மனோ பாலாவா இப்படி? அவரே எழுதிய கடிதம்.. இவ்வளவு கவலை இருந்திருக்கா.. கண் கலங்க வைக்கும் வார்த்தை
சென்னை: நடிகர் மனோபாலா சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமாகி இருந்தார்.
இந்த நிலையில் அவர் உயிரோடு இருக்கும் போது எழுதிய கடிதம் தற்போது வெளியாகி இருக்கிறது.
மனோபாலாவின் நண்பரும் திரை பிரபலமும் ஆன சித்ரா லட்சுமணனுக்கு எழுதிய கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.
40 வருடங்களுக்கு முன்பாக மனோபாலா சித்ரா லட்சுமணனுக்கு இந்த கடிதத்தை எழுதி இருந்திருக்கிறார். அப்போது மனோபாலா, சித்ரா லக்ஷ்மணன், மணிவண்ணன் போன்றோர் எல்லாம் பாரதிராஜா திரைப்பட பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்தார்களாம்.

அப்போது உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு பல முயற்சிகளுக்கு பிறகு வெற்றி பெறாமல் மனக்குழப்பத்தில் இருந்த மனோ பாலா சித்ரா லக்ஷ்மணனுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் நான் வரணும் சித்ரா கண்டிப்பா வரணும் இன்று என்னை பார்த்து சிரிப்பவர்களை பார்த்து நான் சிரிக்கும் காலம் வர வேண்டும் என்று எழுதி இருந்தாராம்.
மனோ பாலாவின் மனதில் இருந்த இந்த வைராக்கியம் தான் அவரை இந்த அளவிற்கு வெற்றி பெற வைத்திருக்கிறது. அந்த கடிதத்தில்," டியர் சித்ரா, என்னமோ சட்டென்று ஒரு எண்ணம் ஏதோ எழுத வேண்டும் என்று நினைவுக்கு வந்தது நீங்கள்தான். தப்பா இது? ஒரு மன அரிப்பு, எங்கே எப்போது என்று அலைந்து கொண்டிருக்கிற மனதை சாந்தப்படுத்திக் கொள்ள ஒரு முயற்சி.
நாம் அதிகம் பேசிக் கொண்டதில்லை.. பார்டர் தாண்டி நீங்களும் வந்ததில்லை, நானும் வந்ததில்லை. ஏன் தெரியாது. இப்போது இது ஒரு முயற்சி சித்ரா, நான் தொழிலை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்து வந்தவன் நான். ஆனால் இது என்ன சித்ரா எல்லாம் இடறல் மயம், ஏன் இப்படி ஆனது? எல்லா இடங்களிலும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவிழ்த்து விட்டு வேடிக்கை பார்க்கும் மனிதர்கள்.

என் தவறா இருக்கலாம்? எங்கே தவறிப் போய் இருக்கிறேன் சத்தியமாக தெரியவில்லை, ஆனால் வந்து விடுவோம் என்று தெரிகிறது. எப்போது என்பதுதான் கேள்வி? சித்ரா உங்களுக்கு இது புரிகிறதா? இந்த கடிதம் எழுதும் போது ஒரு பாடல் ஒலிக்கிறது.. ஒண்ணுமே புரியல உலகத்திலே, என்னும் பாடல் உண்மை. அப்படித்தான் இருந்து விட்டேனோ.!?
இருக்கும் ஆனால் நான் வரணும் சித்ரா கண்டிப்பா வரணும் என்று என்னை பார்த்து சிரிப்பவர்களை பார்த்து நான் சிரிக்கும் காலம் வரும் சித்ரா. இது ஒரு அக்கினி நெருப்பு அணைக்கவும் விடாமல் எரிந்து போகவும் விடாமல் மரண அவஸ்தை. எல்லாத்தையும் கண்ணில் காட்டி விட்டு இது உனக்கு கிடையாது என்ற சொல்வது போல இருக்கிறது. என்று வேதனையின் உச்சத்தில் மேலும் பல வருத்தங்களையும் அவர் அந்த கடிதத்தில் எழுதி இருக்கிறார் அது தற்போது வெளியாகி இருக்கிறது இதற்கு பலரும் தங்களுடைய ஃபீலிங்கை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications