24 வருடம் கழித்து மீண்டும் மாதவனோடு நடிக்கிறாரா ஷாலினி? வெளியான போட்டோஸ்
சென்னை: நடிகர் மாதவன் மற்றும் நடிகை ஷாலினி இருவரும் சந்திப்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் 24 வருடங்களுக்கு முன்பு அலைபாயுதே திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள். இப்போது இவர்கள் இருவரும் மீண்டும் ஒன்றாக நடிக்க போகிறார்களா? என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் ஒரு சில நடிகர் நடிகைகள் கலக்கி கொண்டு வருகிறார்கள். இதற்கு சில வருடங்களுக்கு முன்பே வித்திட்டவர் நடிகர் மாதவன். இவர் ஆரம்பத்தில் ஹிந்தியில் சீரியலில் 1996 ஆம் ஆண்டில் அறிமுகமான நிலையில் இயக்குனர் மணிரத்தினம் அலைபாயுதே திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் சினிமாவில் அறிமுகம் செய்தார்.

இந்த திரைப்படம் மாதவனுக்கு பெரும் புகழை பெற்று தந்தது. இந்த திரைப்படம் வித்தியாசமான கதை அம்சத்தை கொண்டதாக இருந்தது. அந்த நேரத்தில் எல்லாம் காதலித்து திருமணம் செய்து கொள்வது பெரிய அளவில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் நிலை இருந்தபோது வீட்டிற்கு தெரியாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்வது, பிறகு கல்யாணத்திற்கு பிறகு மோதல், பிரிவு, வருத்தம் என எல்லாம் கலந்த கலவையாக இந்த திரைப்படம் இருந்தது.
இந்த திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிகை ஷாலினி நடித்தார். இந்த திரைப்படம் மாதவனுக்கு மட்டுமல்ல ஷாலினிக்கும் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு சில வருடங்களில் ஷாலினி அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஷாலினி சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.
மாதவன் அந்த நேரத்தில் புகழில் உச்சத்தில் இருந்தார். சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவன் புகழின் உச்சத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார். ஆனால் ஒரு சில விளம்பரங்களில் நடித்துக் கொண்டுதான் இருந்தார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்துக் கொண்டிருந்த மாதவன் சில வருடங்கள் கேட்டு கழித்து இறுதி சுற்று திரைப்படம் மூலமாக தன்னுடைய ரீ என்ட்ரி கொடுத்தார்.

மாதவன் 90'ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமல்லாமல் 2கே கிட்ஸ்களுக்கும் பரிச்சயமானவர்களாக இருக்கிறார். அதுபோல ஷாலினி தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளோடு அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இவர் மீண்டும் சினிமாவுக்கு வருவாரா என்ற கேள்விகள் வரும் நிலையில் அதற்கு அவர் இல்லை என்று தான் பதில் சொல்லி இருக்கிறார்.
இந்த நிலையில் மாதவன் தற்போது ஷாலினியோடு எடுத்த புகைப்படத்தை ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு என்றென்றும் புன்னகை என்ற கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதிலும் அலைபாயுதே கெட்டப்பில் மாதவன் இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் நடிகர் இருக்கிறார்களா? என்ற கேள்விகள் கமெண்ட்களில் குவிகிறது.
அலைபாயுதே திரைப்படத்தில் சக்தி மற்றும் கார்த்திக் ஜோடி பல காதலர்களின் ஃபேவரிட் ஆக இருக்கும். இவர்கள் இருவரும் இரண்டாவது பாகத்தில் நடித்தால் அருமையாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இது நட்பாக இருவரும் பல வருடம் கழித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களா? அல்லது திரைப்பட சூட்டிங் போது எடுத்த புகைப்படங்களா என்ற விடை தெரியாத கேள்விகள் வலம் வருகிறது. இது பற்றி விரைவில் மாதவன் விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications