அஜித் என்ன சொன்னார் தெரியுமா? விஜயகாந்த் இப்படி பண்ணுவாருன்னு நினைக்கல..லிவிங்ஸ்டன் சொன்ன சீக்ரெட்
சென்னை: வெள்ளிதிரையில் பல ஹிட் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த லிவிங்ஸ்டன் தற்போது பேட்டியில் நடிகர் விஜயகாந்த் தனக்கு செய்த உதவிகள் பற்றி பேசி இருக்கிறார்.
அதோடு நடிகர் அஜித்குமார் உடன் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றியும். லிவிங்ஸ்டன் பேசியிருக்கிறார்.
இந்த நிலையில் லிவின்ஸ்டன் எப்படி ஒரு நடிகராக மாறினார் என்றும் அவருடைய தற்போதைய நிலை என்ன என்பது பற்றியும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அதை விரிவாக பார்க்கலாம்.
நம்முடைய உழைப்பு மட்டும் உண்மையாக இருந்தால் யாரேனும் உருவத்தில் நமக்கு உதவி கண்டிப்பாக கிடைக்கும் என்று சமீபத்தில் பேட்டியில் நடிகர் லிவிங்ஸ்டன் பேசியிருக்கிறார். அதற்கு தன்னுடைய வாழ்க்கையிலே சில நெகிழ்ச்சியான எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்றது குறித்தும் அதில் பேசியிருக்கிறார்.
இயக்குனர் பாக்கியராஜ் உதவியாளராக இருந்து சினிமாவை கற்றுக்கொண்ட லிவிங்ஸ்டன் இயக்குனராக ஆசையில் பல முயற்சிகள் செய்திருக்கிறார். ஆனால் அவர் எடுத்த முயற்சி எல்லாம் ஆரம்பத்தில் தோல்வியில் முடிந்து இருக்கிறது. ஆனால் நடிகராக அவருக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

தன்னுடைய வாழ்க்கையில் ஒரு இயக்குனராக வாழ்க்கை கொடுத்தது பாக்கியராஜ் சாரும் அதைத்தொடர்ந்து ஒரு நடிகராக என்னை ஆக்கி அழகு பார்த்தது விஜயகாந்த் தான் என்று லிவிங்ஸ்டன் உருக்கமாக பேசியிருக்கிறார். கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேலும் நடித்த இவர் காமெடி, ஹீரோ, குணசித்திரம், வில்லன் என பல வேடங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.
திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தற்போது சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் கண்ணான கண்ணே, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, நினைத்தாலே இனிக்கும் அதுபோல அமுதாவும் அன்னலட்சுமி போன்ற சீரியல்களில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் பேசிய பேட்டியில் நான் இயக்குனராக வேண்டும் என்று ஆசையில் ஆரம்பத்தில் அதற்கான முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு கதையை உருவாக்கி பல கம்பெனிகளுக்கு ஏறி இறங்கி கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் நடிகர் விஜயகாந்தை சந்தித்து கதை சொன்னேன். அப்போது அவரிடம் நான் நின்று கொண்டே கதையை என்னுடைய எக்ஸ்பிரஷனை காட்டி சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது அதை எல்லாம் கேட்டு முடித்த விஜயகாந்த் நாளைக்கு வாங்க என்று சொன்னார். அப்போ நானும் கதை பிடித்து போய்விட்டது போல, அதனால் தான் இவர் நாளைக்கு வர சொல்லி இருக்கிறார் என்று சந்தோசமாக வந்தேன்.
ஆனால் அடுத்த நாள் காலையில் நான் போகும் போது அங்கே சிலர் வரவிக்கப்பட்டு எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போதும் என்னை பார்த்ததும் விஜயகாந்த் நான் சொன்னேன் இல்ல, என்று சொல்லி நல்லா இருக்குல்ல..? அதுக்கு பொருத்தமா இருக்கும்ல..!? என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போதும் நான் நம்ம கதையைத்தான் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் பிறகுதான் சொன்னார் நாங்கள் இப்போது பூந்தோட்ட காவல்காரர்கள் என்ற படத்தை எடுக்க உள்ளோம். அதில் உனக்கு ஒரு வேடம் இருக்கிறது நீ நடி என்று கூறினார்.
அவர் அப்படி சொன்னதும் எனக்கு அதிர்ச்சியா ஆகிட்டு. சார், நடிப்பதற்கு எனக்கு இப்போ ஆர்வம் இல்ல. உங்களுக்கு நான் சொன்ன கதை பிடிக்கவில்லையா என்று கேட்க, அந்த கதையை அப்புறம் பாத்துக்கலாம் இப்போ இந்த பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் உன்னுடைய கேரக்டர் சின்ன ரோல் இல்ல, படம் முழுக்க வருவ யோசித்து சொல்லு என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்.

வீட்டுக்கு வந்து தன்னுடைய நண்பர்களிடம் பேசிய போது விஜயகாந்த் சொன்ன படம்னா நீ கண்டிப்பா நடிக்கலாம். விஜயகாந்த் ஹீரோ என்றும், படம் முழுக்க நீ வருவன்னு சொல்லி இருக்காரு போய் நீ நடி என்று அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அடுத்த நாள் நான் நடிக்கிறேன் என்று லிவிங்ஸ்டனும் விஜயகாந்த்திடம் சொன்னதும். அவர் சந்தோஷப்பட்டு கையில் பத்தாயிரம் ரூபாயும் கொடுத்து அவருக்கு தேவையான டிரஸ்களையும் அப்போதே அளவெடுத்துக் கொண்டார்களாம்.
அதனால் விஜயகாந்த் என்னுடைய வாழ்க்கையில் மறக்கவே முடியாது அவரோடு நடித்த முதல் படமாக இருந்தாலும் சரி வானத்தைப்போல படமாக இருந்தாலும் சரி எல்லாமே எனக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது தான் என்று லிவிங்ஸ்டன் கூறியிருக்கிறார். அதோடு ராசி திரைப்படத்தில் அஜித் குமாரோடு நடித்திருந்தேன் அவரும் வித்தியாசமான குணத்தை உடையவர்.
நமக்கு யாராவது பிரச்சனை பண்ணினாலோ நம்மைப் பற்றி தப்பா பேசினாலும் கூட அவங்க கிட்ட நம்ம சண்டைக்கு போக வேண்டிய அவசியமே இல்ல, காலம் அவங்களுக்கு கண்டிப்பா பதில் கொடுக்கும் என்று சொல்லுவார். எனக்கு பிடிக்காதவர்கள் பற்றி கூட அஜித்குமார் இதே வார்த்தையை சொல்லி இருக்கிறார். அஜித்குமாரின் பொறுமையால்தான் இன்று இந்த இடத்தில் இருக்கிறார் என்று அந்த பேட்டியில் லிவிங்ஸ்டன் கூறி இருக்கிறார்.
-
“எப்போது என்ன நடக்கும்னு சொல்ல முடியாது! அது வேதனையான சம்பவம்” நடிகை பிரியங்கா மோகன் உருக்கம் -
அந்த படத்தில் பிகினியில் நடித்ததால் நடந்த சம்பவம்! பல வருடங்களுக்கு பிறகு வருத்தத்தை பகிர்ந்த பிரியா மணி -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications