3 மணி நேரம்.. எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க காரணமே இதுதான்... ரகசியத்தை உடைத்த நடிகர் மாரிமுத்து
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடிகர் மாரிமுத்து நடித்து வருகிறார்.
வில்லனாக குணசேகரன் இருந்தாலும் அதிகமான ரசிகர்களை இப்போது கவர்ந்திருக்கிறார். காரணம் குணசேகரன் பேசும் வார்த்தைகள் அதிகமாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
இந்த நிலையில் சினிமாக்களில் அதிகமாக நடித்துக் கொண்டிருந்த மாரிமுத்து எதற்காக எதிர்நீச்சல் சிரியலில் நடிக்க தொடங்கினேன் என்று அவரே கூறியிருக்கிறார்.

சின்னத்திரையில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களாலும் பார்க்கும் சீரியல் ஆக எதிர்நீச்சல் சீரியல் பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியல் குறித்து சமூக வலைத்தளத்தில் அதிகமான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு எதிர்நீச்சல் சீரியல் இப்போது முக்கியமானதாக மாறிக் கொண்டிருக்கிறது.
அதனாலேயே எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் இதுவரைக்கும் சீரியலில் நடிக்காத பல நடிகர்கள் இதில் களம் இறங்கி இருக்கின்றனர். அந்த வகையில் குணசேகரன் ஆக நடிக்கும் நடிகர் மாரிமுத்துவும் ஒருவர். இவர் இதுவரைக்கும் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் பல சினிமாக்களில் நடித்திருக்கிறார்.
அத்தோடு நடிகர் மாரிமுத்து பாடல் ஆசிரியர் வைரமுத்துவிடம் ஆரம்ப காலகட்டத்தில் உதவியாளராக இருந்து பிறகு ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். அதுபோல தானும் ஒரு இயக்குனராகவும் சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் தான் முதல் முறையாக எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.
அது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் பேசுகையில் நான் சினிமாக்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் எனக்கு பல சீரியல் வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. ஆனால் அதற்கெல்லாம் இன்னும் கொஞ்சம் நாட்கள் இருக்கிறது. அதற்குப் பிறகு அந்த பக்கம் போகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சினிமாக்களில் ஆரம்பக் காலகட்டத்தில் நான் அதிகமாக கஷ்டங்களை அனுபவித்து விட்டேன். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் பல நாட்கள் இருந்து இருக்கிறேன்.
இன்ஜினியரிங் படித்து விட்டு அந்த காலகட்டத்திலேயே சினிமாவில் ஒரு பெரிய ஆளாக வரவேண்டும் என்று ஊரை விட்டு வந்த நாளிலிருந்து பல வருடங்கள் தன்னுடைய அடையாளத்தை உருவாக்குவதற்காக போராடிக் கொண்டிருந்த நேரத்தில் தான் எனக்கு எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க திருச்செல்வம் என்னிடம் பேசினார். அவர் இயக்கிய கோலங்கள் சீரியல் பெரிய அளவில் வெற்றி பெற்றது எனக்கு தெரியும்.
அதனாலேயே அவருடைய சீரியலில் நடிக்கலாம் என்று நினைத்தேன். ஆனாலும் அவர் என்னிடம் 3 மணி நேரம் தொடர்ந்து கதையை சொன்னார். அந்த கதையை கேட்டு தான் உறுதியாக இந்த சீரியலில் நடித்து தான் ஆக வேண்டும் என்று நினைத்தேன். அதுபோல இந்த சீரியலில் எனக்கு தரும் டயலாக்குகள் எப்படி இருந்தாலும் அந்த இடத்தில் என்ன மாதிரி பேசினால் நன்றாக இருக்குமோ அதற்கு தகுந்த மாதிரி நான் பேசி விடுகிறேன். அதற்கு எனக்கு இயக்குனர் நல்ல சப்போர்ட் கொடுப்பதால் தான் இந்த அளவிற்கு நான் பேசும் டயலாக் அனைவரையும் கவர்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன் என்றும் மாரிமுத்து பேசியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications