நடிகர் கவின் வருங்கால மனைவி, லாஸ்லியாவின் தோழி..? வெளியான புகைப்படம்.. தெரியாத கதையா இருக்கு..?
சென்னை: நடிகர் கவின் இன்னும் ஒரு சில வாரங்களில் அவருடைய சிறு வயது தோழியை திருமணம் செய்யப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது
அதே நேரத்தில் கவின் உடைய வருங்கால மனைவி கவின் உடைய முன்னாள் காதலி லாஸ்லியா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் லாஸ்லியா மற்றும் கவின் உடைய வருங்கால மனைவி மோனிஷாவிற்கும் இடையே என்ன உறவு என்பது பற்றி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதை விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலமாக வேட்டையன் கேரக்டரில் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பிரபலமான கவின் இந்த நிகழ்ச்சிக்கு முன்பு கேமராவுக்கு பின்னாடி இருந்து தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இவரிடம் சிலர் உனக்குள் இருக்கும் நடிப்பு திறமை வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்று சொன்னதை தொடர்ந்து தான் இவர் சினிமாவிலும், சீரியலிலும் நடிக்க தொடங்கினார்.
சரவணன் மீனாட்சி சீரியலை தொடர்ந்து நட்புனா என்னென்ன தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலமாக கவின் ஹீரோவாக அறிமுகமானார். முதல் திரைப்படம் பெரிய அளவிற்கு வெற்றியை கொடுக்க விட்டாலும், அடுத்து லிப்ட், டாடா என்ற திரைப்படங்களின் மூலமாக வேகமாக வளர்ந்து வரும் நாயகனாக உருமாறி இருக்கிறார்.

அத்தோடு கவினுக்கு அதிகமான பெண் ரசிகைகளும் இருக்கின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி இருந்தார். அந்த நிகழ்ச்சியில் இவரோடு பங்குபெற்ற சக போட்டியாளரான லாஸ்லியாவுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் மறைமுகமாகவே பேசி பழகிக் கொண்டனர்.
ஆனாலும் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் இருவரும் பிரிந்து விட்டார்கள். பிறகு இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் எங்களுடைய பயணத்தை நோக்கி நாங்கள் போகிறோம் என்று விளக்கமும் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் கவினுக்கு வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மோனிகா என்ற பெண்ணோடு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அத்தோடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன்பே கவினுக்கு மோனிகாவிற்கும் நட்பு இருந்திருக்கிறது.
சமீபத்தில் கவின் மோனிகா பற்றி 30 வருடமாக என் கூடவே இருந்த என்னுடைய நல்ல தோழியே எனக்கு மனைவியாக வருவார் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்று கூறியிருந்தார். அத்தோடு இவர்களுடைய காதல் கதை திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகர் தனுஷின் காதல் கதை போன்று எடுப்பதாகவும் பலரும் கூறி வந்தனர். இந்த நிலையில் லாஸ்லியாவிற்கும் ஸ்டைலிசாக மோனிகா டேவிட் பணியாற்றி இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே லாஸ்லியாவுக்கும், மோனிகாவுக்கும் நல்ல நட்பு இருந்திருக்கிறது என்றும் இப்போது சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications