என் பொண்டாட்டிய லவ் பண்றியானு சூர்யா மிரட்டினாரு! கஷ்டமா இருந்துச்சு, டூரிஸ்ட் ஃபேமிலி பிரபலம் ஓபன்
சென்னை: கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகி டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவர் நடிகர் சூர்யா தன்னை சூட்டிங் ஸ்பாட்டில் வந்து மிரட்டினார், அதுவும் நீ என் பொண்டாட்டிய லவ் பண்றியா என்று கேட்டு மிரட்டினாரு என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் பலருடைய ஃபேவரைட் ஜோடிகளில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இருக்கிறார்கள். பல நடிகர்கள் நடிகைகள் ஒன்றாக நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த தம்பதியும் பல வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அந்த நேரத்தில் இந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது. திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கும் ஜோதிகா இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

ராட்சசி திரைப்படம்
அதிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஜோதிகா மற்றும் சூர்யா பற்றி டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்பட நடிகர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜோதிகா நடித்த ராட்சசி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிறுவன் கமலேஷ் இப்போது டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
ஜோதிகாவுடன் நடிப்பு
அவர் ஜோதிகாவுடன் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து சமீபத்தில் பேசி இருக்கிறார். திரைப்படத்தில் நான் ஜோதிகா மேடம் உடன் நடிக்கும் போது ஒரு முறை சூர்யா சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்தார். வந்ததும் யார் அவன் கதிர் என்று கேட்டார். ராட்சசி படத்தில் என்னுடைய பெயர் கதிர் அதனால் அவர் அப்படியே கூப்பிட்டார். கதிரை கூப்பிடுங்க என்று சொன்னதும் அங்கிருந்தவர்கள் ஏன் இவர் வந்ததும் இப்படி சொல்கிறார் என்று குழப்பத்தில் இருந்தனர்.

சூர்யா கேட்ட கேள்வி
நானும் கொஞ்சம் பயத்தோடுதான் அவர் முன்பு சென்றேன். அவர் என்னை பார்த்து என்ன என் பொண்டாட்டியை நீ லவ் பண்றியா? நைட் உன்னை பத்தி தான் பேசுறா என்று சொன்னாரு. அதற்கு நான் இல்ல சார் அப்படி நடிக்கச் சொன்னாங்க, அதான் அப்படி நடிச்சேன் என்று சொன்னேன். அதற்கு அவர் நான் சும்மா மிரட்டி பார்த்தேன், சாப்டியா என்று கேட்டார். சூர்யா சார் முதலில் கேட்டபோது பயந்தேன் பிறகு அவர் செம ஜாலியான ஆள் என்று எனக்கு தெரிந்தது.

ராக்ஸ்டார்
ஜோதிகா மேடம் என்னுடைய பிறந்த நாளுக்காக ஒட்டுமொத்த செட்டுக்கும் பிரியாணி போட்டார். அவரும் என் மீது பாசமாக இருப்பார் என்று அந்த பேட்டியில் கமலேஷ் பேசியிருக்கிறார். கமலேஷ் ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவருக்கு ராக்ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. இப்போது நடிகர் விஜயின் மகன் இயக்கும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். அதற்கு குறித்து கூட பேட்டிகளில் பேசிக் கொண்டிருக்கிறார். டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் நடித்து கமலேஷ் பலருடைய செல்ல பிள்ளையாக மாறி இருக்கிறார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications