பிக் பாஸ் 8இல் என்ட்ரியாகும் மறைந்த நடிகரின் மகன்.. தம்பியும் விஜய் டிவி நடிகர்.. ரஜினி சப்போர்ட்!
சென்னை : விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்ற உத்தேச பட்டியல் ஏற்கனவே வெளியாகி இருக்கும் நிலையில், இதில் மறைந்த காமெடி நடிகர் மயில்சாமியின் மூத்த மகன் அன்பு கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது. அது பற்றி பார்க்கலாம்.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பு உத்தேச பட்டியல் ஒவ்வொரு சீசனில் வெளியாவது வழக்கம் தான். அந்தப் பட்டியலில் இருக்கும் பெயர்களில் அதிகமான போட்டியாளர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். அந்த வரிசையில் வரப்போகும் எட்டாவது சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற பட்டியல் வெளியாகி இருக்கிறது.

அதில் புதியதாக மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் அன்புவும் கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது. மயில்சாமிக்கு இரண்டு மகன்கள் உண்டு. அதில் மூத்த மகன் அருமைநாயகம் இரண்டாவது மகன் யுவா. மூத்த மகன் அருமை நாயகம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய பெயரை அன்பு என்று மாற்றிக்கொண்டார்.
காமெடியனாக பல திரைப்படங்களில் நடித்த நடிகர் மயில்சாமி தன்னுடைய மகனை ஹீரோவாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கோரிப்பாளையம், மாயாண்டி குடும்பத்தார் போன்ற பல படங்களை இயக்கிய ராசு மதுரவன் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடிக்க வைத்தார். பார்த்தோம் பழகினோம் என்ற தலைப்புடன் அந்த திரைப்படம் தொடங்கப்பட்டது. ஆனால் சூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே படம் நின்று விட்டது.
முதல் படமே பிரச்சனையானதும் சினிமாவை விட்டு விலகி இருந்த அன்பு பிறகு 2015 ஆம் ஆண்டு ராஜசேகர் என்பவர் இயக்கத்தில் 60 நாட்கள் என்கிற படத்தில் நடிக்க கமிட் ஆனார். அந்த படம் முழுக்க முழுக்க காமெடி படமாக இருந்தாலும் அந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. அதற்கு பிறகு 2015 ஆம் ஆண்டு கொக்கு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் பாதியிலேயே நின்று விட்டது.

தான் நடித்த திரைப்படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆகாமல் போனாலும் தன்னுடைய முயற்சியை விடாமல் இருந்த அன்பு 2017 ஆம் ஆண்டு பொம்மலாட்டம் நடக்குது, திரிபுரம் போன்ற படங்களும் படங்களில் நடித்தார். அந்த படங்களும் வெளி ஆகவே இல்லை. இதைத் தொடர்ந்து ஒன்பது வருடப் போராட்டத்திற்கு பிறகு அல்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் ஓடிடியில் வெளியானது.
கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த திரைப்படம் வெளியானது. அதற்குப் பிறகு ரயில்வே கேட், சிதம்பரம் என்ற சில திரைப்படங்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் இப்போது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. தன்னுடைய தந்தையைப் போல தானும் தன்னுடைய திறமையை காட்ட வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் அன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய நிஜ கேரக்டர் மூலம் மக்கள் மனதில் நிலைத்திருப்பாரா இல்லையா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
அதே போல மயில்சாமியின் இரண்டாவது மகனான யுவன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தங்கமகள் சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மயில்சாமி நடிகர் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகர் என்பதால் அவருடைய மகன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பது அவருக்கு மயில்சாமியின் ரசிகர்களும் ரஜினிகாந்தின் ரசிகர்களும்
சப்போர்ட் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications