காளிதாஸ் ஜெயராம் ரிசப்ஷன்.. ஷாலினியோடு க்யூட்டாக வந்த மகள்.. அஜித்துக்கு டப் கொடுக்கும் மகன்
சென்னை: நடிகர் காளிதாஸ் ஜெயராம் தாரணி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். அதில் நடிகர் அஜித்தின் மனைவியான நடிகை ஷாலினி அவருடைய மகள் மற்றும் மகனோடு கலந்து கொண்டிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
மலையாள நடிகரான ஜெயராம் தமிழிலும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய திரைப்படங்களில் அதிகமான சண்டைக் காட்சிகள் மட்டும் அல்ல காமெடி காட்சிகளும் களைக்கட்டும். அதனாலயே இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

பல வருடங்களாக சினிமாவில் இருக்கும் ஜெயராம் போலவே அவருடைய மகன் காளிதாஸ் ஜெயராமும் மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட நடிகர் தனுஷ் நடிப்பில் ஹிட்டான ராயன் திரைப்படத்தில் தனுஷின் தம்பியாக காளிதாஸ் நடித்திருந்தார்.

அதுபோல காளிதாஸ் ஜெயராம் மாடல் அழகியான தாரணி என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் ஆன நிலையில் இந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுடைய திருமணம் கேரளா மாநிலத்தில் குருவாயூரில் எளிமையாக நடைபெற்றது.

இதில் உறவினர்களும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதையடுத்து இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர். அதிலும் குறிப்பாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தனர்.

அது போல நடிகர் கார்த்திக், இயக்குனர் விஜய் போன்றவர்களும் கலந்து கலந்து கொண்டனர். அது மட்டுமல்லாமல் நடிகர் அஜித்தின் மனைவியான நடிகை ஷாலினி தன்னுடைய மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் உடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் போலவே அவருடைய மகன் மற்றும் மகளும் எளிமையாக இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதோடு அஜித்தின் மகள் கிட்டத்தட்ட அம்மாவின் உயரத்தை எட்டி இருக்கும் நிலையில் அடுத்த கதாநாயகி அஜித் வீட்டில் ரெடியாகிவிட்டார் என்று பலரும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications