சைலண்டாக மகளின் திருமணத்தை நடத்தி முடித்த கருணாஸ்.. இணையத்தில் வெளியான புகைப்படங்கள்
நடிகர் கருணாஸ் மகள் டயானாவின் திருமணம் நடைபெற்று இருக்கிறது. அவருடைய திருமண புகைப்படத்தை கென் கருனாஸ் இணையத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
சென்னை: காமெடியனாக அறிமுகமாகி கதாநாயகனாக அனைவரையும் ரசிக்க வைத்த நடிகர் கருணாஸின் மகள் டயானாவிற்கு தற்போது திருமணம் முடிவடைந்து இருக்கிறது.
பெரிய அளவில் வெளியே தெரியாத வகையில் நடிகர் கருணாஸ் மகள் திருமணம் சற்று முன்பு நடந்து முடிந்த நிலையில் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் கருணாஸின் மனைவி மற்றும் மகள் மூவருமே சினிமாவில் பிரபலமாக இருக்கும் நிலையில் மகள் மட்டும் டாக்டராக இருக்கிறார்.

லொடுக்கு பாண்டி
நடிகர் கருணாஸ் முதல் முதலாக பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா திரைப்படத்தின் மூலமாக காமெடியனாக அறிமுகமாகி, அந்த திரைப்படத்தில் இவருடைய லொடுக்கு பாட்டி என்ற கேரக்டராலே இவர் பிரபலமடைந்து விட்டார். அந்த கேரக்டரோடு இவர் ஒன்றி போன நடிப்பு இவரை பலருக்கும் பரீட்சையமாக்க துவங்கி விட்டது. முதல் திரைப்படத்திலேயே இவருக்கு கிடைத்த வாய்ப்பு சரியாக பயன்படுத்தப்பட்டதால் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்கள் வந்த வண்ணமாக இருந்தது. தனுஷ் உடன் திருடா திருடி, சிம்புவுடன் குத்து, அஜித் உடன் வில்லன் என்று இவர் நடித்த பல படங்கள் ஹிட்டானதால் இவர் ஒரு காமெடியனாக ஜொலித்துக் கொண்டிருந்தார்.

திரைப்படங்களில் கதாநாயகன்
காமெடியானாக இருந்து பிறகு திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக மாறி அதுவும் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுவிட்டது. நடிகர் கருணாஸ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர் ஆகவும், இசை அமைப்பாளராகவும், அரசியல் பிரமுகராகவும் பன்முகத் திறமை கொண்டவராக விளங்கி வருகிறார். அவர் மட்டும் அல்லாமல் அவருடைய மனைவி கிரேஸும் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். நடிகர் கருணாஸ் மற்றும் கிரேஸ் இணைந்து பாடிய திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பாடல் இளைஞர்களின் குத்து பாடல் வரிசையில் இப்ப வரைக்கும் இடத்தை பிடித்திருக்கிறது.

கருணாசின் குடும்பம்
கருணாஸ் கிரேஸ் இவர் பாடகியாக மட்டுமல்லாமல் சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். நடிகர் கருணாஸ் மற்றும் அவருடைய மனைவி கிரேஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தனர். இவர்களுக்கு டயானா என்கிற மகளும் கென் என்கிற மகனும் இருக்கின்றனர். இதில் அவருடைய மகன் கென் சிறு வயதிலிருந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் இவருக்கு பெரிய அளவில் ஹிட் கொடுத்தது என்றால் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படத்தில் தனுஷின் மகனாக நடித்தது. இந்த திரைப்படத்திற்காக பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.

வெளியான திருமண புகைப்படங்கள்
அது மட்டும் அல்ல அழகு குட்டி செல்லம், ரகளபுரம் போன்ற படங்களிலும் கென் நடித்திருக்கிறார். அதோடு அவருடைய அம்மாவான கிரேஸ் உடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாடிய வாடா ராசா என்கிற ஆல்பம் பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்தது. கருணாஸ் குடும்பத்தில் மூன்று பேரும் சினிமாவில் பாப்புலராக இருந்தாலும் மகள் டயானா மட்டும் சினிமா பக்கம் வராமல் இருந்து வந்தார். டயானா டாக்டருக்கு படித்துள்ள நிலையில் தற்போது சைலன்டாக திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார் கருணாஸ். தனது அக்காவின் திருமண புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கென் கருணாஸ், வாழ்த்துக்கள் மாமா &அக்கா என வாழ்த்தி இருக்கிறார். இதை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் இந்த புகைப்படங்கள் அதிகமாக பகிரிடப்பட்டு வருகிறது.
-
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications