Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவின் ஆட்டிடியூட்.. வெற்றிமாறனை மாஸ்க் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்ததுமே வாலை சுருட்டி.. பிரபலம் பளிச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும், மாஸ்க் என்ற படத்தில் கவின் நாயகனாக நடித்து வருகிறார்.. இந்த ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை பற்றின தகவல் ஒன்றை, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் கவின்.. பிறகு சினிமாவில், அவர் நடித்து, ஆரம்பத்தில் அவரது 2 படங்கள் வெற்றி பெற்றிருந்தன.. ஆனால், பிளடி பெக்கர், ஸ்டார் போன்ற படங்கள் வெற்றி பெறவில்லை..

Television actor kavin vetrimaran

வெற்றிமாறன் படம்

கிஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள கவின், வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் என்ற படத்திலும் தற்போது நடித்து கொண்டிருக்கிறார்.. இதற்கு வி.கர்ணன் அசோக் கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார்.. கவினுடன், ஆண்ட்டிரியா நடித்துள்ளார்.. வெற்றிமாறனுடன் இணைந்து ஆண்ட்ரியாவும் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

மாஸ்க் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கவினின் தலையீடு அதிகமாக இருந்ததாக சொல்கிறார்கள். கேமராவை இங்கே வை, இந்த வசனத்தை மாற்று, சீனை மாற்றணும் என்றெல்லாம் டார்ச்சர் செய்தாராம்.. இதனால், டைரக்டர் கர்ணன் அசோக் பொறுத்து பொறுத்து பார்த்து, ஒருகட்டத்தில் பொறுக்காமல், நொந்து மன உளைச்சல் ஆளாகி, இந்த விஷயத்தை வெற்றிமாறன் காதில் போட்டாராம்.

தலையீடு இல்லை

உடனே தயாரிப்பாளர் என்ற முறையில், மாஸ் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வெற்றிமாறன் வரத்துவங்கிவிட்டாராம்.. ஸ்பாட்டில் வெற்றிமாறனை கண்டதும், எந்த தலையீடும் செய்யாமல், இப்போது கவின்அமைதியாக நடித்து வருவதாக படக்குழுவினர் கூறுகிறார்கள். வெற்றிமாறனை கண்டதும் வாலை சுருட்டிக் கொண்டாராம்" என்று தெரிவித்துள்ளார்.

உனக்கென்னய்யா தெரியும்

சமீபத்தில் பிரபல தயாப்பாளர் பாலாஜி பிரபுவிடம், சிவகார்த்திகேயனுடன் மோதும் கவின் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பாலாஜி பிரபு, "கவின் மீது ஒருவித எதிர்பார்ப்பு இருப்பது உண்மைதான் என்றாலும், நடத்தை காரணமாகவே, வாய்ப்புகளை கவின் இழந்துவிடுவாரா? என்று தோன்றுகிறது.

ஒரு டைரக்டரை, "நீ போய் அங்கே உட்காருய்யா, உனக்கென்ன தெரியும்? நான் பார்த்துக்கறேன்"னு கவின் சொன்னதாக கேள்விப்பட்டேன். அதேபோல, ஒரு டான்ஸ் மாஸ்டரிடம், "நீ என்னய்யா மூவ்மென்ட் சொல்லி தர்றே? நானே ஆடறேன்" என்று கவின் சொன்னதாகவும் கேள்விப்பட்டேன்.. இதெல்லாம் ஒரு ஆட்டிடியூட் பிஹேவியர்..

2 படம், 3 படம் நடித்து வளர்ந்து வரும் ஒரு நடிகருக்கு இதெல்லாம் ரொம்ப அதிகம்.. இப்பவே இப்படியென்றால் நாளைக்கு சூப்பர் ஸ்டாராக மாறினால்?

இளையராஜாவுக்கு திமிரா

விஜய்யின் கேரவன்தான் தனக்கு வேண்டும் என்று கவின் கேட்கிறாராம்.. நிறைய ஆட்டிடியூட் காட்டுவதாக சொல்கிறார்கள்.. ஒரு கட்டிடத்தின் 2வது மாடியில் ஷூட்டிங் நடந்தபோது, திடீரென லிப்ட் ரிப்பேர் ஆகிவிட்டது.. உடனே கேரவனில் போய் உட்கார்ந்து கொண்டு, லிப்ட் ரெடியானதும் சொல்லுங்கள் என்றாராம்.

17, 18வது மாடியில் ஷூட்டிங் என்றால் பரவாயில்லை.. 2வது மாடிக்கே லிப்ட் இருந்தால்தான் போவேன் என்றால் எப்படி? இதுபோன்ற நபர்களை ஒப்பிடும்போது, எத்தனையோ உயரத்துக்கு சென்ற இளையராஜா திமிராக இருப்பதில் ஒன்றும் தப்பேயில்லை" என்று தெரிவித்திருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+