நடிகர் மாரிமுத்து நடிப்பை விட்டு ஒதுங்கும் வரை.. நாங்கள் விடமாட்டோம்.. தமிழா தமிழா ஜோதிடர் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மாரிமுத்து சமீபத்தில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடர் பற்றி பேசிய கருத்துக்கு எதிராக தொடர்ச்சியாக அவர் மீது ஜோதிடர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் மாரிமுத்து அந்த நிகழ்ச்சியில் தான் ஒருமையில் பேசியது தவறு என்று மன்னிப்பு கேட்டதாகவும் அதே ஜோதிடர்கள் கூறியிருக்கின்றனர்.

actor Marimuthu steps down from acting we will not let go Tamizha Tamizha Astrologer Interview

ஆனாலும் நடிகர் மாரிமுத்து சின்னத்திரை வெள்ளி திரையில் நடிப்பை விட்டு ஒதுங்கும் வரைக்கும் நாங்கள் விடமாட்டோம் என்று தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோதிடர் பரபரப்பாக பேட்டி கொடுத்திருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து வெள்ளி திரையில் பல திரைப்படங்களை இயக்கியும், நடிகராகவும் இருந்திருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளையும் தாண்டி துணை இயக்குனராக இருந்து இன்று ட்ரெண்டிங் ஸ்டாராக மாறி இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியில் நவீன பரிகாரங்கள் சொல்லும் ஜோதிடர்கள் VS அதை ஏற்றுக்கொள்ளாத பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் மாரி முத்து கலந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் ஜோதிடர் ஒருவர் சந்திராஷ்டமம் அன்று தன்னுடைய செல்போனில் செல்பி எடுத்து அதை டெலிட் செய்து விட்டால் நமக்கு வரும் பிரச்சனையை நாமே அளித்தது போன்று ஆகிவிடும் என்று கூறியிருந்தார்.

actor Marimuthu steps down from acting we will not let go Tamizha Tamizha Astrologer Interview

அது குறித்து தொகுப்பாளர் மாரிமுத்துவிடும் கருத்து கேட்டதற்கு, "நான் இதையெல்லாம் நம்ப மாட்டேன் இந்த நாடு நாசமா போறதுக்கு காரணம் ஜோதிடர்களும் ஜோதிடத்தை நம்புபவர்களும் தான் என்று கூறியிருந்தார். அதோடு தற்போதைய முதலமைச்சர் ஆக மாட்டார் என்று பல ஜோதிடர்கள் சொன்னார்கள். ஆனால் அவர் ஆகிவிட்டார். இப்போ அந்த ஜோதிடர்கள் மூஞ்சியை எங்க கொண்டு வச்சிருக்காங்க. அதோடு கொரோனா வரும் என்றோ, சுனாமி வரும் என்றோ எந்த ஜோதிடனும் சொல்லவில்லையே வந்த பிறகு தான் எல்லாரும் சொல்றாங்க என்று பல்வேறு கேள்விகளும் கேட்டிருந்தார்.

இதற்கு அன்று நிகழ்ச்சியிலேயே பல ஜோதிடர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அதுபோல அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு தொடர்ச்சியாக ஜோதிடர்கள் பலர் நடிகர் மாரிமுத்து மீது காவல்துறையில் கம்பளைண்ட் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோதிடர் ஒருவர் பிரபல செய்தி சேனலில் பேட்டி கொடுத்திருக்கிறார் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

அதில் அந்த ஜோதிடர், மூளை சரியாக இருப்பவர்கள் இப்படி பொதுவெளியில் பேச மாட்டார்கள். மாரிமுத்து பேசியது ரொம்பவே தப்பு. அதுவும் சபை நாகரீகம் இல்லாமல் ஜோதிடர்களை அவன் இவன் என்று சொன்னது, ஜோதிடர்களால் தான் நாடு நாசமா போகிறது என்று சொன்னதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காக நாங்கள் இனி சின்னத்திரை, வெள்ளித்திரை யூனியன் சங்கங்களில் பேசப்போகிறோம்.

அதுபோல நடிகர் மாரிமுத்து நடிப்பை விட்டு விலகுற வரைக்கும் நாங்கள் விட மாட்டோம் என்றும் ஆவேசமாக அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அத்தோடு அந்த வீடியோவில், நடிக்கிறவர் ஒருநாள் நல்லவனாக நடிப்பான். ஒரு நாள் கெட்டவனாக நடிப்பான். ஆனால் ஜோதிடர்கள் அப்படி கிடையாது. அந்த காலத்தில் நாட்டில் மன்னர் ஜோதிடர் பேச்சைக் கேட்டு தான் அன்றைய பொழுதையே நிர்ணயிப்பார். ஆனால் இப்போதுதான் நிலைமை இப்படி மாறி இருக்கிறது என்றும் பேசி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியில் நாங்கள் ஜோதிடர்களை நீ நா என்று உரிமையில் பேசியது தவறு என்று எல்லோரும் பேசியதற்கு மாரிமுத்து எழுந்து நின்று எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டார். பிறகு நான் அவரிடம் நீங்க ஜாதகத்தை கிழித்து போட்டு விட்டேன் என்று சொல்கிறீர்களே? அப்போ எதற்கு இந்த ஜோதிடர்கள் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தீர்கள் என்று கேட்டேன்.

அதோடு நான் சொல்லறது உங்களுக்கு நாலு நாட்களில் நடந்துவிடும். அப்படி நடக்கவில்லை என்றால் என்னுடைய சொத்தை உங்களுக்கு எழுதி தருகிறேன். அதற்கு சம்மதமா என்றேன். அதுவும் வேண்டாம் என்னை விட்டு விடுங்கள் என்று மாரிமுத்து அப்போது கூறி இருந்தார் என்றும் அந்த ஜோதிடர் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+