IPL Scam: ஸ்க்ரீன் ஷாட்க்கு ஐபிஎல் டிக்கெட்! குரோஷி பேசிய வீடியோவால் சர்ச்சை.. நடந்தது இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான குரோஷி வீடியோ ஒன்றில் தன்னுடைய வீடியோவை சப்ஸ்கிரைப் பண்ணி அதை ஸ்கிரீன்ஷாட் ஆக அனுப்பிவைப்பவர்கள். அனுப்பி வைக்கும் 40 பேருக்கு ஐபிஎல் டிக்கெட் கொடுக்கப் போவதாக பேசிய வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் என்ற அறிவிப்பு வெளியாகிய நிலையில் பலருக்கும் டிக்கெட் வாங்குவதற்கு பெரும் பிரச்சனையாக இருக்கும்போது குரோஷியால் எப்படி 40 பேருக்கு டிக்கெட் கொடுக்க முடியும் என்பது பலரின் கேள்வியாக இருக்கும் நிலையில் அது குறித்து குரோஷி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான குரோஷி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக ரசிகர்களின் மனதை தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துவிட்டார். அதுபோல பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் ஒரு வீடியோவில் ஐபிஎல் டிக்கெட் நம்ம சேனலில் கொடுக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்.
அதற்காக நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வச்சுக்கோங்க. மொத்தம் 40 பேருக்கு டிக்கெட் கொடுக்கலாம் என்று முடிவு பண்ணி இருக்கோம். அதுக்கு நீங்க "madras_vlogs" இன்ஸ்டாகிராம் பேஜை ஃபாலோ பண்ணிட்டு லைக் பண்ணிட்டு அதை நம்ம இன்ஸ்டாகிராம் ஐடிக்கு மெசேஜ் பண்ணுங்க. அப்படி பண்ற ஐடியில் இருந்து மொத்தம் 40 பேருக்கு ஃபிரியா ஐபிஎல் டிக்கெட் கொடுக்கப் போறோம்.
அதனால நம்ம சேனலை இதுவரைக்கும் பாலோ பண்ணாதவங்க பண்ணிடுங்க என்று குரோஷி பேசியதாக instagramல் ரீல்ஸாக வீடியோ ஷேர் செய்யப்பட்டு இருக்கிறது. அதற்கு கேப்ஷனில் கூட ஃபாலோ போடு ஃப்ரீ டிக்கெட் எடு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த வீடியோவில் தொடக்கத்தில் மட்டும் தான் குரோஷி பேசி இருப்பார். மற்ற விஷயங்கள் எல்லாம் வெறும் வாய்ஸ் ஓவராக மட்டுமே இருந்தது.
அதே நேரத்தில் ஐபிஎல் டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் எப்படி இவர்களால் பிரீ டிக்கெட் கொடுக்க முடிகிறது என்ற சந்தேகம் மக்களுக்கு இருக்கும் நிலையில் சமீபத்தில் குரோஷி இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் போன ஐபிஎல் சமீபத்தில் என்னுடைய youtube சேனலில் ஒரு காண்டெஸ்ட் வைத்திருந்தேன். அதில் என் youtube சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி ஸ்கிரீன்ஷாட் அனுப்ப சொல்லி இருந்தேன்.
அப்படி அனுப்பினவங்கள்ல இருந்து கான்டெஸ்ட்ல ஜெயிக்கிறவங்க யார் என்பதை youtube சேனலில் அறிவித்து அவர்களுக்கு சொல்லி இருந்த மாதிரி ஃபிரீ டிக்கெட் கொடுத்தோம். இப்படி நாம எப்பவோ பேசுனதை இப்போ பேசின மாதிரி பகிர்ந்துட்டு இருக்காங்க என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளை முன்வைத்து பல மோசடிகள் சமூக வலைதள பக்கங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் யார் என்ன பேசினாலும் அதை அப்படியே நம்பி விடாமல் உண்மை தன்மை என்ன என்பதை தெரிந்து கொள்வது மக்களுக்கு மிக மிக முக்கியம்.












Click it and Unblock the Notifications