Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்மாவுக்காக நான் பழைய மாதிரி மாறிட்டேன்! மாதவன் வெளியிட்ட புகைப்படம்.. குவியுது வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மாதவன் பல வருடங்கள் கழித்து தற்போது தன்னுடைய அம்மாவுக்கு பிடித்த மாதிரி மீசை, தாடி இல்லாமல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது எடுத்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அம்மா சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மகன் கிளீன் ஷேவ் செய்வது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று பதிவு வெளியிட்டிருந்தார்.

தமிழ் சினிமாவில் 90ஸ்களில் இறுதியிலும் 2000ம் ஆண்டின் தொடக்கத்திலும் சாக்லேட் பாயாக வளம் வந்த மாதவனை பலருக்கும் மறந்திருக்க வாய்ப்பே கிடையாது. இவரை மாதவன் என்று அழைப்பதை விடவும் என்று 'மேடி' என்று அதிகமான ரசிகர்கள் அழைத்து வந்தனர். அதிலும் இவருக்கு ஆண் ரசிகர்களை விடவும் பெண் ரசிகைகள் ஏராளம்.

television madhavan

அந்த காலகட்டத்தில் ஆண்கள் என்றால் மீசை வைத்து கம்பீரமாக இருப்பது தான் அழகு என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் மீசையும் தாடியும் இல்லாமல் க்யூட்டான சிரிப்போடு இருந்தாலும் அழகு தான் என்று ஒரு புது ட்ரெண்ட் மாதவன் செட் செய்திருந்தார். வசீகரிக்கும் அழகிய தோற்றம், பார்த்ததும் கவர்ந்திழுக்கும் சிரிப்பு என ஸ்மார்ட் கதாநாயகனாக வலம் வந்த மாதவன் முதல் முறையாக தமிழில் 1996 ஆம் ஆண்டு தான் ஹிந்தியில் அறிமுகமாகி இருக்கிறார்.

இந்தியில் அப்போதுதான் நடிக்க தொடங்கி இருந்த மாதவனை தமிழில் 2000-ம் ஆண்டு அலைபாயுதே படத்தின் மூலமாக இயக்குனர் மணிரத்தினம் அறிமுகப்படுத்தினார். மணிரத்தினம் இயக்கத்தில் அறிமுகமான நடிகர்கள் இப்போதும் புகழின் உச்சத்தில் இருக்கிறார்கள். அந்த வரிசையில் முதல் படத்திலேயே மாதவனும் அதிகமான பெண் ரசிகைகளின் மனதை கவர்ந்து விட்டார்.

television madhavan

அதற்கு பிறகு கெளதம் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே படம் தான் மாதவனை சாக்லேட் பாயாக வலம் வர செய்தது. இந்த திரைப்படத்தில் அப்பாஸ் மற்றும் மாதவன் இருவரும் கதாநாயகனாக நடித்திருப்பார்கள். இருவருக்கும் இந்த திரைப்படம் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதை தொடர்ந்து மாதவனுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது.

ரன், பிரியமான தோழி, கன்னத்தில் முத்தமிட்டால், ஜே ஜே, ஆயுத எழுத்து போன்ற பல ஹிட் படங்களில் வரிசையாக நடித்துக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு சில வருடங்களாக தமிழ் சினிமாவில் தொலைக்காட்டாமல் இருந்த இவர் வித்தியாசமான கெட்டப்பில் இறுதி சுற்று திரைப்படத்தில் களம் இறங்கி இருந்தார். இதில் இவருடைய நீண்ட தலை முடி, வெள்ளை தாடி இவருக்கு இன்னொரு முகத்தை காட்டியது.

இறுதி சுற்றி திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் வேதா திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த திரைப்படங்களால் 2கே கிட்ஸ்களின் ஃபேவரைட் ஆகவும் மாறிவிட்டார். தற்போது தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி என பழமொழிகளில் நடித்து வரும் மாதவன் சின்னத்திரையிலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

television madhavan

இவர் ஆரம்பத்தில் ஹிந்தியில் அறிமுகம் ஆனது கூட சினிமாவில் அல்ல சீரியலில் தான். அதுபோல மாதவனின் பர்சனல் வாழ்க்கை என்று எடுத்துக்கொண்டால் அவர் சரிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு வேதாந்த் என்ற மகன் இருக்கிறார். மும்பையில் தன்னுடைய குடும்பத்தோடு மாதவன் செட்டில் ஆகி இருக்கிறார்.

அதுபோல மாதவனின் அம்மா சரோஜா ரங்கநாதன் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதில் மாதவன் மின்னலே திரைப்படத்தில் வருவது போன்று மீசை தாடி இல்லாமல் கியூட்டாக அம்மாவோடு போஸ் கொடுத்திருந்தார்.

அந்த பதிவுக்கு, "என் மகன் க்ளீன் ஷேவுடன் இருப்பது தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று என் மகன் சேவ் செய்த உடன் இனிமேல் வெள்ளை தாடியை வைத்துக்கொண்டு இருக்காதே என்பதை சொல்வதற்காகவே இந்த புகைப்படத்தை என்னுடைய மகனுடன் எடுத்துக் கொண்டேன்" என்று அதில் பகிர்ந்திருந்தார்.

இந்த புகைப்படம் பெரியளவில் வைரல் ஆனதை தொடர்ந்து இன்று மாதவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் சில வீடியோக்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் மாதவன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டது போல தெரிகிறது அதில் கிளீன் ஷேவில் அவர் இருக்கிறார். இந்த வீடியோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+