பூ நடிகையை விடுங்க.. 7 ஸ்டாரில் ஒருவராக உயர்ந்த நவரச நாயகன்.. கார்த்திக்கின் அபார டேலண்ட்: பிரபலம்
சென்னை: நவரச நாயகன் என்ற பட்டத்தை விரைவாக பெற்றவர் நடிகர் கார்த்திக்.. ஆனால், அவர்மீது வைக்கப்படும் ஒரே குற்றச்சாட்டு, திடீரென ஷூட்டிங்கிலிருந்து காணாமல் போய்விடுவார்.. 15 நாள் எங்கே இருக்கிறார் என்றே யாருக்கும் தெரியாது" என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.. அத்துடன் நடிகர் கார்த்திக் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்..
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருக்கும் சபிதா ஜோசப், "நடிகர் கார்த்திக்கின் இயற்பெயர் முரளி.. பாரதிராஜாதான் இவருக்கு கார்த்திக் என்று பெயர் வைத்தார்.. முதல் படம் வெளியானதுமே அவரது அப்பா இறந்துவிட்டார்.. இதனால் அடுத்தடுத்த படங்களின் கதைகளை எப்படி தேர்வு செய்வது என்பது தெரியாமல் திணறிவிட்டார். பிறகு மெல்ல மெல்ல மேலே உயர்ந்தார்..

ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, சரத்குமார், வரிசையில் கார்த்திக் வந்தார்.. இவர்கள் 7 பேரும்தான் அன்றைய சினிமாவை தாங்கி பிடித்தவர்கள்.. நவரச நாயகன் என்ற பட்டத்தை விரைவாக பெற்றார்.. ஆனால், அவர்மீது வைக்கப்படும் ஒரே குற்றச்சாட்டு, திடீரென ஷூட்டிங்கிலிருந்து காணாமல் போய்விடுவார்.. 15 நாள் எங்கே இருக்கிறார் என்றே யாருக்கும் தெரியாது..
பாண்டிய நாட்டு தங்கம்
பாண்டிய நாட்டு தங்கம் படம், கார்த்திக்குக்கு மிகப்பெரிய பிரேக் தந்த படம்.. அந்த படத்தில் சரியாக ஒத்துழைப்பு தராததால், "கார்த்திக் முகத்தில் ஆசிட் அடிப்பேன்" என்று, அந்த படத்தின் தயாரிப்பாளர் சங்கிலி முருகன் மிரட்டியதாக சொல்வார்கள்..
ஆனால், சங்கிலி முருகன் அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டார். காரணம், சங்கிலி முருகன், அந்த படத்தின் டைரக்டர் டிபி கஜேந்திரன், கார்த்திக், பிரபு இவர்கள் எல்லாருமே முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.. யாரும் ஒருவரையொருவர் விட்டுத்தர மாட்டார்கள்..
அன்பான சங்கிலி முருகன்
மென்மையான, அன்பான எச்சரிக்கையாக வேண்டுமானால் அவ்வாறு ஆசிட் வீசுவதாக சொல்லியிருப்பார்களே தவிர, கடினமான வார்த்தைகளை எப்போதுமே விடமாட்டார்கள்.
அதிலும், சங்கிலி முருகன் மென்மையான நபர்.. இளையராஜாவுக்கு ரொம்பவும் பிடித்தமானவர் சங்கிலி முருகன். சில படங்களுக்கு பணம் வாங்காமலேயே இளையராஜா சங்கிலி முருகனுக்காக இசையமைத்து தந்துள்ளார்.. அதேபோல கார்த்திக் என்றாலே அனைவருக்குமே பிரியம்.. அவரிடமும் யாருமே கடுமையாக பேசமாட்டார்கள்.. இதே சங்கிலி முருகன் பேனரில் கார்த்திக் நான்கைந்து படங்களில் நடித்துள்ளார்..
2 கோடி ரூபாயா
பல நடிகைகளுடன் கார்த்திக் மீது நிறைய கிசுகிசுக்கள் உண்டு.. இதில் பூ பெயர் கொண்ட ஒரு நடிகை மட்டுமே கார்த்திக் மீது புகார் சொன்னாராம்.. கார்த்திக்கை அந்த நடிகை அதிகமாக நேசித்திருக்கிறார்.. அவருடன் சேர்ந்து நடிக்கவும் ஆசைப்பட்டு சில படங்களிலும் நடித்திருக்கிறார்.
திடீரென அந்த நடிகை, தான் கர்ப்பமாக இருப்பதாக சொல்லி, 2 கோடி ரூபாய் மிரட்டி வாங்கியதாக கேள்விப்பட்டுள்ளேன்.. இப்படி தன்னை ஏமாற்றி நடிகை பணம் வாங்கியது, அடுத்தடுத்த படங்கள் சரியாக ஓடாதது என பல வழிகளில நொந்துபோய்விட்டார் கார்த்திக்.. ஆனால் மிகச்சிறந்த நடிகர்" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம்












Click it and Unblock the Notifications