ஊருக்கே வாழ்த்து சொல்லும் ஜிபி முத்து பிறந்தநாள்.. வில்லன் நடிகர் செயல்! எங்க போயிருக்கிறார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பலரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஜி பி முத்துவின் பிறந்த நாளில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தன்னுடைய பிறந்த நாளில் தன்னுடைய புது வீட்டிற்கு பெரிய டிவி மாட்டி இருக்கும் ஜி.பி முத்து அதை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.

திரைப்படங்களில் வில்லனாக மிரட்டிக் கொண்டிருக்கும் காளையன் ஜி பி முத்துவின் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறி இருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் பிரபலம்

சமூக வலைத்தளத்தில் பிரபலம்

சமூக வலைதளத்தில் பிரபலமாக இருக்கும் ஜி பி முத்துவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேற லெவலில் பாப்புலர் கொடுத்தது. டிக் டாக் செயலியின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான ஜி பி முத்து தன்னை கிண்டல் செய்பவர்களையும் கலாய்ப்பவர்களையும் கெட்ட வார்த்தைகள் பேசி பிரபலம் அடைந்து இருந்தாலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் தனக்குள் இருக்கும் தந்தையின் பாசத்தை வெளியே காட்டி அதிகமானவர்களால் பாராட்டப்படும் நபராக மாறிவிட்டார்.

பிக் பாஸ்க்கு டா டா

பிக் பாஸ்க்கு டா டா

பிக் பாஸ் நிகழ்ச்சி பலருடைய வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. ஆனாலும் எனக்கு இந்த பெயரும் புகழும் எல்லாம் வேண்டாம் என்று அதற்கு டாட்டா சொல்லிவிட்டு வெளியே வந்த ஜிபி முத்து நான் எப்போதும் போல இப்படித்தான் இருப்பேன் என்று வழக்கம்போல லெட்டர் படித்துக் கொண்டும், ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டும், டான்ஸ் ஆடிக் கொண்டும் ஜாலியாக இருந்து வருகிறார்.

பிரபல படுத்திய நெகட்டிவர்ஸ்

பிரபல படுத்திய நெகட்டிவர்ஸ்

வெகுளி ஆக பேசி வரும் ஜி பி முத்துவிற்கு அதிகமான ரசிகர்கள் இருந்தாலும் ஒரு சில நெகடிவ்வர்ஸ் இவருடைய வீடியோக்களை அடிக்கடி ட்ரோல் செய்து இவரை பாப்புலர் ஆக்கிவிட்டனர். வடிவேலுவிற்கு அடுத்ததாக இவருடைய புகைப்படங்களும் இவருடைய வசனங்களும் தான் மீம்ஸுக்காக வலம் வருகிறது. அதன் காரணமாகத்தான் பாடல்களில் கூட இவர் அதிகமாக பயன்படுத்தும் "நக்கு" என்ற வார்த்தை கூட தற்போது எங்கும் ஒலித்து வருகிறது. இதைக் குறித்து அதிகமானோர் கருத்து தெரிவித்து வந்தாலும், இந்த பாடலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஜிபி முத்து அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்து, தற்போது கோமாளியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று அவருடைய பிறந்தநாளுக்கு சமூக வலைத்தளத்தில் அவருடைய நண்பர்கள் பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். டிக் டாக் செயலி இருக்கும் போது ஜி பி முத்து நண்பர்களே இப்ப என்ன ஆச்சுன்னா இன்று பேசி சில குறிப்பிட்ட நபர்களின் பெயர்களை சொல்லி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறிய வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் அதிகமாக வைரலாகி வந்தது. இந்த நிலையில் ஜிபி முத்துவின் பிறந்தநாள் அன்று அவர் பேசிய வீடியோவை தற்போது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

இன்று அவருக்கே பிறந்தநாள்

இன்று அவருக்கே பிறந்தநாள்

இந்த நிலையில் ஜிபி முத்துவின் நண்பராக இருக்கும் வில்லன் நடிகர் காளையன் தற்போது ஜி பி முத்துவிற்கு வாழ்த்து கூறி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்று வெளியிட அதிகமான ரசிகர்கள் அதை பாராட்டி வாழ்த்து கூறி வருகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜிபி முத்துவை அடிக்கடி காளையன் நடித்துக் கொண்டிருப்பது போன்று இருக்கும். அப்போது அதிகமானோர் கருத்து தெரிவித்து வந்தனர். எதற்காக காளையன் இப்படி எல்லாம் செய்கிறார் என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில், நாங்கள் எல்லாம் உண்மையில் நண்பர்கள்தான் நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக தான் அப்படி செய்கிறோம் என்று கூறுகின்றனர். இந்த நிலையில் இப்போது இவர்களுடைய நட்பை பார்த்து ரசிகர்கள் அப்போ அவர்கள் சொன்னது உண்மைதான் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் தன்னுடைய பிறந்த நாளில் தன்னுடைய புது வீட்டில் ஜிபி முத்து புது டிவி வாங்கி மாட்டி இருக்கும் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+