என் மகளுக்கு கல்யாணம்ங்க.. பத்திரிகை கொடுக்க போன கிங்காங்.. டி. ராஜேந்தர் கொடுத்த இரட்டை மகிழ்ச்சி.. தங்கமான மனசு
சென்னை: நடிகர் கிங்காங் தன்னுடைய மகள் திருமணத்தை அடுத்த மாதம் நடத்த இருக்கிறார். அதற்காக சினிமா பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் பலருக்கும் நேரில் சென்று திருமண பத்திரிகை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இன்று நடிகரும் இயக்குனருமான டி. ராஜேந்தர் நேரில் சந்தித்து தன்னுடைய மகள் திருமணத்திற்கு பத்திரிகை கொடுத்திருக்கிறார். அப்போது டி. ராஜேந்தர் கிங்காங்கிற்கு இரட்டை மகிழ்ச்சியான செய்திகளை சொல்லி இருக்கிறார். அது குறித்து கிங்காங் நெகிழ்ந்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
சினிமா உலகில் பிரபலமாக இருக்கும் நடிகர் கிங்காங்கின் சொந்த பெயர் சங்கர் ஏழுமலை தான். ஆனால் சினிமாவில் அவர் கிங்காங் என்று கேரக்டரில் அறிமுகமானதால் அந்த பெயரிலேயே சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். நகைச்சுவை கேரக்டரிலும் நடித்து பிரபலம் அடைந்த கிங்காங் அதிசய பிறவி படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் ஆடிய டான்ஸ் இப்போது பார்த்தால் கூட சிரிப்பை அடக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

அதற்குப் பிறகு இவருக்கு சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. அதிலும் ஐந்து மொழிகளிலும் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பலமொழிகளிலும் இவர் சினிமாவில் நடித்திருக்கிறார். நடிகர் விவேக், வடிவேலு போன்ற நடிகர்களுடன் அதிகமான படங்களில் நடித்திருந்தார்.
அது கவுண்டமணி, செந்தில் போன்ற நடிகர்களுடனும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் கிங்காங் தன்னுடைய மகனுடன் கலந்து விளையாடி இருந்தார்.
இந்த நிலையில் தன்னுடைய மகளுக்கு அடுத்த மாதத்தில் திருமணம் வைத்திருக்கிறார். ஜூலை 10ஆம் தேதி சென்னை அசோக் பில்லர் பகுதியில் இருக்கும் எம்பிகே மஹாலில் தான் கிங்காங் மகள் திருமணம் நடைபெறுகிறது. இதற்காக சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலருக்கும் நேரில் சென்று பத்திரிகை வைத்து அழைத்து வருகிறார். அந்த வரிசையில் நடிகரும் இயக்குனருமான டி. ராஜேந்திரனின் வீட்டிற்கு சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார்.
அப்போது டி. ராஜேந்தர் "உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்கள் என்னுடைய படத்தில் நடிக்கவே இல்லை. நான் இப்போ ஒரு படம் பண்ண போறேன். அதில் சின்ன கதாபாத்திரம் ஒன்று இருக்கிறது. அதில் நீங்கதான் நடிக்கணும் என்று கூறியிருக்கிறார். இந்த சந்தோஷமான செய்தியை கேட்டதும் மகிழ்ச்சியில் கிங்காங் அந்த வீடியோவை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் "என்னுடைய மகள் திருமண பத்திரிகை கொடுக்கப் போன இடத்தில் புது பட வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குனர் டி. ராஜேந்தர். இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி" என்று கூறி இருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications