பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் முந்தைய போட்டியாளர்.. அப்போ இந்த வாரம் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இந்த வாரம் முந்தைய போட்டியாளர் ஒருவர் உள்ளே செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது யார்? என்ன காரணத்திற்காக அவர் உள்ளே போகிறார் என்று பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரம் நிகழ்ச்சி சண்டை சச்சரவுகளோடு இருந்தது. ஆனால் இரண்டாவது வாரத்தில் இருந்து நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது இரண்டு போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகி இருக்கிறார்கள்.

முதலாவதாக ரவீந்தர் முதல் வாரத்திலேயே எலிமினேஷன் செய்யப்பட்டது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இருந்தது. இரண்டாவது வாரத்தில் அர்னவ் வெளியேறும் போது கூட பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஆண் போட்டியாளர்கள் மீது தனக்கு இருக்கும் கோபத்தை கொட்டி விட்டு போயிருந்தார். இதுவும் அதிகமாக பேசப்பட்டது.
அதுபோல இதுவரைக்கும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை வித்தியாசமாக தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். போட்டியாளர்களிடம் கேட்க வேண்டுமோ அதை நேரடியாக கேட்டு அவர்களுக்கு பாராட்டு என்றாலும் சரி திட்டு என்றாலும் சரி உடனே கொடுத்து விடுகிறார். இதனால் இதுவும் இணையத்தின் அதிகமாக பாராட்டவும் செய்யப்படுகிறது.
அதே நேரத்தில் விஜய் சேதுபதியின் சில செயல்கள் விமர்சனங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இப்படி கலவையான விமர்சனம் இந்த நிகழ்ச்சிக்கு இருக்கும் நிலையில் இந்த வாரத்தில் மேலும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கப் போகிறது என்று கூறப்படுகிறது. அதாவது இந்த வாரத்தில் கவின் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய இருக்கிறாராம்.

ஏற்கனவே கவின் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார். இவர் இப்போது தமிழ் சினிமாவில் நடித்து கலக்கி கொண்டிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு டாடா படத்தில் ப்ரமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற கவின் இந்த சீசனில் ப்ளடிபக்கர் என்ற திரைப்படத்திற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் பிரமோஷனுக்காக செல்ல இருக்கிறாராம்.
படமோஷனுக்காக உள்ளே சென்றாலும் வெளியே நடக்கும் பல விஷயங்களை மட்டும் படாமல் போட்டியாளர்களிடம் உள்ளே போகும் பிரபலங்கள் சொல்வது வழக்கம்தான். ஏற்கனவே விளையாட்டின் யுக்தியை மாற்றி இருக்கும் போட்டியாளர்களிடம் கவின் குரூப் உள்ளே செல்லும்போது என்ன சொல்ல இருக்கிறார்கள்? இதனால் விளையாட்டின் தன்மை எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். ஒருவழியாக இந்த நிகழ்ச்சி சண்டை சச்சரவுகளை குறைத்து காமெடி மற்றும் கலகலப்பு இன்னும் அதிகரித்தால் சுவாரசியமாக இருக்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications