பிரச்சாரத்துக்கு போன நடிகர் கார்த்திக் செய்த செயல்.. குதூகலமான தொண்டர்கள்.. எவ்வளவு எனர்ஜி பாருங்க
சென்னை : தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் நிலையில், மனித உரிமை காக்கும் கட்சித் தலைவர் மற்றும் நடிகரான கார்த்திக் திடீரென களமிறங்கி பிரச்சாரம் செய்தது பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் குரு முருகானந்தத்தை ஆதரித்து, சிவகங்கை மற்றும் இடையமேலூர் பகுதிகளில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். மேலும் மதுரை, சாத்தூர் போன்ற பகுதிகளிலும் தொடர்ந்து கார்த்திக் பிரச்சாரம் செய்து வருகிறார்.

நடிகர் கார்த்திக் தேர்தல் பேச்சு
பிரச்சாரத்தின் போது பேசிய கார்த்திக், ஆரம்பத்திலேயே ஓபனாக பேசத் தொடங்கி விட்டார். "நான் யாரையும் குறை சொல்ல வரவில்லை. ஆனால் அதர்மம் அதிகரிக்கும்போது அதை எதிர்க்க யாரோ வரணும். அதற்காகத்தான் இப்போது வி.கே. சசிகலா களத்தில் இறங்கியிருக்கிறார். அவருக்கு ஆதரவாக நானும் வந்திருக்கேன்," என்றார்.
அவர் மேலும், "சசிகலா பழி வாங்க வரவில்லை. நியாயம் கேட்க வந்திருக்கிறார். அவர் வருகை தமிழக அரசியலைவே புரட்டி போட்டுவிட்டது" என்று கார்த்திக் பேசி இருக்கிறார்.
உண்மை புரிஞ்சது
சசிகலா குறித்து பேசும்போது கார்த்திக் உணர்ச்சிவசப்படவும் செய்தார். "ஒரு மனிதர் எவ்வளவு துன்பம் அனுபவிச்சிருக்கிறார் என்பதைக் காண வேண்டும்னா அவரை நேரில் சந்திக்கணும். மேலோட்டமா பேசுறது வேற, உண்மை வேற," என்று கூறினார். அவருடைய பேச்சு முழுவதும் சசிகலாவுக்கு ஆதரவாகவே இருந்தது.
தமிழ், தமிழர் குறித்து எச்சரிக்கை
அரசியல் பேச்சில் மட்டும் இல்லாமல், மொழி மற்றும் அடையாளம் குறித்தும் கார்த்திக் கருத்து தெரிவித்தார். "தமிழ், தமிழர் உரிமை என்று சிலர் பேசுறாங்க. ஆனா நடைமுறையில் தமிழை காக்கிறதுக்கு என்ன செய்கிறாங்க? தமிழை பாதுகாக்க வேண்டியது நம்ம பொறுப்பு," என்று அவர் கூறியதும் கூட்டத்தில் இருந்தவர்கள் கைதட்டினர்.
கார்த்திக் பாட்டு
இந்த பிரச்சாரத்தில் அரசியல் பேச்சு மட்டும் இல்லாமல், சினிமா ஃபீலும் கலந்தது தான் ஹைலைட்.
பல வருடங்களுக்கு பிறகு மக்கள் முன்னிலையில் வந்த கார்த்திக், தனது பிரபலமான பாடலான
"வெத்தல போட்ட சோக்குல..." பாடலை பாடியதும், அங்கிருந்த ரசிகர்கள் முழுக்க குதூகலத்தில் மிதந்தனர். அந்த தருணம், பிரச்சார கூட்டத்தை ஒரு மினி நிகழ்ச்சியாகவே மாற்றியது.

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் என்ட்ரி
பல ஆண்டுகளாக அரசியல் மற்றும் சினிமாவில் அதிகமாக வெளியில் தெரியாமல் இருந்த கார்த்திக், இப்படி திடீரென பிரச்சாரத்தில் கலந்துகொண்டது அவரது ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது. "இத்தனை நாளைக்கு பிறகு கார்த்திக் சார் மீண்டும் பப்ளிக்காக வந்திருக்கார்" என்று பலரும் உற்சாகமாக பேசிக்கொண்டனர்.
தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படிப்பட்ட பிரபலங்களின் வருகை களத்தை இன்னும் சூடுபிடிக்க வைத்திருக்கிறது.
-
சிவி சண்முகத்துக்கு கடைசி சான்ஸ் இதுதான்! எடப்பாடியின் முன் மண்டியிடும் 14 பேர்! பின்னணி காரணம் என்ன -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
லீமா ரோஸ் செய்த டீல்? குதிரை வேகத்தில் குதிரை பேரம்? 20 கோடிக்கு 10 அதிமுக எம்எல்ஏ வர்ற போறாங்களாமே -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
கூட்டுறவு சங்க பயிர்க்கடன் தள்ளுபடி.. விஜய் அரசு தந்த அல்வா! 2024 முதலே கணக்கெடுங்க: சீறிய எஸ்டிபிஐ -
69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்தா? சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை.. விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications