடைய ஜாதியை பகிரங்கமாக அறிவித்திருக்கிறார், இது தவறு என்று சிலர் பேசி வருகிறார்கள். அதோடு ஜாதியை சொல்லி அருண் பாண்டியனை தள்ளி நிற்க சொன்னதும் தவறு என்று சிலர் சொல்கிறார்கள்.

ஆனால் அந்த வீடியோவில் ஜான்விஜய் சிரித்தபடியே சொல்ல அதைக்கேட்டு நடிகர் அருண்பாண்டியனும் சிரித்து கொண்டு தான் இருக்கிறார். அதனால் அவர்கள் ஜாலியாக பேசியதை இதை ஒரு சாதி பிரச்சனையாக உருவாக்க வேண்டாம் என்று சிலர் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். நடிகர் ஜான் விஜய் திமுக பிரமுகரான டி கே எஸ் இளங்கோவனின் மருமகன் தான்.

டிகேஎஸ் இளங்கோவனின் மகள் மாதவியை தான் ஜான்விஜய் திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது ஜான் விஜய் தன்னுடைய குடும்ப ஃபங்ஷனில் கலந்து கொண்ட போது தான் இப்படி பேசி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அருண்பாண்டியனோ அல்லது ஜான் விஜய்யோ எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. ஆனால் இது இணையத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
அது ஒன்னும்மில்ல திமுக எம்பி TKS இளங்கோவனின் மருமகன் ஜான் விஜய் நாங்கள் எல்லாம் நாடார் நீங்க எல்லாம் தேவர் ஒன்னா நில்லுங்கனு சொல்றார்.. pic.twitter.com/Y5iDAj41Ze
— Prabhakaran Kamaraj (@wolfprabha) August 15, 2024
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications