Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீவித்யா என் காதலி தான்.. கல்யாணம் பண்ண முடியாம போனது இதனால் தான்.. வெளிப்படையாக பேசிய கமல்ஹாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் சில வருடங்களுக்கு முன்பு டிடி இடம் நடிகை ஸ்ரீ வித்யா பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் தனக்கு 19 வயதில் ஏற்பட்ட காதல் குறித்தும் அது நிறைவேறாமல் போனது குறித்தும் அந்த வீடியோவில் கமல்ஹாசன் பேசியிருக்கிறார்.

இதுவரைக்கும் ஸ்ரீவித்யாவிற்கும் கமல்ஹாசனுக்கும் காதல் என்று சில செய்திகள் பரவி வந்ததாக இருந்த நிலையில் அது குறித்து கமல்ஹாசன் விளக்கம் கொடுத்திருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Actor Kamal Haasan talking about Srividya love in Coffee with DD

நடிகை ஸ்ரீவித்யாவை 80ஸ், 90ஸ் ரசிகர்களால் மறந்து விட முடியாது. ஸ்ரீவித்யா முன்னணி நடிகையாக இருந்து பிறகு பல நடிகைகளுக்கு அம்மாவாகவும் குணசித்திர வேடங்களிலும் ஸ்ரீ வித்யா நடித்திருந்தார். அவருடைய இறப்பு பலராலும் இப்ப வரைக்கும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.

அதுபோல ஸ்ரீவித்யா தனியாக வாழ்ந்து வந்த நேரத்திலும் மரண படுக்கையில் இருக்கும்போது தான் பார்க்க ஆசைப்பட்ட ஒரே நபர் கமல்ஹாசன் தானாம். 1973 ஆண்டில் கே பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த சொல்லத்தான் நினைக்கிறேன் என்று திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனும் நடிகை ஸ்ரீவித்யாவும் ஒன்றாக நடித்திருந்தனர்.

அதுபோல 1975 இல் வெளியான அபூர்வ ராகங்கள் மற்றும் அன்னை வேளாங்கண்ணி என்னும் ஒரு சில திரைப்படங்களில் கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவும் நடித்திருந்தனர். அந்த நேரத்தில் தான் கமல்ஹாசன் மீது நடிகை ஸ்ரீவித்யாவிற்கு காதல் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அப்போது நடிகர் கமல்ஹாசனை வாணி திருமணம் செய்து இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு புன்னகை மன்னன் என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் ஒன்றாக நடித்திருந்தார்கள். அப்போது இருவருக்கும் அழகான நட்பும் நடிப்பும் வெளிப்பட்டது. அதைத்தொடர்ந்து பல வருடங்கள் கழித்து காதலா காதலா என்னும் திரைப்படத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்து இருந்தார்கள்.

பிறகு உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஸ்ரீ வித்யா கேரளாவுக்கு சென்றிருந்த நிலையில் தான் அங்கு அவருடைய கடைசி காலகட்டத்தை வாழ்ந்து இருக்கிறார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீவித்யா கமல்ஹாசனுக்கு திருமணம் முடிந்த பிறகு சார்ஜ் என்பவரை திருமணம் செய்திருந்தார்.

Actor Kamal Haasan talking about Srividya love in Coffee with DD

அவருக்காக ஞானஸ்தானம் பெற்று நடிக்க விரும்பாமல் வீட்டிலேயே இருக்க ஆசைப்பட்டு இருக்கிறார். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட பண பிரச்சனை காரணமாக சார்ஜ் அவரை கட்டாயபடுத்தி நடிக்க வைத்ததாக அந்த நேரத்தில் கூறப்பட்டது. பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்பது ஸ்ரீவித்யா சார்ஜிடமிருந்து விவாகரத்து வாங்கி தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார்.

பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடைசி காலகட்டத்தில் உடல்நிலை மோசமாக இருந்த நிலையில் ஸ்ரீவித்யா கமல்ஹாசனை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் அந்த ஆசை கமலுக்கு தெரிய வந்ததும் கமல்ஹாசன் ஸ்ரீவித்யாவை நேரில் சென்று பார்த்துவிட்டு வந்திருக்கிறார். அதற்கு பிறகு 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ஸ்ரீவித்யா மரணமடைந்திருக்கிறார்.

Actor Kamal Haasan talking about Srividya love in Coffee with DD

இந்த நிலையில் ஸ்ரீவித்யா குறித்து நடிகர் கமல்ஹாசன் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் சில வருடங்களுக்கு முன்பு பேசி இருக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நான் 19 வயதில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிச்சேன். அப்போ அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது நான் திறமையானவன் என்பதை எனக்கு உணர்த்தியது ஸ்ரீவித்யா தான்.

அவங்க எனக்கு தோழி மட்டுமல்ல எனக்கு காதலியும்தான் அதில் எந்த சந்தேகமும் இல்ல. அந்த படம் மூலமாக எங்களுக்கு ஏற்பட்ட காதல் கடைசி வரைக்கும் இருந்தது. அது கல்யாணத்தில் முடியனும் என்றெல்லாம் அவசியம் இல்லை. அதுபோல ஸ்ரீவித்யா ஒரு நல்ல நடிகையும் என்று அந்த பேட்டியில் கமல்ஹாசன் பேசி இருக்கிறார்.

அதுபோல ஸ்ரீவித்யா ஏற்கனவே ஒரு பேட்டியில் நானும் கமல்ஹாசனும் காதலித்த விஷயம் சினிமா இண்டஸ்ட்ரியில் எல்லாருக்கும் தெரியும். முதலில் எங்க ரெண்டு பேரு வீட்டிலேயும் தெரிந்ததும் சம்மதம் தான் சொன்னார்கள். அதற்குப் பிறகு என்னுடைய அம்மா கமல்ஹாசனிடம் நீங்க ரெண்டு பேருமே நல்ல நடிகர்கள் இருவரும் இந்த நேரத்தில் கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களுடைய வாழ்க்கை கெட்டுப் போய்விடும் என்று பேசினார்.

அதனால் கோபப்பட்டு கமல்ஹாசன் போய்விட்டார் என்னிடமும் கொஞ்ச நாளைக்கு பேசவே இல்லை. அந்த நேரத்தில் தான் திடீரென அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்ற செய்தி எனக்கு வந்தது. அது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.. பிறகு இருவரும் அப்படியே நாங்கள் பிரிந்து விட்டோம் என்று அந்த பேட்டியில் ஸ்ரீ வித்யா பேசி இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+