விஜய் டிவி சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் கார்த்தி.. இப்படி ஒரு சங்கமமா? எதிர்பார்க்காத விஷயம்!
சென்னை: நடிகர் கார்த்தி திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் அந்த சீரியலில் நடிகர்களோடு புகைப்படம் எடுத்து இருக்கிறார். இந்த புகைப்படம் இப்பொழுது இணையதில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் சமீபத்தில் தொடங்கப்பட்டிருந்தாலும் ஆரம்பத்தில் இந்த சீரியலும் முதல் சீசன் போலவே இருக்கிறதே என்று ரசிகர்கள் பீல் பண்ணி வந்தனர். காரணம் முதல் சீசனில் அண்ணன் தம்பி கதையை இங்கே அப்பா மகன்கள் கதையாக மாற்றி இருக்கிறார்கள். அதுபோல முதல் சீசனில் நடித்த ஒரு சில நடிகர்கள் இதிலும் ரிப்பீட் ஆகி இருக்கிறார்கள்.

ஆனால் நாட்கள் போகப்போக இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பிடிக்கத் தொடங்கிவிட்டது. அதிலும் இந்த சீரியல் பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலின் சங்கமத்திற்கு பிறகு பெரிய அளவில் பிரபலமடைந்து இருக்கிறது. அதிலும் ராஜி மற்றும் கதிர் திருமணத்திற்கு பிறகு இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகரித்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு எப்போது இனி வாழ்க்கையை தொடங்குவார்கள் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அதனாலேயே இந்த சீரியலின் டிஆர்பி மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. டாப் 10 இடங்களுக்குள் இந்த சீரியல் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் இந்த சீரியலில் கதிராக நடிக்கும் நடிகர் ஆகாஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோ வெளியிட்டு இருக்கிறார். அதுதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த சீரியலில் நடிகர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது அங்கு நடிகர் கார்த்தியும் வந்திருக்கிறார். அவரோடு எடுத்த புகைப்படத்தை ஆகாஷ் வெளியிட்டு இருக்கிறார். அதற்கு ஆகாஷ், "வந்தியதேவனை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 குழுவினர் சந்தித்த வேளை. இது எதிர்பார்க்காமல் நடந்த சூட். நாங்கள் வேண்டிக் கொண்டதால் கார்த்தி வந்திருந்தார்" என்று ஆகாஷ் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதனால் இந்த சீரியலின் சிறப்பு காட்சிகளில் கார்த்தி நடித்திருக்கிறாரா? என்ற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. அதே நேரத்தில் ரசிகர்கள் இந்த போஸ்ட்க்கு கீழே பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 மற்றும் பொன்னியின் செல்வன் 2.. இது மெகா சங்கமமாக இருக்கிறதே என்று கலாய்த்து வருகிறார்கள். அதுபோல நடிகர் கார்த்தி வரும் வார எபிசோடில் வருவாரா? என்பதும் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இல்லை என்றால் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியலின் சூட்டிங் ஸ்பாட்டில் கார்த்தியின் திரைப்படத்திற்கான சூட்டிங் நடைபெற்ற போது இவர்கள் சந்தித்தார்களா? என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் எது எப்படியோ இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் இப்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. உண்மையில் கார்த்தி இந்த சீரியலில் வரப்போகிறாரா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications