விமானத்தில் திருமாங்கல்யத்தை காட்டிய பெண் ரசிகை! இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிய மைக் மோகன்
சென்னை: தனது ரசிகையின் திருமாங்கல்யத்தை பார்த்து நான் அப்படியே மெய்சிலிர்த்து போனேன் என்று நடிகர் மோகன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த காலத்தில் இப்படி ஒரு கணவரா என அந்த ரசிகையின் கணவரையும் அவர் பாராட்டியிருந்தார்.
கர்நாடகா மாநிலம், மைசூர் மாவட்டம் உடுப்பில் பிறந்தவர் நடிகர் மோகன். இவரின் உண்மையான பெயர் மோகன் ராவ். சினிமாவுக்கு வந்த பின்னர் மோகன் என மாற்றிக் கொண்டார்.

இவர் பல படங்களில் மைக்கை வைத்துக் கொண்டு பாடும் பாடல்கள் இடம் பெற்றதால் இவரை மைக் மோகன் என அழைத்து வந்தனர். இவருக்கு இளையராஜா இசையமைத்த பாடல்கள் அனைத்துமே ஹிட். 1980 ஆம் ஆண்டு வெளியான மூடுபனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் மோகன்.
இந்த படத்தை பாலு மகேந்திரா இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெஞ்ச்சை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, காற்றுக்கென்ன வேலி, விதி, கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் ஒரு ஆண்டுக்கு 10 படங்கள் வரை வெளியாகும். அந்த அளவுக்கு பிஸியாக இருந்தார். ரஜினி, கமல், விஜயகாந்த் என டாப் ஹீரோக்கள் மத்தியில் மோகன் அசைக்க முடியாத ஹீரோவாக உருவெடுத்தார். இவருடைய படங்களுக்கு 100 நாட்களுக்கு மேல் ஓடிய காலமும் உண்டு. இவரின் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இவருக்கு ஏதோ வியாதி இருப்பதாக புரளியை கிளப்பி விட்ட நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.
இந்த நிலையில் அவர் தனக்கு எந்த நோயும் இல்லை என்பதை சொல்லாமல் இத்தனை ஆண்டுகளாக ஆரோக்கியமாக இருந்து வருகிறார்கள். பலருக்கு உதவிகளையும் செய்து வருகிறார். 2008 ஆம் ஆண்டு வெளியான சுட்ட பழம் திரைப்படம் தோல்வி அடைந்தது. இதையடுத்து சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த மோகன் தற்போது 14 ஆண்டுகள் கழித்து ஹரா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அது போல் கோட் படத்திலும் விஜய்க்கு வில்லனாக மோகன் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் மோகன் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவரை நிறைய சேனல்கள் பேட்டி எடுக்க அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் அவர் ஒரு பேட்டியில் கூறுகையில் நான் மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், "நான் உங்கள் ரசிகை" என அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த பெண்ணுடன் அவருடைய மகனும் இருந்தாராம்.
மோகனுடன் அந்த பெண் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த மகன், "அம்மா அதை எடுத்து வெளியே காட்டுங்கள்" என்றார். உடனே அந்த பெண் தன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து காட்டினார். அதில் ஒரு லாக்கெட் இருந்தது. அதை திறந்து காட்டிய போது அதில் எனது புகைப்படம் இருந்தது.
இதை பார்த்த எனக்கு ஷாக் ஆகிவிட்டது. அப்போது அந்த பெண் ரசிகை மேலும் கூறுகையில், "சார் எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். அதனால்தான் உங்களுடைய லாக்கெட்டை வைத்திருந்தேன். திருமணமான புதிதில் "நான் உங்கள் ரசிகை" என என் கணவரிடம் கூறினேன். அவரும் "சரி அந்த லாக்கெட்டை கழுத்திலேயே போட்டுக் கொள்" என்றார். இதை நான் சாகும் வரை போட்டுக் கொண்டிருப்பேன்" என அந்த பெண் கூறியதும் எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. மேலும் எந்த கணவர்தான் இன்னொருத்தர் புகைப்படத்தை தாலியில் வைத்துக் கொள்ள சம்மதிப்பார். இப்படிப்பட்ட ரசிகர்களால்தான் நான் சினிமாவில் நிலைத்திருந்தேன் என மோகன் நெகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications