Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kavin: கவின் சொன்ன அட்வைஸ் விஜய்யை தாக்கி தானா? போகிற போக்கில் புது குண்டு! பின்னணியில் நடந்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருக்கும் மாஸ்க் திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கான பிரமோஷனில் கவின் பேசிய விஷயம் தான் இப்போது சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கவின் தன்னுடைய ரசிகர்கள் மீது இருக்கும் பாசத்தால் பேசியதாக அவருடைய ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். இன்னும் சிலர் கவின் விஜய்யைத் தான் தாக்கி பேசினார் என்று சொல்லி வருகின்றனர் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

விகர்ணன் அசோக் இயக்கத்தில் கவின் ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ள மாஸ்க் திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கிறது. இன்று மாஸ்க்கு திரைப்படத்தோடு ஆறு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இதனால் எந்த படத்தை பார்க்க போகலாம் என்பது பலருடைய கேள்வியாகவும் தேடலாகவும் இருக்கிறது. படத்திற்கான விமர்சனம் வந்ததும் அதை பார்த்துவிட்டு போகலாம் என்று சிலர் காத்திருக்கின்றனர்.

Actor Kavin Vijay bigg boss

ஃபேமிலி ஆடியன்ஸை டார்கெட் செய்யும் வகையில் இந்த வாரம் படங்கள் வெளியாகி இருக்கிறது. அதுவும் பெரிய ஹீரோ படங்கள் இல்லாமல் புதுமுக நடிகர்கள் மற்றும் சென்டிமென்ட் படங்களாக இருப்பதால் ஒரு சிலர் நாளைக்கு பார்க்க போகலாமா? நாளை மறுநாள் பார்க்க போகலாமா? என்றும் சோசியல் மீடியாவில் விவாதித்து வருகின்றனர்.

அதேபோல கவின் நடிப்பில் உருவான மாஸ்க் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளரும் ஆண்ட்ரியா தான். அவர் நான் வீட்டு மேல கடன் வாங்கி தான் இந்த படத்தை எடுத்து இருக்கிறேன். படம் நன்றாக வரும் என்று நம்பிக்கை இருக்கு என்றெல்லாம் பேசியிருந்தார். அதேபோல கவின் இந்த படத்திற்கான பிரமோஷனில் பேசும்போது விஜயை தாக்கி பேசி விட்டார் என்றெல்லாம் சொல்லி இருக்கின்றனர்.

அதாவது கவின் மதுரைக்கு பிரமோஷனுக்காக சென்றிருந்தார். அங்கு ஒரு காலேஜில் ப்ரோமோஷன் விழா நடந்தது. அப்போது கவின் படத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது அந்த நேரம் உங்களுக்கு காலேஜ் இருக்கும். அதனால் முதலில் படிப்பு தான் முக்கியம், வெள்ளிக்கிழமை யாரும் படம் பார்க்க வரவேண்டியதில்லை. சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் இருக்கிறது. அப்போது வந்து படத்தை பார்த்துக் கொள்ளுங்கள், சினிமா ஒரு பொழுதுபோக்கு தான் உங்களுக்கு படிப்பு தான் முக்கியம் என்று சொல்லி இருந்தார்.

அதுபோல இன்னொரு ப்ரோமோஷனில் பேசும்போது ஒரு ரசிகர் கவின் பிரமோஷனுக்காக போகும் இடம் எல்லாம் தான் வருவதாகவும் இனி அடுத்து நீங்க எங்க போறீங்களோ அங்கேயும் வருவேன் என்றும் சொன்னார். அதற்கு கவின் முதலில் வேலையை பாருங்க, வேலை செஞ்சு பணத்தை சம்பாதிங்க உங்க குடும்பத்தை பார்த்துக்கோங்க. நானும் என் குடும்பத்தை கவனிக்கறதுக்காக தான் படம் நடிக்கிறேன் குடும்பத்தை விட்டுட்டு மத்தது எதுவும் முக்கியமில்ல என்றும் பேசி இருந்தார்.

பொதுவாக இதுவரைக்கும் எந்த பெரிய நடிகர்களும் இதுபோல முதல் நாள் சினிமா காட்சியை பார்க்க வேண்டாம் என்று சொன்னதில்லை. சமீபத்தில் அஜித் ஒரு பேட்டியில் முதல் நாள் தியேட்டரில் ரசிகர்கள் கூடுவது குறித்து பேசி இருந்தார். மத்தபடி பெரிதாக யாரும் பேசவில்லை என்றாலும் வளர்ந்து வரும் கவின் இப்படி வெளிப்படையாக பேசியிருக்கிறார் என்று பலர் பாராட்டி வந்தனர். சிலர் கவின் பேசியது விஜயை டார்கெட் செய்து அடித்தது போல இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

ஏனென்றால் விஜய்யின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடக்கும் போது அங்கு அதிகமான ரசிகர்கள் வரவேண்டும் என்பதற்காக புஸ்ஸி ஆனந்த் பேசும்போது ஆபீஸில் வேலை பார்ப்பவர்கள் காலேஜுக்கு போகிறவர்கள் எல்லோரும் அன்னைக்கு ஒரு நாள் எங்களால் வர முடியாதுன்னு அவங்களுடைய ஆபீசுக்கோ, கல்லூரிக்கோ சொல்லிருங்க. நமக்கு மாநாடு தான் முக்கியம் என்று பேசி இருந்தார். இது அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்டது.

இப்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் கவின் இப்படி பேசி இருக்கிறார்கள் என்று சிலர் முடிச்சு போட்டு வருகின்றனர். கவின் தன்னுடைய ரசிகர்கள் மற்றும் காலேஜ் மாணவர்கள் மீது தனக்கு இருக்கும் அக்கறையை வெளிக்காட்டினாரா? அல்லது விஜயை தாக்கி பேசினாரா? என்ற விவாதம் இப்போது சோசியல் மீடியாவில் வெடித்துக் கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+