நடிகை ஜோதிகாவுக்கு ஜோடியான நடிகர் மிர்ச்சி செந்தில்.. புகைப்படத்தோடு சொன்ன மகிழ்ச்சி செய்தி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலின் முதல் பாகத்தில் சரவணனாக நடித்து பிரபலமடைந்த நடிகர் மிர்ச்சி செந்தில் தற்போது நடிகை ஜோதிகாவோடு தான் நடிப்பதாக புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
மிர்ச்சி செந்தில் சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் லேட்டஸ்ட் ஆக அவர் கொடுத்த அப்டேட்டுக்கு அதிகமான ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான மதுர சீரியலில் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாகி அதைத்தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக சரவணன் கேரக்டரில் ரசிகர்களின் மனதை பல வருடங்களாக கவர்ந்து வந்த மிர்ச்சி செந்தில் அதைத் தொடர்ந்து அந்த சீரியலில் அவரோடு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் செந்தில் நடித்து வந்தார். அதைத் தொடர்ந்து பெரிய அளவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தும் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் சின்னத்திரையை நோக்கி அடியெடுத்து வைத்தார். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் விஜய் டிவியில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு இந்த சீரியல் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது பாகமும் ஒளிபரப்பாகி அதுவும் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென்று அந்த சீரியல் நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஜோதிகாவோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது ஒரு பிஸ்கட் கம்பெனி விளம்பரத்தில் நானும் ஜோதிகாவும் ஜோடியாக நடிக்கிறோம் என்று அதில் கூறி இருக்கிறார். அத்தோடு சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த ஒரு சில புகைப்படங்களை மிர்ச்சி செந்தில் பகிர்ந்து இருக்கும் நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications