நடிகர் விஜய்க்கு உதவிய கமல்ஹாசன்.. இப்படி எல்லாம் கூட நடந்து இருக்கா? வெளிவந்த ரகசியம்
சென்னை: ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனுக்கு இணையாக தொழில்நுட்பங்களை விரல் நுனியில் வைத்து இருப்பவர் நடிகர் கமலஹாசன் ஆவார்
உலக சினிமாக்களில் ஒரு சில இயக்குனர் நடிகர்கள் மட்டுமே தங்கள் சினிமாக்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்பங்களையும், தயாரிப்புகளையும் பெரிய அளவில் முயற்சி எடுத்து கண்டுபிடித்து, தங்கள் சினிமாக்களில் அறிமுகப்படுத்த முயற்சி செய்வார்கள்.

அந்த வகையில் டைட்டானிக்,அவதார் போன்ற மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சி ஏற்படுத்தி உள்ள ஹாலிவுட் படங்களை இயக்கியுள்ள இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தன்னுடைய கதைக்கு தேவையான தொழில்நுட்பங்களுக்காக காத்திருந்து உருவாக்கி தன்னுடைய படங்களில் அறிமுகப்படுத்தி பார்வையாளர்களை பிரமிக்க வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கு இன்றைய தொழில்நுட்பம் மட்டுமின்றி எதிர்காலத்தில் வரக்கூடிய தொழில்நுட்பம் குறித்த கணிப்புகளையும் இன்றே கணித்து செயல்படுத்தக்கூடிய அளவிற்கு திறமை பெற்றவர் அவர். கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற விக்ரம் படத்தில் பணியாற்றிய கலை இயக்குனர்கள் தொடங்கி ஸ்டண்ட் இயக்குனர்கள் வரை கமலஹாசனின் டெக்னாலஜி குறித்த அறிவையும் அவர் அறிந்து வைத்திருந்த தகவல்களையும் வியந்து பல பேட்டிகளில் பாராட்டியுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் ரசிகராக பண்ணிய படம் விக்ரம்.. இந்த படத்தில் துப்பாக்கிகள் ஒரு கதாபாத்திரமாகவே கையாளப்பட்டிருக்கும். ஒவ்வொரு நாளும் சூட்டிங் போதும் லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பிற்கு தேவைப்படும் துப்பாக்கியின் பெயர்களையும், ரகங்களையும் குறித்து கூறினால் மறுநாளே அந்த வகை துப்பாக்கிகளை கமல் கொண்டு வந்து விடுவாராம்.
இல்லை என்றால் அது எங்கு கிடைக்கும் என்ற தகவல்களை உடனுக்குடன் சொல்லி விடுவதை பார்த்து பலமுறை லோகேஷ் கனகராஜ் ஆச்சரியமடைந்துள்ளாராம்.
காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட பிறகு முதன் முறையாக அங்கு எடுக்கப்படும் சூட்டிங் விஜய் நடிக்கும் லியோ பட சூட்டிங் தான். படப்பிடிப்பிற்காக ஒட்டுமொத்தமாக கிளம்பி சென்ற படக்குழு காஷ்மீரின் கிளைமேட்டை பார்த்து அரண்டுவிட்டதாம்.
-13 டிகிரி, -14 டிகிரி வெப்பநிலை இருக்கும் காஷ்மீரில் படப்பிடிப்பை எப்படி நடத்துவது, எந்த வகையான கேமராவை கையாளுவது என்று அப்படத்தின் கேமரா மேன் மனோஜ் பரமஹம்சா மிகவும் குழம்பி விட்டாராம். இது குறித்து என்ன செய்யலாம் என்று தவித்த லோகேஷ் கனகராஜ்,கமலஹாசன் இடம் இந்த கேமரா பிரச்சனைக்கு தீர்வு கேட்டுள்ளார். கமலும் லோகேஷ் கனகராஜ் கேட்டவுடன் V Raptor xl என்ற ஹாலிவுட் சினிமாக்களில் பயன்படுத்தக்கூடிய கேமராவை பரிந்துரைத்துள்ளார்.
அந்த கேமரா வந்து இறங்கியதும் அதன் பெர்பாமென்ஸை பார்த்த லியோ பட கேமராமேன் மனோஜ் பரமஹம்சா தன் சமூக வலைதள பக்கத்தில் இனி அதிரி புதிரி சம்பவம் ஆரம்பம் என்று ட்விட் போட்டுள்ளார் . தன்னுடைய படத்திற்கு மட்டுமின்றி பிற நடிகர்களின் படமும் தரமாக வரவேண்டும் என்று நினைக்கும் பெருந்தன்மையும், உலக அளவிலான தொழில்நுட்பத்தை தகவல்களை தெரிந்து வைத்திருக்கும் ஒரு திறமைசாலி கமல் நம் தமிழ் சினிமாவில் இருப்பதை பலர் வியந்து பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications