நடிகர் லிவிங்ஸ்டன் வீட்டில் நடந்த இறப்பு.. 13 ஆண்டு பந்தம்.. கண்ணீரோடு மகள் வெளியிட்ட பதிவு
நடிகர் லிவிங்ஸ்டன் வீட்டில் அவர் செல்லமாக வளர்த்து வந்த நாய் இறந்தது பற்றி அவருடைய மகள் உருக்கமாக பதிவு வெளியிட்டிருக்கிறார்.
சென்னை: நடிகர் லிவிங்ஸ்டன் காமெடி நடிகராகவும் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.
நடிகர் லிவிங்ஸ்டன் மகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் லிவிங்ஸ்டண்ட் மகள் ஜோவிடா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்

லிவிங்ஸ்டன் ஆரம்ப காலம்
நடிகர் லிவிங்ஸ்டன் ஒரு நடிகராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து வருகிறார். இவர் வெள்ளித் திரையில் காமெடி நடிகராகவும், கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் 1988 ஆம் ஆண்டு வெளியான பூந்தோட்ட காவல்காரன் எனும் திரைப்படத்தில் முதல் முதலாக அறிமுகமாகி அதை தொடர்ந்து 1996 இல் சுந்தர புருஷன் என்ற திரைப்படத்திலும் இவர் கதாநாயகனாக நடித்திருப்பார் .இவர் நடிகராக அறிமுகமாகும் போது ராஜன் என்ற பெயரில் அறிமுகம் ஆகி பிறகு லிவிங்ஸ்டனாக மாறி இருக்கிறார்.

லிவிங்ஸ்டன் குடும்பம்
நடிகர் லிவிங்ஸ்டன் ஜெசிந்தா என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். லிவிங்ஸ்டனுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ஜோவிடா, ஜமீனா. அதில் ஜோவிடா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியலில் கதாநாயகி ஆக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜோவிடா அடிக்கடி போட்டோ சூட் புகைப்படங்களையும் குடும்ப புகைப்படங்களையும் வெளியிட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

பிடித்த நபரின் இழப்பு
இந்த நிலையில் நடிகை ஜோவிடா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் எங்கள் வீட்டு குட்டி இளவரசர் தேமு பிப்ரவரி 13 ஆம் தேதி தனது பரலோக வாஸ்தலத்திற்கு நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார். எங்கள் அன்பான குழந்தை இனி இல்லை என்று எல்லோரும் சொன்னார்கள். நான் உன்னை எங்கும் பார்க்கிறேன். நீ என் குழந்தை நீ இன்னும் இங்கேயே இருக்கிறாய் என்று எனக்கு தெரியும். நீ இங்கு இருந்து எப்போதும் எங்களை கவனித்துக் கொண்டு இருக்கிறாய் என்பது நான் உணர்கிறேன். எப்போதும் எங்களை பாதுகாப்பாய் என்று எனக்குத் தெரியும் என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.

13 வருடம்
அதுமட்டுமல்லாமல் 13 ஆண்டுகளாக எங்களுக்கு தேவையான அனைத்து மகிழ்ச்சியையும் நீங்கள் கொடுத்தீர்கள். ஒரே நாளில் அனைத்தையும் திரும்ப பெற்றீர்கள். ஏன்? ஆனால் நீ இங்கே இருக்கிறாய் என்று எனக்கு தெரியும். இப்போதும் உங்கள் இருப்பை எங்களுக்கு உணர்த்தியதற்கு நன்றி, எங்கள் வாழ்க்கை இவ்வளவு அழகாக மாற்றியதற்கு நன்றி, எங்கள் செல்ல குட்டி என்று தன்னுடைய நாயோடு தன் அம்மா, அப்பா லிவிங்ஸ்டன் மற்றும் தன்னுடைய சகோதரியோடு எடுத்த புகைப்படத்தை ஜொவிடா பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளும் வீட்டில் ஒருவரை போல பலரும் நினைத்து வரும் நிலையில் நீங்கள 13 வருடங்களாக கூடவே இருந்த ஒரு நபரை எப்படி மிஸ் பண்ணுவீங்களோ அப்படியே மிஸ் பண்ணுகிறீர்கள். நீங்கள் விரைவில் இதே நிலையில் இருந்து மீண்டும் வர வேண்டும் என்று ஆறுதல் கூறி வருகிறார்கள்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications