கமல்ஹாசனுக்கும் டிடிக்கும் ஒரே பிரச்சனை.. வருடங்கள் போனாலும் தீராது போல! ஆனால் இனியாவது நடக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவடைந்தது. கடந்த வார ஞாயிற்றுக்கிழமை அதாவது ஜனவரி 14-ம் தேதியோடு இந்த சீசன் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் அதை பற்றிய விவாதங்களும், சர்ச்சைகளும் இன்னும் ஓய்ந்த பாடு இல்லை. அதற்குள் அடுத்த சீசன் எப்போது தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு வர தொடங்கி விட்டது.

இப்போது ஒரு சில சீசன்களில் கமல்ஹாசன் கலந்து கொள்ள மாட்டார் என்று ஆரம்பத்தில் சர்ச்சைகள் பரவி வருவதும் ஆனால் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகும் போது அதில் தவறாமல் கமல்ஹாசன் இடம் பிடித்து வருவதும் காண முடிகிறது. அதேபோல டிடி பற்றியும் ஒரு சில வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது.

பிரபலங்களுக்கு சர்ச்சைகளும் வதந்திகளும் பெரிய விஷயம் கிடையாது. அவர்கள் எது செய்தாலும் வேறு விதமாக ஆரம்பத்தில் வதந்திகளும் பரவி வந்தாலும் பிறகு அது இல்லை என்பது பல நேரங்களில் நிரூபணம் ஆகியிருக்கிறது. அந்த மாதிரி இப்போது கமல்ஹாசன் மற்றும் டிடி இருவருக்கும் ஒரே விஷயமாக சில வதந்திகள் பரவி வருவது குறித்து விரிவாக பார்க்கலாம்.

 Actor kamal haasan and vijay tv host dd same bigg boss problem

அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனுக்கு வதந்திகளும் சர்ச்சைகளும் என்பது புதியது அல்ல. பல வருடங்களாக சினிமா துறையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் கமல்ஹாசன் உலகநாயகன் என்று உலகத்தில் இருக்கும் அத்தனை தமிழர்களும் அழைத்து வந்தாலும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவரைப் பற்றி அதிகமான சர்ச்சைகள் பரவி வருகிறது.

அதுவும் இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்து கமல்ஹாசன் மீது பல குற்றசாட்டுகள் குவிந்து வந்தது. அதிலும் மாயா குரூப்புக்கு ஆதரவாக கமல்ஹாசன் செயல்படுகிறார், கமல்ஹாசன் தான் மாயா குரூபின் தலைவர், மாயா கமல்ஹாசனோடு திரைப்படத்தில் ஒன்றாக நடித்ததால் அவரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கமல் மாயாவுக்கு எதிராக செயல்படுபவர்களை வெளியே தூக்கி கொண்டு இருக்கிறார் என்றெல்லாம் அவரைப் பற்றி பல மீம்ஸ்களும் கமாண்டுகளும் பரவி வந்தது.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு விஜய் டிவி பிரபலங்களான புகழ் மற்றும் குரோஷி நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் மற்றும் மாயா பற்றி நிகழ்ச்சி ஒன்றில் தவறாக பேசி இருந்தனர். பிறகு தாங்கள் செய்த தப்புக்கு மன்னிப்பும் கேட்டிருந்தனர். இப்படியாக கமல்ஹாசனுக்கு அதிகமான நெகட்டிவ் பரவி வருகிறது. அதே நேரத்தில் இனி அடுத்த சீசனில் கமல்ஹாசன் கலந்து கொள்ள மாட்டார் என்று ஒவ்வொரு சீசனிலும் கூறப்பட்டு வருகிறது.

கடந்த சீசனில் கூட இது தான் சொல்லப்பட்டுள்ளது. அசீம் தேர்வானதும் அடுத்த சீசனில் கமல்ஹாசன் கலந்து கொள்ள மாட்டார் என்று பலர் கூறி வந்தனர்.. ஆனால் ஏழாவது சீசனுக்கான ப்ரோமோ வந்த போது அதில் கமல்ஹாசன் இடம் பிடித்திருந்தார். அதுபோல இப்பொழுது அடுத்த சீசனில் கமல்ஹாசன் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் எப்படியும் கமல்ஹாசன் அடுத்த சீசனுக்கான ப்ரோமோவில் வந்துவிடுவார் என்று நம்பலாம்.

காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் கமல்ஹாசனின் அரசியல் மற்றும் அவருடைய கலை உணர்வை பலதரப்பட்ட மக்களுக்கும் எடுத்து சொல்கிறது. அதனால் அவர் இந்த மேடையை விட்டு விலக மாட்டார். அதே போல தொகுப்பாளினி டிடிக்கும் சில வதந்திகள் பரவி வந்து கொண்டிருக்கிறது. அதாவது டி பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்பாக போகிறது என்று சொல்லிய காலத்தில் இருந்து டிடி இந்த சீசனில் கலந்து கொள்வார், அந்த சீசனில் கலந்து கொள்வார் என்று ஒவ்வொரு சீசனிலும் கூறப்பட்டு வருகிறது.

 Actor kamal haasan and vijay tv host dd same bigg boss problem

கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கூட டிடி கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் எந்த சீசனிலும் உறுதியாக டிடி கலந்து கொள்ளவில்லை. ஆறாவது சீசனில் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் வீட்டிற்குள் போயிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இனி அடுத்த சீசனிலும் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பட்டியலில் டிடி பெயர் கண்டிப்பாக இடம் பிடிக்கும்.

ஆனால் அவர் உண்மையில் கலந்து கொள்ளப் போகிறாரா இல்லையா என்பது அவருக்கு தான் தெரியும். ஆக மொத்தம் ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் ரசிகர்கள் கமல்ஹாசன் மற்றும் டிடி பற்றி பல்வேறு வதந்திகளை பரப்பி வருகிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் அது நடக்காமல் போய்க்கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+