சத்தியமா சொல்லுறேன் விஜய் சேதுபதி இப்படித்தான்! வெளியே தெரியாது.. ரகசியங்களை உடைத்த மணிகண்டன்
சென்னை: நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அப்போது நடிகர் விஜய் சேதுபதி தனக்கு செய்த உதவி குறித்து நெகிழ்ந்து பேசி இருக்கிறார். அதில் விஜய் சேதுபதி தன்னுடைய சகோதரியின் திருமணத்திற்காக பணம் கொடுத்து உதவியது பற்றிய ரகசியத்தை உடைத்து பேசி இருக்கிறார்.
பொதுவாக சிலர் வெளியே கரடு முரடான தோற்றத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்கள் செய்யும் உதவிகள் பலருக்கும் தெரிந்திருக்காது. உதவி செய்வதை பிறருக்கு தெரியாமல் எந்த விளம்பரமும் செய்யாமல் உதவி செய்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் விஜய் சேதுபதி என்று நடிகர் மணிகண்டன் சமீபத்தில் பேசியிருக்கிறார்.

நடிகர் மணிகண்டன் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் யதார்த்தமான நடிப்பு மற்றும் காட்சிகளோடு ஒன்று போவது இவருடைய பிளஸ் ஆக இருக்கிறது. இறுதியாக வெளிவந்த குடும்பஸ்தன் திரைப்படம் தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது.
அதுபோல ஏற்கனவே மணிகண்டன் நடிப்பில் வெளியான ஜெய் பீம், குட் நைட், லவ்வர் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றது. ஒவ்வொரு படத்திலும் என்னுடைய தனித்துவத்தை காட்டும் வகையில் மணிகண்டன் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார். அதன் மூலம் அவருக்கென்று தனி ரசிகர்கள் உருவாகி கொண்டு இருக்கிறார்கள்.
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரன்னராக வெற்றி பெற்ற மணிகண்டன் அதற்குப் பிறகு ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமாவில் பீட்சா படத்தின் மூலம் அறிமுகமானார். அதுபோல தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் எல்லோருடைய குரலையும் அழகாக டப்பிங் பேசி ரசிகர்களை இன்ப அதிர்ச்சி அடைய வைக்கிறார்.
அதிலும் எல்லோராலும் பேச கஷ்டப்படும் சிவகுமார் வாய்ஸில் கூட அழகாக பேசி அசத்தியிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் மணிகண்டன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது விஜய் சேதுபதி பற்றி பேசி இருக்கிறார். எனக்கு விஜய் சேதுபதி சாரோடு பெரிதாக பழக்கம் இல்லை. காதலும் கடந்து போகும் டைமில் தான் தெரியும்.
ஒரு நாள் மழையின் போதுதான் இருவரும் எதேச்சையாக மழைக்கு ஒதுங்கி நிற்கும் போது அவருடன் நிறைய பேச முடிந்தது. ஒருமுறை என்னுடைய தங்கைக்கு மூக்கில் ஆபரேஷன் நடந்ததை கேள்விப்பட்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வந்துவிட்டார். அதுபோல என்னுடைய தங்கைக்கு கல்யாணம் வைத்திருந்தோம் அப்போது நான் அவருக்கு முறையா பத்திரிக்கை கூட வைக்கவில்லை. ஆனாலும் எனக்கு போன் செய்து நேரடியாக மண்டபத்திற்கு வந்துவிட்டார்
நான் கேட்காமலே எனக்கு மூன்று லட்சம் ரூபாய் பணம் எடுத்துக் கொடுத்தார். சொன்னா நம்ப மாட்டீங்க அந்த பணம் இருந்ததால்தான் என்னால் மண்டப வாடகை கூட கொடுத்துவிட்டு வர முடிந்தது. அந்த நேரத்தில் நான் விஜய் சேதுபதி சாரிடம் உதவி என்று கேட்கவில்லை. ஆனால் அவர் என்னுடைய நிலையை அறிந்து எனக்கு உதவியது ஆச்சரியமாக இருந்தது.
அதுவும் அந்த நேரத்தில் விஜய் சேதுபதி சார் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார் எனக்காக அவர் திருமணத்தில் கலந்து கொண்டது எனக்கு சந்தோஷமாக இருந்தது என்று அந்த பேட்டியில் மணிகண்டன் நெகிழ்ந்து பேசி இருக்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications