நம்பிய இளையராஜாவால் கதறி அழுதேன்.. காப்பாற்றியது ‘இந்த’ பிரபலம் தான்.. லிவிங்ஸ்டன் எமோஷனல்
சென்னை: நடிகர் லிவிங்ஸ்டன் தான் சினிமா வாழ்க்கையில் பட்ட அவமானங்கள் மற்றும் வெற்றி குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில் தான் முதல் முறையாக கதாநாயகனாக நடித்த சுந்தர புருஷன் திரைப்படத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து லிவிங்ஸ்டன் பேசியிருக்கிறார்.

அப்போது தான் நம்பி போன இடத்தில் இளையராஜாவால் தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் குறித்தும் அப்போது கஷ்டத்தில் இருந்தபோது தன்னை காப்பாற்றியது யார் என்பது பற்றியும் அந்த பேட்டியில் லிவிங்ஸ்டன் பேசி இருக்கிறார்.
இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவில் உதவி இயக்குனராக நடிகர் பாக்யராஜிடம் வேலைக்கு சேர்ந்த லிவிங்ஸ்டன் அவரோடு ஏற்பட்ட சிறு மன கசப்பின் காரணமாக அவரிடம் இருந்து விலகி சினிமா வாய்ப்புக்காக பல இடங்களில் அலைந்து கொண்டிருந்த போதுதான் அவருக்கு நடிகர் விஜயகாந்த் மூலமாக சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இயக்குனராக வேண்டும் என்று விஜயகாந்த்திடம் கதை சொல்ல போன இடத்தில் இவருடைய கதை சொல்லும் திறமையை பார்த்து விஜயகாந்த் நீ பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல, அதை முதலில் ஏற்றுக்கொள்ளாத லிவிங்ஸ்டன் பிறகு விஜயகாந்த் பேச்சு மற்றும் அவர் மீது உள்ள நம்பிக்கையால் அந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
அதற்கு பிறகு தொடர்ச்சியாக விஜயகாந்த் சொன்னது போலவே லிவிங்ஸ்டனுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அதோடு விஜயகாந்த் உடன் சேர்ந்தே பல திரைப்படங்களிலும் லிவிங்ஸ்டன் நடித்திருக்கிறார். அனைத்து திரைப்படங்களிலும் அவருக்கு வெற்றி கிடைத்தது. அதேபோல ஆரம்பத்தில் குணச்சித்திர வேடத்திலும் வில்லனாகவும் நடித்து வந்த நிலையில் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு வெளியான சுந்தர புருஷன் என்ற திரைப்படத்தில் அவர் கதாநாயகனாக அறிமுகமானது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் சபாபதி இயக்கி இருக்கிறார். அதுபோல இந்த திரைப்படத்தின் லிவிங்ஸ்டன் தான் கதை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். அதோடு அவருக்கு ஜோடியாக நடிகை ரம்பா நடித்திருக்கிறார். அதுபோல இந்த திரைப்படத்தில் வடிவேலு, வினு சக்கரவர்த்தி, வடிவுக்கரசி, மயில்சாமி போன்ற பல முக்கிய பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி தான் தயாரித்து இருக்கிறார்.
இந்த நிலையில் ஆரம்பத்தில் முதலில் இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளராக எம் எஸ் விஸ்வநாதன் பட குழுவினர்கள் தேர்வு செய்திருந்தார்களாம். ஆனால் லிவிங்ஸ்டன், விஸ்வநாதன் வேண்டாம் இந்த காலத்திற்கு ஏற்றார் போல இளையராஜாவை வைத்து
இசையமைக்கலாம் என்று சொல்ல அதற்கு பட குழுவினர் அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்து விட்டார்களாம். அதற்கு சரி என்று லிவிங்ஸ்டன் கிளம்பி விட்டாராம்.
பிறகு சில நாட்கள் கழித்து இயக்குனரிடமிருந்து லிவிங்ஸ்டனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதனால் அவரை செஞ்சு பார்த்த லிவிங்ஸ்டனிடம் அவர் இசையமைப்பாளர் விஷயத்தில் நீங்கள் சொன்னதையே செய்யலாம். ஆனால் நாங்கள் யாரும் இளையராஜாவிடம் பேச மாட்டோம். நீங்கள்தான் பேசி சம்மதிக்க வைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அதற்கு லிவிங்ஸ்டன் சரி என்று சொல்லி இளையராஜாவிடம் சென்று இருக்கிறார். ஆனால் இளையராஜா லிவிங்ஸ்டனை திட்டி விட்டாராம். நான் சரி என சொல்லாமல் நீ எப்படி நான் இசையமைப்பேன் என்று சொல்லலாம்? நான் இசையமைக்க முடியாது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி போய் விட்டாராம். அதனால் லிவிங்ஸ்டன் ரொம்பவே வருத்தத்தோடு அழுதாராம்.
பிறகு அந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஆர் பி சவுத்ரி லிவிங்ஸ்டன் இடம் கவலைப்படாத இளையராஜா இல்லை என்றால் என்ன அதற்கு பதிலாக சிற்பியை இசையமைக்க சொல்லலாம் என்று போனில் சொல்லி இருக்கிறார். ஆரம்பத்தில் இந்த விஷயத்தில் லிவிங்ஸ்டனுக்கு பெரிய அளவில் விருப்பம் இல்லையாம். ஆனால் திரைப்படத்தின் பாடல்கள் வெளியான பிறகு லிவிங்ஸ்டன் ரொம்பவே ஆச்சரியம் அடைந்தேன் என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
வருடங்கள் பல ஆனாலும் சிற்பி இசையில் வெளியான சுந்தர புருஷன் பாடல் இப்போதும் வேற லெவலில் ஹிட் ஆகி கொண்டிருக்கிறது. பல ரீல்ஸ் வீடியோக்களில் இந்த பாடல்கள் வலம் வருவதை காணலாம்.
-
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
“இது சிம்பதிக்காக சொல்லல… இதுதான் ரியாலிட்டி!”.. காளிதாஸ் 2 விழாவில் நடிகர் பரத் எமோஷனல் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்! -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications