மகளின் ஆசைக்காக பிறந்தநாளில் புது கார் வாங்கிய நடிகர் கொட்டாங்குச்சி.. விலை எவ்வளவு தெரியுமா?
சென்னை: காமெடி நடிகராக பிரபலமடைந்த நடிகர் கொட்டாங்குச்சி தன்னுடைய மகள் மானஸ்வியின் பிறந்தநாளுக்கு அவர் ஆசைப்பட்ட படியே பிரம்மாண்டமான ஒரு காரை வாங்கி பரிசளித்திருக்கிறார்.
தன்னுடைய தந்தை தனக்காக வாங்கித்தந்த பரிசைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போன மானஸ்வி தந்தை மற்றும் தாய் குறித்து சில வார்த்தைகளை உருக்கமாக பேசி இருக்கிறார். அதோடு இந்த மானஸ்வி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்
ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் ஒரு சிலருக்கு திறமை இருந்தாலும் பல போராட்டங்களுக்குப் பிறகும் தங்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி ஒரு நடிகர் தான் நடிகர் கொட்டாங்குச்சி. இவருக்கு இயல்பாகவே காமெடி வந்தாலும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு திரையில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
ஆனால் தனக்கு கிடைக்காத வாய்ப்பு தன்னுடைய மகளுக்கு இப்போது கிடைத்திருக்கிறது என்று கொட்டாங்குச்சி பெருமையாக பல நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார். தன்னை போலவே தன்னுடைய மகளும் நடிகை ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு இருந்ததாகவும் ஆனால் இன்று தான் எதிர்பார்க்காத அளவிற்கு தன்னுடைய மகள் தன்னுடைய திறமையால் ஜெயித்துக் கொண்டிருக்கிறார் என்றும் கொட்டாங்குச்சி கூறி இருக்கிறார்.
நடிகர் கொட்டாங்குச்சியின் மகள் மானஸ்வி நடிகை நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார். அதுபோல சதுரங்க வேட்டை திரைப்படத்திலும் நடிகை திரிஷாவுக்கு மகளாக நடித்திருந்தார். தொடர்ச்சியாக பல முன்னணி நடிகைகளின் குழந்தையாக மானஸ்வி நடித்து வருகிறார். அதிலும் மானஸ்வி "இமைக்கா நொடிகள்" திரைப்படத்தில் பேசிய டயலாக் வேற லெவலில் பிரபலமானது.
ஐயோ யார்யா இந்த குழந்தை என்று பார்ப்பவர்கள் மிரண்டு போகிற அளவிற்கு அந்த கேரக்டராகவே மானஸ்வி மாறி இருந்தார். அதிலும் போலீஸ்காரர் ஒருவர் தன்னுடைய அம்மாவின் அறையை எட்டிப் பார்க்கும்போது," உனக்கு கண்ணு தெரியலையா? மூணு லேடிஸ் இங்கே இருக்கும் போது நீ எட்டி பாக்குற..?" என்று மிரட்டும் டயலாக் பெரிய அளவில் பிரபலம் அடைந்தது.
இந்த நிலையில் இன்று மானஸ்வியின் பிறந்தநாளுக்கு அவருடைய தந்தை கொட்டாங்குச்சி மகள் ஆசைப்பட்ட மாதிரியே ஒரு கார் வாங்கி பரிசளித்திருக்கிறார். அது குறித்து கொட்டாங்குச்சி பேசுகையில் என்னுடைய மகள் பங்க்ஷனுக்கு போகும்போதெல்லாம் அப்பா நாமும் இதுபோல ஒரு கார் வாங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அதனாலேயே நான் கார் வாங்க வேண்டும் என்று ஆசையோடு இருந்தேன் என்று சொல்லி இருக்கிறார்.

அதோடு நடிகர் கொட்டாங்குச்சி வாங்கிய காரின் விலை 13 லட்சம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் குட்டி நடிகை மானஸ்வியின் பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதுபோல தந்தையின் அன்பை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர். அது குறித்து மானஸ்வி பேசுகையில் என்னுடைய அம்மாவும் அப்பாவும் எனக்கு எதையும் இல்லை என்று சொன்னதே கிடையாது.
நான் என்ன ஆசைப்படுகிறனோ அதை செய் என்று சொல்லுவாங்க. இன்னைக்கு நான் நினைச்ச மாதிரி அப்பா காரு வாங்கிட்டாங்க. இது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. நான் எப்பவும் சொல்றதுதான் என்னோட அம்மாவும் அப்பாவும் தான் எனக்கு எல்லா ஜென்மத்திலும் அப்பா அம்மாவாக வர வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் என்று மானஸ்வி கூறி இருக்கிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications