குணசேகரனா இப்படி செய்தது..? சீரியல் குடும்பத்திற்கே விருந்து.. இதுதான் காரணமாம்.. குவியும் வாழ்த்து
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் மாரிமுத்து தன்னுடைய சீரியல் அணியினர் அனைவருக்கும் பிரியாணி விருந்து வைத்து அசத்தியிருக்கிறார்.
தற்போது இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் குணசேகரன் பட்டு வேட்டியில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் என்ன விசேஷம் என்றால் அது நடிகர் மாரிமுத்துவின் பிறந்தநாள் தான். அதுபோல அவருடைய பிறந்தநாள் பங்க்ஷனில் சில சுவாரசியமான நிகழ்வுகளும் நடந்து இருக்கிறது.
சின்னத்திரையில் அதிகமாக பேசப்படும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் மாறிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் தங்களுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றனர். அதிலும் குணசேகரனை சொல்லவே வேண்டாம். அந்த சீரியலில் வில்லனாக இருந்தாலும் சின்னத்திரை ரசிகர்களின் ஹீரோவாக இவர்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதோடு பல 2k கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகனாகவும் இவர் மாறியிருக்கிறார். சமூக வலைதளத்தில் அதிகமாக வலம் வரும் மீம்ஸ், டெம்ப்லேட்டுகளில் குணசேகரின் டயலாக் மற்றும் அவருடைய பேஸ் ரியாக்ஷன் தாறுமாறாக இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இதுவரைக்கும் இவர் எத்தனையோ திரைப்படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்திருந்தாலும் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் குணசேகரன் என்கிற பெயரில் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் நடிகர் மாரிமுத்து அடுத்தடுத்து பல பேட்டிகள் கொடுத்து தன்னுடைய சினிமா வாழ்க்கை ஆரம்பகால வாழ்க்கை என பல சுவாரசியமான தகவல்களையும் கூறிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சீரியலில் மட்டுமல்லாமல் இவர் நிஜ வாழ்க்கையிலும் கலகலப்பான கேரக்டராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய எதிர்நீச்சல் சீரியல் அணியினருக்கு மாரிமுத்து பெரிய அளவில் ட்ரீட் வைத்திருக்கிறார்.

தலைவாழை இலை போட்டு பிரியாணி முதலான பல வகையான சாப்பாட்டோடு எதிர்நீச்சல் நடிகர்கள் அனைவருக்கும் குணசேகரன் விருந்து வைத்து இருக்கிறார். அதற்கு காரணம் மாரிமுத்துவின் பிறந்த நாள் தான். மாரிமுத்துவின் பிறந்தநாளுக்கு அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அதே நேரத்தில் மாரிமுத்துவின் மனைவி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வந்திருக்கின்றனர்.
அப்போது சீரியல் குடும்பமும் உண்மையான குடும்பமும் மாரிமுத்து இருக்கு மாறி மாறி கேக் ஊட்டி கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் ரசிகர்கள் நடிகர் மாரிமுத்துவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதுபோல அதுக்குள்ள வெளியான வீடியோவில் கூட அங்கிருக்கும் நடிகர்களும் குணசேகரனை மாரிமுத்துவை யம்மா ஏய்...என்று கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications