நடிகர் மயில்சாமியின் கடைசி நிமிடத்தில் நடந்தது இதுதான்.. இரண்டு முறை அதே நாட்களில்..மனம் திறந்த மகன்
நடிகர் மயில்சாமி இறக்கும் போது என்ன நடந்தது என்பது பற்றி அவருடைய மகன் பேசி இருக்கிறார்.
சென்னை: சமீபத்தில் நடிகர் மயில்சாமி மாரடைப்பின் காரணமாக திடீரென உயிரிழந்தார்.
அவருடைய இறப்பு ரசிகர்களையும் பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய வைத்து இப்ப வரைக்கும் பீல் பண்ணி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் மயில்சாமி இறக்கும் நேரத்தில் என்ன நடந்தது என்பது பற்றி அவருடைய மகன் தெரிவித்து இருக்கிறார்.

திடீர் இறப்பு
திரை துறையில் பல பிரபலங்கள் திடீரென சில காலமாகவே இறந்து வருகிறார்கள். அதில் ஒருவராக காமெடி நடிகர் மயில்சாமி இருந்து வருகிறார். இவர் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் சமூக ஆர்வலராகவும் பலருக்கும் தன்னால் முடிந்த அளவிற்கு உதவிகளை செய்து மக்களின் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் அவர் சிவராத்திரிக்கு முழித்து இருந்து பூஜை செய்துவிட்டு காலையில் வீட்டிற்கு வந்த நிலையில் மாரடைப்பு காரணமாக அவருடைய உயிர் பிரிந்தது. இது அவருடைய உறவினர்களை மட்டும் அல்லாமல் ரசிகர்களை பெரிய அளவில் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

எதிர்பார்க்காத அன்பு
இறந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் என்று சொல்வார்கள். அந்த மாதிரி தான் நடிகர் மயில்சாமி வாழ்ந்திருக்கிறார். அவர் இறந்த பிறகும் அவரைப் பற்றி அதிகமானோர் பல தகவல்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவருடைய மகன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அதில் எங்கள் வீட்டில் எங்கள் அப்பா அதிகமான நேரம் இருக்கவே மாட்டார் எப்போதும் வெளியே தான் சுற்றிக் கொண்டிருப்பார். அதனால் தான் அவர் வெளியே பலருக்கும் பரீட்சையமாகவும், நெருக்கமாகவும் இருந்திருக்கிறார். அவருடைய இறப்பு நாளில் எங்கள் சொந்த பந்தம் என்று ஒரு இருபது பேர் தான் இருந்திருப்பார்கள் ஆனால் ரசிகர்கள் தெரிந்தவர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு பலர் வந்து இருந்தனர்.

முதல் தடவை தீப நாளில்
பலர் சொல்கின்ற மாதிரி அப்பா உணவு விஷயத்தில் கவனம் இல்லாமல் இருக்க மாட்டார். அவர் டயட்டில் தான் இருப்பார். அன்று காலை கூட ஒரு இட்லியும் சட்னியும் வைத்து சாப்பிட்டு விட்டு எனக்கு நெஞ்சு எரிச்சலாக இருக்கிறது என்று தான் கூறினார். எப்போதுமே அப்பா சாப்பாடு விஷயத்தில் கரெக்டாக ஃபாலோ பண்ணுவார். ஏற்கனவே இதற்கு முன்பு அவருக்கு நெஞ்சு வலி திருவண்ணாமலை தீப நாளில் தான் இவருக்கு வந்தது. அன்னைக்கு திருவண்ணாமலை தீபம் ஏற்றுவதற்கு முன்பு இவருக்கு ஒரு மூன்று மணி வாக்கில் நெஞ்சில் லேசாக வலிக்க தொடங்கி இருக்கிறது. அவர் அதை ஏதோ வலிக்கிறது என்று நினைத்துக் கொண்டே வேலை செய்து கொண்டே இருந்திருக்கிறார். பிறகு ரொம்ப முடியாமல் ஆன பிறகு தான் வீட்டில் கூட சொல்லாமல் ஆட்டோவில் கிளம்பி மருத்துவமனைக்கு அவராகவே சென்று விட்டார்.

மகனுடைய வருத்தம்
ரோட்டில் அதிக அளவில் டிராபிக் இருந்த நிலையில் ஆட்டோவில் இருந்து ஒவ்வொரு போலீஸ் இடமும் தன்னுடைய முகத்தை காட்டி மருத்துவமனைக்கு செல்கிறேன் என்று இவர் கூற இவருக்காக அவர்களும் வழி விட்டு அனுப்பி வைத்து இருக்கின்றனர். மருத்துவமனையில் அவருக்கு ஒரு இன்ஜெக்ஷன் மட்டும் போட்டு பிறகு வேற ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்து விட்டார்கள். மறுநாள் காலையில் டாக்டர் வந்து அவரிடம் கேட்ட ஒரே கேள்வி இன்னும் எப்படி உயிரோடு இருக்கிறீர்கள் என்கிற கேள்விதான். அந்த அளவிற்கு அவர் பிழைத்து வந்ததே பெரிய விஷயம் தான். அது தீபத்திருநாளில் நடந்தது அதனை தொடர்ந்து மகா சிவராத்திரியில் அவருடைய உயிர் எங்களை விட்டு பிரிந்து போய் இருக்கிறது. இது ஏதோ ஒரு கணக்கில் தான் நடந்ததா? என்று பலரும் கூறுவது போல எனக்கும் எண்ண தோன்றுகிறது என்று கூறி இருக்கிறார்.
-
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
“என் கால் மேல் ஏறி நில்” சூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி சொன்ன வார்த்தை! அந்த நொடி எதிர்பார்க்கல! சீரியல் நடிகை ஒபன் -
யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்..! ப்ளூ சட்டை மாறன் ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே! -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
ஐடி விங் மூலமாக வெறுப்பை பரப்புறாங்க.. பொறுப்பு உங்களிடமே உள்ளது தலைவரே! வெளுத்த நடிகை நிவேதா -
நடிகை பானுப்ரியாவை வர்ணித்த நடிகருக்கு விழுந்த அடி.. இயக்குநர் செய்த தரமான சம்பவம்! இப்படியும் நடந்ததாம்! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள் -
“இது சிம்பதிக்காக சொல்லல… இதுதான் ரியாலிட்டி!”.. காளிதாஸ் 2 விழாவில் நடிகர் பரத் எமோஷனல் -
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்! -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே












Click it and Unblock the Notifications