சொன்னதை செய்த மன்சூர் அலிகான்.. பார்த்ததும் கண்ணீர் விட்ட கிங்காங்.. நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை: சமீபத்தில் நகைச்சுவை நடிகர் கிங்காங்கின் மகள் திருமணம் வெகு விமர்சையாகவும், அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் நடைபெற்றது. திருமண அழைப்பிதழை வித்தியாசமாக வழங்கியதன் மூலம் கிங்காங் ஒரு புதிய டிரெண்டைத் தொடங்கினார். அவருடைய மகளின் திருமணம் குறித்து அனைவரும் பேசும் அளவுக்கு அதை சிறப்பாக நடத்தி முடித்தார்.
குறைந்த உயரம் கொண்டிருந்தாலும், நடிகர் கிங்காங் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் தனது திறமையால் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். அதிசய பிறவி திரைப்படத்தில் கிங்காங் ஆடிய பிரேக் டான்ஸை ரசிக்காதவர்களே கிடையாது. அந்த நேரத்தில் அது பலராலும் வியந்து பேசப்பட்டது. இப்போதும் காமெடி சேனல்களில் இந்த பாடல் மற்றும் நடனம் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

நடிகர் கிங்காங் மகள் திருமணம்
அதுபோல, கிங்காங் அந்த நேரத்தில் பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். குறிப்பாக வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். கடைசியாக அவருடன் போக்கிரி, சுறா, கந்தசாமி போன்ற படங்களில் இணைந்து செய்த கலாட்டா பலரையும் ரசிக்க வைத்தது. கிங்காங்கிற்கு திருமணமாகி இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
சிவகார்த்திகேயன்
கிங்காங்கின் மகள் சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகை என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும், அவர் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தும் சிவகார்த்திகேயன் திருமணத்திற்கு வரவில்லை. முன்னணி நடிகர்கள் பலர் திருமணத்தில் கலந்து கொள்ளாதது குறித்து ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். எதிர்பாராத விதமாக அதிக கூட்டம் வந்ததாகவும் கிங்காங் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
யோகிபாபு, தேவயானி போன்ற பிரபலங்கள் கூட்டத்தைப் பார்த்ததும் அப்படியே திரும்பிச் சென்றுவிட்டனர். நடிகர் வடிவேலுவால் நேரில் வரமுடியாவிட்டாலும், அவருடைய ஆட்கள் வந்து கலந்து கொண்டு ஒரு லட்சம் ரூபாய் மொய் செய்ததாக கிங்காங் கூறினார். நெட்டிசன்கள் விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் கிங்காங் வீட்டிற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தி அவர்களுக்கு பரிசு கொடுத்திருக்கிறார். அப்போது கிங்காங் தன்னுடைய குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வைக்க, அனைவரிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு சிவகார்த்திகேயன் அங்கு இருந்து கிளம்பி இருக்கிறார்.
மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான் படப்பிடிப்பில் இருந்ததால் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்றும், சிறிய படக்குழு என்பதால் படப்பிடிப்பை விட்டு வர முடியவில்லை என்றும், சென்னை வந்ததும் நேரில் பார்ப்பதாக வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மொய் கவருடன் கிங்காங் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவில், மன்சூர் அலிகான் கிங்காங் வீட்டிற்குள் மகிழ்ச்சியாக வருகிறார். அவரை கிங்காங்கின் மனைவி வரவேற்கிறார். "என்ன சார், வந்ததும் அழுகிறீர்கள்?" என்று கிங்காங் மனைவி கேட்க, அதற்கு கிங்காங் "இது ஆனந்த கண்ணீர்" என்று பதிலளிக்கிறார். பின்னர், வீட்டுக்குள் சென்று அனைவரிடமும் பேசுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. திருமணத்திற்கு வரமுடியாத காரணத்தால், மன்சூர் அலிகான் மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications