இளையராஜாவிடம் வாய்ப்பு கேட்கப்போன இடத்தில் அவமானம்..முதுகை தொட்டதால் வந்த வினை.. லிவிங்ஸ்டன் எமோஷனல்
சென்னை: இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கும் லிவிங்ஸ்டன் தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
ஆரம்பத்தில் நடிகர் ஆவதற்கு முன்பு இயக்குனராக வேண்டும் என்று வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த நேரத்தில் பாடகராகவும் லிவிங்ஸ்டன் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது இளையராஜாவிடம் தனக்கு ஒரு வாய்ப்பு கேட்க வேண்டும் என்று போன இடத்தில் கிடைத்த அவமானம் குறித்து லிவிங்ஸ்டன் வருத்தத்தோடு பகிர்ந்து இருக்கிறார்.
அந்த வகையில் சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகைகள் பலர் இப்போது சீரியலில் நடித்துக் கொண்டிருப்பது போல தான் நடிகராகவும் இயக்குனராகவும் புகழின் உச்சத்தில் இருந்த லிவிங்ஸ்டன் இப்போது சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். என்னதான் முன்னணி கதாநாயகனாக நடித்திருந்தாலும் அந்த நேரத்தில் கூட தான் ஒரு கதாநாயகன் என்று லிவிங்ஸ்டன் எந்த இடத்திலும் பிகு பண்ணியது கிடையாதாம்.
கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் போது கெஸ்ட் ரோல் கிடைத்தாலும் நான் நடித்து விடுவேன் என்று லிவிங்ஸ்டன் கூறி இருக்கிறார். காரணம் எல்லாமே நடிப்புதான், அதை செய்யப்போறோம். அதுக்கு கதாநாயகனாக நடித்தால் என்ன? காமெடியனாக நடித்தால் என்ன? என்பதுதான் என்னுடைய கேள்வி என்று லிவிங்ஸ்டன் கூறியிருக்கிறார். அதுபோலத்தான் அவர் நடிக்க வந்தது கூட ஒரு விபத்து தானாம். ஆரம்பத்தில் லிவிங்ஸ்டன் ஒரு இயக்குனராக வேண்டும் என்று தான் முயற்சி எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது பாக்யராஜிடம் உதவியாளராக சேர்வதற்கு முன்பு இவருக்கு பாடுவதற்கு ரொம்பவே ஆசையாம். அதனால் இவர் இளையராஜாவை சந்தித்து அவரிடம் பாட வாய்ப்பு கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம். அப்போது இவருக்கு நமக்கு திறமை இருக்கிறது. அதனால் நாம வாய்ப்பு கேட்கலாம் என்ற ஒரு நம்பிக்கையோடு தான் இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் இளையராஜா ஏவிஎம் ஸ்டுடியோவில் சீரியஸாக ஒரு பாடலுக்கு நோட்ஸ் எழுதிக் கொண்டிருந்தாராம்.

அஜித் என்ன சொன்னார் தெரியுமா? விஜயகாந்த் இப்படி பண்ணுவாருன்னு நினைக்கல..லிவிங்ஸ்டன் சொன்ன சீக்ரெட்
அப்போது அங்கு சென்ற லிவிங்ஸ்டன் நேராக உள்ளே போய் அங்கு நோட்ஸ் எழுதிக் கொண்டிருந்த இளையராஜாவின் முதுகில் தொட்டு நான் நன்றாக பாடுவேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க என்று கேட்டிருக்கிறார். அதைக் கேட்டு இளையராஜா கடும் கோபமாகிவிட்டாராம். அங்கிருந்த தன்னுடைய உதவியாளரை அழைத்து கண்டபடி திட்டி இவரையும் வெளியே அனுப்ப சொல்லி இருக்கிறார். அப்போது அங்கிருந்த உதவியாளர்கள் லிவிங்ஸ்டனை தரதரவென்று இழுத்து கீழே கொண்டு விட்டிருக்கிறார்கள்.
அப்போது லிவிங்ஸ்டன் ரொம்பவே வருத்தப்பட்டு இருக்கிறார் நம்ம ஒரு வாய்ப்பு தானே கேட்க போனோம். அதுக்காக இப்படி திட்டுறாங்களே என்று இவர் புரியாமல் அங்கிருந்து வந்து விட்டாராம். ஆனால் தான் செய்தது தவறு என்று பல பல வருடங்கள் கழித்து தான் எனக்கு புரிந்தது. அதற்கு பிறகு தான் நான் பாக்கியராஜ் இடம் உதவி இயக்குனராக வேலைக்கு சேர்ந்தேன் என்று பேட்டியில் நடிகர் லிவிங்ஸ்டன் பேசி இருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications