நடிகை நக்மாவை கல்யாணம் பண்ண போறேன்.. வெளிப்படையாக அறிவித்த பிரபல நடிகர்.. இதுதான் காரணமாம்
சென்னை: ஜெய் பீம், குட் நைட் திரைப்படங்களில் வெற்றிக்கு நடிகர் மணிகண்டன் லவ்வர் திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் தற்போது அவருடைய திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது மணிகண்டன் தான் நடிகை நக்மாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறியிருக்கிறார்.
45 வயதுக்கு மேலே நக்மா திடீரென்று திருமணம் செய்து கொள்ள போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் இப்போது நடிகர் மணிகண்டன் நான் அவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லி இருக்கும் நிலையில் இது குறித்து அதிகமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி அதைத்தொடர்ந்து காலா, விக்ரம் வேதா சில்லு கருப்பட்டி போன்ற திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து ஜெய் பீம், குட் நைட் திரைப்படங்களில் பெரிய அளவில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்த மணிகண்டன் இப்போது முன்னணி நடிகராக இருக்கிறார்.
அதுவும் இவர் விஜய் சேதுபதி போல வளர்ந்து வருகிறார் என்று பலரும் இவரை பாராட்டி வருகின்றனர். இப்படியான நிலையில் இவர் நடிப்பில் நாளை வெளிவர இருக்கும் லவ்வர் திரைப்படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் மணி கண்டன் பிரபல யூட்யூபரான விஜே சித்து மற்றும் ஹர்திக் உடன் இணைந்து காமெடியாக பேசியிருக்கும் வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் வி ஜே சித்து மணிகண்டனை கலாய்த்து கொண்டிருக்கிறார். அதாவது லவ்வர் திரைப்படத்தில் அவரே ரைட்டராம், அவரே நடிகராம், அவரே மிமிக்ரி ஆர்டிஸ்டாம் என்று சொல்ல அதற்கு மணிகண்டன் குறுக்கிட்டு அவரே அவர் படத்துக்கு குண்டும் போடுவாராம் என்று சொல்லி சிரிக்கிறார். அதைத்தொடர்ந்து லவ்வர் திரைப்படத்தின் கதை இதுவாகத்தான் இருக்குமோ என்று சித்து அளந்து விடுகிறார்.
அதாவது நார்மலான ஒரு பையன் ஐடில வேலை பார்க்கிறான். அப்போ ஐடியில் இருந்து ஒரு பொண்ணு உங்கள லவ் பண்றா அதுதானே கதை உங்க ரெண்டு பேருக்கும் இடையில் பிரச்சனை வருகிறது, பிறகு அதெல்லாம் சரி ஆகி சேர்ந்துருவாங்க இப்படித்தானே கதை முடிய போகுது என்று சித்து போட்டு வாங்க அதற்கு ஹர்ஷத் அப்படி இல்ல நான் சொல்றேன் கேளுங்க என்று அவர் ஒரு கதையை சொல்கிறார்.

அதைக் கேட்டு மணிகண்டன் போதும் இவங்க ரெண்டு பேரும் சொல்ற கதை உண்மையா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள ஒன்பதாம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் லவ்வர் திரைப்படத்தை பார்த்து தெரிஞ்சுக்கோங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது வி ஜே சித்து தளபதி அரசியலுக்கு போன பிறகு நீங்க தானே இளையதளபதி என்று மணிகண்டனை பார்த்து கேட்க அதற்கு மணிகண்டன் இப்பதான லைட் என் பக்கம் திரும்புது போகப் போக பார்ப்போம் என்று சிரித்தப்படியே சொல்கிறார்.
அதோடு எனக்கு ஒரு க்ரஷ் இருந்தாங்க. அவங்களை என் பிரண்டு லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டாங்க. அதனால எனக்கு கல்யாணம் மேல விருப்பம் இல்லாமல் போயிட்டு. அது போல நான் நடிகை நக்மாவின் ரசிகர் கல்யாணம் பண்ணுனா அவங்கள தான் கல்யாணம் பண்ணனும்னு இருந்தேன் என்று ஓபனாக பேசியிருக்கிறார்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications