இறப்பு குறித்து அன்றே கணித்த நடிகர் மனோ பாலா.. நடிகர் விவேக் இறந்த நேரத்தில் சொன்ன வார்த்தை..?
சென்னை: நடிகர் மனோபாலா உடல் நல பிரச்சனை காரணமாக இன்று இயற்கை எய்திருக்கிறார்.
அவருடைய திடீர் இழப்பு ரசிகர்களின் மனதில் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகராகவும் ஒரு இயக்குனராகவும் பணியாற்றிய மனோபாலா 69 வயதில் காலமாகி இருக்கிறார்.

1953 ஆம் ஆண்டு டிசம்பர் எட்டாம் தேதி நாகர்கோவிலில் பிறந்த நடிகர் மனோபாலா 1979 ஆம் ஆண்டு புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பாரதிராஜாவிடம் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். ஒரு சிறிய காட்சியில் அந்த திரைப்படத்தில் நடிகராகவும் தோன்றி இருக்கிறார். அதற்கு பிறகு பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த மனோபாலா நகைச்சுவை நடிகராக பல முன்னணி நடிகர்களோடு கைகோர்த்து பலரையும் சிரிக்க வைத்திருக்கிறார்.
நடிகை வடிவேலு, சந்தானம், விவேக் என பல முன்னணி நடிகர்களோடு காமெடி காட்சிகளில் இணைந்து நடித்து வந்தாலும் தன்னுடைய நடிப்பை தனித்துவமாக காட்டியதாலே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். 1982 ஆம் ஆண்டு ஆகாய கங்கை என்ற திரைப்படத்தில் இயக்குனரான அறிமுகம் ஆன மனோபாலா நான் உங்கள் ரசிகன், பிள்ளை நிலா, பாரு பாரு பட்டணம் பாரு, டிசம்பர் 31, சிறைப்பறவை, தூரத்து பச்சை, என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் என பல திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார்..
இந்த நிலையில் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த மனோபாலா இன்று உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் மனோபாலா பேசிய பழைய வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் நடிகர் விவேக் இறந்த நேரத்தில் தன்னுடைய ஆருயிர் நண்பன் குறித்து உருக்கமாக பேசிய மனோபாலா அந்த நேரத்தில் இருவரும் ஒன்றாக தான் கொரோனா ஊசி போட்டு விட்டு வந்தோம். பிறகு எனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்துவிட்டது. அதனால் நான் தனிமையில் இருந்தேன். ஆனால் அப்போது என்னுடைய நண்பன் என்னை விட்டுவிட்டு போய் விட்டான். நான் அப்போது வேண்டிக் கொண்டு இருந்தேன். என்னையும் உன்னுடன் கூட்டிட்டு போய் இருக்கலாமே என்று என அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே நடிகர் விவேக் உடைய திடீர் மரணம் ரசிகர்களை பாதித்திருந்தது. அதை தொடர்ந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் மயில்சாமியும் மரணம் அடைந்திருந்தார். இந்த நிலையில் இன்று மனோபாலாவின் இறப்பும் அதிகமாக ரசிகர்களை பாதித்திருப்பதாக கருத்து கூறி வருகிறார்கள். தொடர்ந்து காமெடி நடிகர்கள் மரணமடைந்து வருவது தமிழ் ரசிகர்களுக்கு இழப்பு என்று தங்களுடைய வருத்தத்தை பதிவிட்டு வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications