நடிகர் மாதவன் வாங்கிய Boat.. அடேங்கப்பா! இத்தனை கோடியா? “இந்த” விஷயத்திற்காக இவ்வளவு செலவா?
சென்னை: நடிகர் மாதவன் துபாயில் புதியதாக போட் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டை கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது பல நடிகர்கள் சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்து அங்க கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் பல வருடங்களுக்கு முன்பே நடிகர் மாதவன் இடம் பிடித்திருக்கிறார். நடிகர் மாதவன் ஆரம்பத்தில் ஹிந்தி சீரியலில் 1996 ஆம் ஆண்டு அறிமுகமான நிலையில் அவரை பார்த்து பிடித்து போன மணிரத்தினம் அலைபாயுதே திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தார்.

அந்த திரைப்படம் மாதவனுக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. இந்த திரைப்படத்தில் வித்தியாசமான கதை அம்சம் கொண்டதாக இருந்தது. அலைபாயுதே திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிகை ஷாலினி நடித்திருந்தார். அந்த நேரத்தில் காதலித்து திருமணம் செய்து கொள்வது பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் நிலை இருந்தபோது கதாநாயகனும் கதாநாயகியும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து, பிறகு கல்யாணத்திற்கு பிறகு மோதல், பிரிவு, வருத்தம் என எல்லாம் கலந்த கலவையாக அந்த திரைப்படம் இருந்தது.
அந்த திரைப்படத்திற்குப் பிறகு மாதவன் சாக்லேட் பாயாக வலம் வந்தார். புகழின் உச்சத்தில் இருக்கும் போது திடீரென்று சினிமாவிலிருந்து காணாமல் போனார். பிறகு ஒரு சில விளம்பரங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்தார். அது மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்துக் கொண்டிருந்த மாதவன் திடீரென்று எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.

அதற்கு பிறகு சில வருடங்கள் கழித்து இறுதி சுற்று திரைப்படத்தின் மூலமாக தமிழில் தன்னுடைய ரீஎன்ட்ரி கொடுத்தார். அதுபோல மாதவன் 90ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமல்லாமல் 2கே கிட்ஸ்களுக்கும் பரிச்சயமானவராக இருக்கிறார். நடிகராக தன்னுடைய திறமையை நிரூபித்த மாதவன் இயக்குனராகவும் நிரூபித்திருக்கிறார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ரிலீசான ராக்கெட்ரி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவர் இயக்கிய முதல் படமே வெற்றி அடைந்ததோடு அவருக்கு தேசிய விருதும் பெற்று தந்தது. அதுபோல தற்போது கூட தமிழில் மாதவன் கைவசம் இரண்டு படங்கள் இருக்கிறது. அதில் ஒரு படத்தை மித்திரன் ஆர் ஜவகர் இயக்குகிறார்.
அந்த படத்திற்கு அதிர்ஷ்டசாலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுபோல டெஸ்ட் என்ற இன்னொரு படத்திலும் மாதவன் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நயன்தாரா புத்தாண்டு கொண்டாட்டத்தை துபாயில் கொண்டாட சென்றிருந்த நிலையில் அங்கு மாதவனோடு அவர் புதியதாக வாங்கிய சொகுசு படகில் புகைப்படங்களை எடுத்து இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா, மாதவன் மற்றும் அவருடைய மனைவி சரிதாவும் ஜோடியாக அமர்ந்திருக்கிறார்கள். அதுபோல மாதவன் வாங்கிய சொகுசு படகின் விலை 14 கோடியாம்.
அதுபோல அந்த படகை ஓய்வெடுப்பதற்காகவும், ஸ்கிரிப்ட் எழுதும் பணி இருந்தால் அதை செய்வதற்காகவும் பயன்படுத்தி வருகிறாராம். அது போல அந்த படகை இயக்குவதற்கான மாதவரம் லைசென்ஸ் வாங்கி இருக்கிறாராம். இதற்காக ஆறு மாதம் பயிற்சி பெற்று அவர் லைசென்ஸ் வாங்கி இருக்கிறாராம். இந்த படத்தின் விலை ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை விட அதிகம் என்று நெட்டிசன்கள் வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications