பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மகேஷ் பாபுவின் மனைவியின் சகோதரி! இது புது ட்விஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அதாவது அக்டோபர் ஆறாம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. அதேபோல பல மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் விரைவில் ஹிந்தியில் ஒளிபரப்பாக போகும் பிக் பாஸ் 18 நிகழ்ச்சியில் நடிகர் மகேஷ் பாபுவின் உறவினர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் வெளி உலக தொடர்பு எதுவும் இல்லாமல் இருக்கும் போது அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள், காதல், மோதல், காமெடி எல்லாவற்றையும் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவதாலேயே இந்த நிகழ்ச்சி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் இதுவரைக்கும் ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இதுவரைக்கும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார். எட்டாவது சீசன் தொடங்குவதற்கு முன்பே கமல்ஹாசன் எட்டாவது சீசனில் இருந்து ரெஸ்ட் எடுக்க போகிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அவர் எஐ குறித்து படிப்பதற்காக வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று குறிப்பிட்டிருந்த நிலையில் அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.
விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. கமல்ஹாசன் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இடையே ஒரு மெல்லிய நூல் போல தன்னுடைய தீர்ப்பை கச்சிதமாக வழங்கி வந்த நிலையில் கமல்ஹாசன் போல விஜய் சேதுபதி செயல்பட போகிறாரா? அல்லது நடிகர் நாகார்ஜுனா, சல்மான் கான் போன்று பிற மொழி தொகுப்பாளர்கள் போல அதிரடியாக இருக்கப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இப்படியான நிலையில் வரும் அக்டோபர் ஆறாம் தேதி மாலை 6:30 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. அதற்கு பிறகு வழக்கம் போல நூறு நாட்கள் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று உத்தேச பட்டியல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் 18 சீசனில் போட்டியாளர்கள் குறித்த தகவலும் வைரல் ஆகி வருகிறது.
அதாவது பாலிவுட்டில் சல்மான் கான் தொகுத்து வழங்க போகும் இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு சினிமா டாப் ஸ்டார் ஆன மகேஷ் பாபுவின் மனைவி நர்மதாவின் சகோதரி ஷில்பா பங்கு பெற இருப்பதாக தகவல்கள் வைரல் ஆக வருகிறது. இதனால் தமிழ் ரசிகர்கள் இனி ஹிந்தி பிக் பாஸ் பார்ப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications