கமலின் ரகசிய குரு இவரா? துணி துவைக்க வந்த "மாஸ்டர்" தங்கப்பன்.. "அந்த" லெஜன்ட் வேற இருக்கிறாரே!
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் குருநாதர் பாலச்சந்தர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் சினிமாவில் முழு நேர நடிகர் ஆவதற்கு முன்பு டான்ஸ் மாஸ்டராக சாதிக்க வேண்டும் என்று விரும்பிய கமல்ஹாசன் குருநாதரை பற்றி பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்த குருநாதர் பற்றிய தகவல்களும் அந்த குருநாதர் மூலம் கிடைத்த தமிழ் சினிமாவின் முக்கிய லெஜன்டின் அறிமுகம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பிரபல சினிமா பத்திரிக்கையாளர்கள் சமீபத்தில் பகிர்ந்திருக்கிறார்.

களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பின்பு ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் ஒரு சிறந்த டான்ஸ் மாஸ்டர் ஆவதை தனது லட்சியமாக கொண்டிருந்தார் கமல்ஹாசன் . அதனாலேயே அனைத்து வகையான நடனங்களையும் முறையாக கற்றிருந்தார். என்னதான் நடனங்களை முறையாக கற்றிருந்தாலும் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர் ஆவதற்கு முதலில் ஒரு நல்ல டான்ஸ் மாஸ்டரிடம் அசிஸ்டெண்டாக பணியாற்றி அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக தானாக விருப்பப்பட்டு போய் சேர்ந்தவர் தான் தங்கப்பன் மாஸ்டர்.
தங்கப்பன் மாஸ்டர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். சிறுவயதில் ரயில் நிலையங்களில் போர்ட்டர்கள் கழிக்கும் சிறிய சிறிய சுமைகளை கூலிக்கு சுமந்து செல்லும் வேலையை செய்து வந்துள்ளார். பின்பு சென்னையில் துணி துவைப்பதற்கு ஆட்கள் தேவைப்பட்ட பொழுது திருவனந்தபுரத்தில் இருந்து ஒரு கூட்டம் அந்த பணிக்காகவே சென்னைக்கு வந்தது.
அந்த கூட்டத்தோடு துணிகளை துவைக்கும் தொழிலுக்காக சென்னை வந்து சேர்த்தார் தங்கப்பன்.அப்பொழுது இவர்கள் துணி துவைக்கும் இடம் அருகில் தான் சில சினிமா டான்ஸ் கலைஞர்கள் தங்கள் நடன பயிற்சிகளை மேற்கொள்வார்களாம். சிறுவனாக இருந்த தங்கப்பன் அவர்களை மறைந்திருந்து பார்த்து அவர்களைப் போல டான்ஸ் ஆடி காட்டி கிண்டல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.
அந்த நேரத்தில் ஒரு டான்ஸ் மாஸ்டர் இவரை கவனித்து கோபத்தில் காதை பிடித்து திருகி.. நடனம் ஆடுவது எவ்வளவு கடினம் தெரியுமா..? கேலி செய்கிறாயா..? என கண்டித்துள்ளார். முடிந்தால் ஒரு முறையாவது ஒரு சின்ன நடனமாடி காட்டு பாப்போம் என்று கூறியுள்ளார்.
அந்த டான்ஸ் மாஸ்டர் இசைத்த இசைக்கேற்ப சிறுவனாக இருந்த தங்கப்பன் நடனமாடி தனது திறமையை காட்ட மிரண்டு போன அந்த டான்ஸ் மாஸ்டர் தங்கப்பனின் திறமையை கண்டு வியந்து அவரை தனது நடன குழுவில் இணைத்து முறையாக நடனங்களை கற்றுக் கொடுத்துள்ளார்.நாளடைவில் தனது விடா முயற்ச்சியால் தங்கப்பன் மாஸ்டர் மிக முக்கியமான டான்ஸ் மாஸ்டராக மாற,அவரைப்பற்றி அறிந்த கமல் விரும்பிச் சென்று அவரிடம் அசிஸ்டெண்டாக சேர்ந்துள்ளார்.
கமலஹாசன் தங்கப்பன் மாஸ்டர் உடன் இணைந்து அவரது அசிஸ்டெண்டாக பணியாற்றிய நத்தலாலா என்ற கர்நாடக படத்தில் தான் தமிழ் சினிமாவின் முக்கிய லெஜெண்டின் அறிமுகம் கிடைத்துள்ளது.கமலஹாசன் தங்கப்பன் மாஸ்டரின் உதவியாளராக பணியாற்றிய நத்தலாலா என்ற கர்நாடக திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திடீரென்று படப்பிடிப்பிற்கு இரண்டு மூன்று நாட்கள் வரவில்லை.
அப்பொழுது அவசரத்திற்காக வேறொரு கேமரா மேனை வைத்து படப்பிடிப்பை தொடர்ந்து உள்ளனர். புதிதாக வந்த கேமரா மேன் பையனின் வொர்க் ஸ்டைலை பார்த்து வியந்த தங்கப்பன் மாஸ்டர், கமலிடம் வந்து புதிதாக ஒரு பையன் கேமரா மேன் ஆக வந்துள்ளான். மற்ற கேமரா மேன்களைப் போல் பெரிய பெரிய லைட்டுகளை பயன்படுத்தாமல்,சதாரணமாக ஜன்னல்களில், கதவுகளை மட்டும் திறந்து வைத்து இயற்கை வெளிச்சத்திலேயே ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கிறான் என்று வியந்து கூறியுள்ளார்.
தற்பொழுது போல் அந்த காலத்தில் கிடையாது, பிலிம்மில் தான் படத்தை எடுக்க வேண்டும். அதை லேப் க்கு கொண்டு சென்று டெவலப் செய்து பார்த்தால் மட்டுமே எந்த அளவு வெளிச்சத்தில் எப்படி படம் ஒளிப்பதிவாகி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.சரியாக பதிவாகவில்லை என்றால் எடுத்த அத்தை காட்சியும் வீண் தான்.
அப்படி இருக்க எந்த வித பயமும் இன்றி துணிச்சலாக அவ்வாறு படம் பிடித்த அந்த கேமரா மேன் பற்றி தனது குருநாதர் தங்கப்பன் சொன்னதை கேட்டு வியந்த கமல், நாம் எப்படியாவது இவருடன் பிரண்ட்ஷிப் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்வத்துடன் அவரிடம் சென்று பேச ஆரம்பிக்கிறார். அவரும் கமலின் அணுகுமுறை பிடித்து போய் நட்பாக பேசுகிறார்.
கேமரா குறித்த கமலின் பல கேள்விகளுக்கு விளக்கமாக பதிலும் கூறுகிறார். பின்னாளில் கமல் நடிகராக உருவெடுத்த போதும் அந்த கேமரா மேன் கமலை வைத்து படங்களையும் இயக்குகிறார். அந்த கேமராமேன் வேறு யாரும் இல்லை இன்றைய தமிழ் சினிமாவில் பல கேமராமேன் மற்றும் இயக்குனர்களின் வழிகாட்டியாக இருக்கும் பாலு மகேந்திரா தான்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications